Periyava Golden Quotes-409


album1_38

ஆத்ம லாபத்துக்கு உதவாத விஷயம் என்பதால்தான் இதுகளைப் பற்றி (லௌகிக விஷயங்களை) நான் சொல்வதில்லை. உபதேசம் செய்கிற எவருமே சொல்வதில்லை. சொல்லாமலே அவனவனும் இவைகளைச் செய்து கொண்டுதானிருக்கிறான். லோகமெல்லாம் நன்றாயிருக்ககணும் என்று பிரார்த்திக்க வேண்டுமென்றுதான் யாரும் உபதேசிப்பார்களே தவிர, ‘நான் நன்றாயிருக்கணும்; என் மநுஷ்யாள் நன்றாயிருக்கணும்’ என்று பிரார்த்தித்துக் கொள்ளும்படிச் சொல்வதில்லையே! யாரும் சொல்லிக் கொடுக்காமல் அவனவனும் தானாகவே இப்படித் தன் நலத்தை, தன் குடும்ப நலத்தைப் பிரார்த்தித்தபடிதான் இருக்கிறான். அந்த நலம் ஆத்மாவைப் பொருத்ததாயிருந்தால் இப்படிப்பட்ட பிரார்த்தனை நியாயமானதுதான். லௌகிகமாகவும் ஜீவனத்துக்கு அவசியமான அளவுக்கு மட்டும் வேண்டிக்கொண்டால் தப்பில்லைதான். ஆனால் எல்லாரும் இந்த லௌகிக ‘நலம்’ என்பதையே ஆத்மாவுக்கு ஹானி உண்டாக்குகிற அளவுக்குப் பிரார்த்திக்கிறார்கள். பிரார்த்திப்பதோடு அதற்கான முயற்சிகளை ஓயாமல் பண்ணியபடி இருக்கிறார்கள். இதிலேயே ஓவராக ஈடுபட்டு பாசத்தினால் தர்மாதர்மங்களைக்கூட மறந்து, தப்பு வழியில் போயும் இம்மாதிரி லௌகிக அபிவிருத்தியிலேயேதான் அநேகமாக எல்லாரும் கண்ணாயிருக்கிறார்கள். இதனாலேயே பரோபகாரத்துக்குப் பொழுதோ, மனஸோ, த்ரவ்யமோ எதுவும் கொடுக்காதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனதால் இப்படிப்பட்டவர்களை ஸ்வய விஷயம், ஸ்வய குடும்ப விஷயம் இவற்றைக் குறைத்துக் கொண்டு ஸமூஹ க்ஷேமத்துக்கானவற்றைக் கவனிக்கும்படித் திருப்ப வேண்டியதுதான் எங்களைப் போன்றவர்களின் கடமையாயிருக்கிறது. ஆனதால், நான் மட்டுமில்லை, ஜனங்களை நல்ல வழியில் திருப்புவதற்குப் பிரயத்தனப்படுகிற பொறுப்பு கொண்டே எவருமே, “சொந்த விஷயங்களை கவனித்துக்கொள்; வீட்டுக் கார்யங்களை கவனித்துக்கொள்” என்று உபதேசம் பண்ணுவதில்லையென்பது மட்டுமில்லாமல், “சொந்த விஷயங்களையே கவனித்துக் கொண்டிருந்தால் போதாது. இப்படிப்பட்ட ஆசைகளை, தேவைகளைக் குறைத்துக்கொண்டு, அதனால் லௌகிக உழலலையும் குறைத்துக்கொண்டு, கொஞ்சமாவது ஆத்மாவை கவனித்துக் கொள்ளுங்கள்; அதற்கு வழியாக, ஒரு அங்கமாக ஸமூஹத்தை, லோகத்தை கவனித்துத் தொண்டு செய்யுங்கள்” – என்றே சொல்லும்படியிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

It is only because these actions (duties towards the self and the family) do not benefit the spiritual growth of an individual, I do not elaborate on them and nor do anyone who provides valuable advice to the people. Even without any specific directions to this effect, people continue to perform these duties. We should only guide the people to pray for the welfare of the society and the mankind and not for his own self and his near and dear. All individuals do pray for the welfare of their own selves and families. If these prayers are directed towards spiritual benefits, there can be nothing wrong. Even if these prayers are restricted to the need for the basic necessities of livelihood, there can be nothing wrong. But many individuals continue to pray for these material benefits at the cost of their spiritual well being and immerse themselves in continuous efforts to achieve the same. This mindless materialistic race results in individuals forgetting the virtues of charity and philanthropy and even resorting to wrong ways to reap more material benefits. They are reluctant to spend time or money towards philanthropy. It becomes the duty of persons like me to direct such persons towards the right path. Not only myself but anybody who is interested in properly guiding a person has to advise him to lessen his desires and the resultant meaningless race to fulfill the same and to direct the mind towards spiritual matters and take care of the society and the world at large as a part of this spiritual quest. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: