வருவாய் வருவாய் வந்தருள்வாய் – மறுபடியும் எழுந்தருள்வாய்!

Our “aasthana kavi” Saanu Puthran has penned another great guru stuthi on Mahaswami. Saraswathi has chosen only few people to be blessed with such skills and Mahaperiyava had chosen such people to write about Himself. Suresh is such a rare combo! Great work Suresh!!!

Chicago Periyava Vilvam

(Sri Sekar family from Indianapolis came home for darshan with a vilva kreedam made with a thick paper as a base for Periyava. Our sincere thanks to them for fulfilling the dream too quickly. The entire room is filled with fresh vilvam smell! So divine. You will see two padhukas – dark colored is Mahaperiyava’s and the other one is HH Pudhuperiyava’s.)

பெரியவா சரணம்.

ஐயா! ஏக அம்ப தயாநிதியே! மும்மூர்த்திவாசத் தலமுறையும் வேதவேந்தா! வா! ஓடி வா! ஓடோடி வந்து அருள்புரிய வா! காமபீடமுறை காமகோடி பீடம் அமர்ந்து கருணாகர மூர்த்தியென கலியுகம் காக்க மறுபடியும் ஓடோடி வா, ஐயனே! என மனமுருகத் தொடங்கியதாம். 

மனத்தினின்று உருகிவரும் உணர்வலைகட்கு எழுத்துவடிவம் கேட்டு எம்மொழியாள் செம்மொழித் தேமதுரமாம் தமிழ்தாயினிடத்திலே வார்த்தை வரம்கேட்கத் தொடங்கியதாம் மென்மனம். அதன் வெளிப்பாடாய் அமைந்த்துவே இந்த “குருவரவேற்பு ஆறுமணிக் கோவை”. சங்கரா! சதாசர்வ காலமும் நின்புகழை எழுதிடும் பாக்கியத்தை இப்பிறப்பு மட்டுமன்றி எப்பிறப்பிலும் எம்முள் இருக்கத் தா என வேண்டலொடு, மாலைதனை கோர்க்க ஆரம்பிக்கின்றேன்.

ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர…

குருவரவேற்பு ஆறுமணிக் கோவை:

முன்னிருந்து உய்யவொளி தந்தருளும் வித்தகனே!
பின்னிருந்தே காக்கும் முந்துவொளி மூலவனே!
கண்கண்ட காமகோடிக் கற்பகமே! அற்புதனே!
மண்ணுபுகழ் மா’தவமே மறுபடியும் எழுந்தருள்வாய்!

வாழ்வுயர வேதவொலி ஓங்குவழி விதித்தவனே!
வாழுவழி நெறிவிளங்க தர்மவழி வகுத்தவனே!
வாழ்நிலை ஒளிருவகை வரமருளிக் காப்பவனே!
வாழுவகை நிதியழகே மறுபடியும் எழுந்தருள்வாய்!

மங்காத புகழ்மணியே! மாதரசி மகத்துவமே!
மங்குநிலை களைந்திடவே மதியருளும் பூரணமே!
மங்களமு மதியொளியும் மண்டியெழில் பூத்திடவே
மங்களமா முனியெனவே மறுபடியும் எழுந்தருள்வாய்!

வாடிடுவோர் வாழவழி தருமநெறி அறமுணர்த்தி
கூடிடுவோர் குணமதிலே குறைநீக்கி நிறைபுகுத்தி
ஓடிவந்து காத்தருளும் கலியுகத்து பெருமிறையே!
நாடிவந்தேன் நாயகமே மறுபடியும் எழுந்தருள்வாய்!

மேவுரு ஞானவொளி மருகோனே! மறையொளியே!
மூவரு மாகவொளி கூட்டியருட் கோ’நிதியே
யாவரு யாவுமாகி யெங்கும்நிறை பூபதியே!
தேயுரு நிலையகற்ற மறுபடியும் எழுந்தருள்வாய்!

அருட்சுழி ஆண்டவனை அகமுணர்ந்து துதிக்கின்றேன்!
அருட்கழி ஆண்டவனாம் ஆறுமுகம் தொழுகின்றேன்!
அருட்பதி ஆண்டருளும் காமபீடம் போற்றுகின்றேன்!
அருட்குரு சங்கரனே மறுபடியும் எழுந்தருள்வாய்!

பெரியவா சரணம்! பெரியவா சரணம்! ஸ்ரீமஹாபெரியவா அபயம்!

அன்பான குருவடி தொழும் திருவடியார் உறவுகளே! தமிழிலக்கணம் அறியாதெனினும் தமிழறிய ஆவலுடை அடியவனின் மென்மனத்திலே அனுதினமும் உண்டாகும் உணர்வுகளின் வெளிப்பாட்டை அறிந்தவகையிலே தமிழன்னை தாள்பணிந்து சொற்கள் கோர்த்த மாலைகளை அனுதினமும் ஐயனிடம் ஆயிரமாயிரம் பக்தர்களுடனாக ஒருசேர நின்று சகல ஜீவர்களுக்காகவும் பிரார்த்தித்துச் சமர்ப்பிக்கின்றேன். அடியேன் சிறியேனின் மாலைகளிலே சிறுகுறையும் வாராது ஐயனின் கருணாகடாக்ஷம் காக்கட்டும்! அவ்வண்ணமே அகிலத்தோர் அனைவருக்கும் அவர்களுடைய குறைகளெல்லாம் பொறுத்துக் கொள்ளப்பட்டு, நிவர்த்திக்கப்பட்டு, அவர்களுடைய தர்மமான பிரார்த்தனைகள் ஒவ்வொன்றும் குறித்த காலத்துள் நிறைவேறவும் ஆத்மார்த்தமாக பிரார்த்திக்கின்றேன்.

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.

 



Categories: Bookshelf

Tags:

9 replies

  1. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  2. ராதே க்ருஷ்ணா
    பெரியவா நவரத்தின மாலை சூப்பர்
    ராதே க்ருஷ்ணா

  3. dear sir ,thangaludaiya arumaiyana kavidhaigalukku adiyenin manamuvandha parattukkal.thangal vaarthai prayogaththil pravagaththil,MHAPERIVA KANNMUNNE JOTHIYAY MILIRGINDRAR.adiyenai meymarakka seythuvitteer.nandri. thangalin SATHYAMANA VARTHTHAGALIL vendiyapadi AVAR bakthrgalukku NALLADHE NADAKKUM.THANGALIN ippani menmelum sirakka vazhthukkal.MAHAPERIVA TIRUVADIGALE CHARANAM.

  4. If possible can you please provide samskritam links for Sri Siddheshwarashtakam”?
    HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA

  5. kalamegam pol Sanuputhiran kavitthaikal there is no stopping for these poems Fully blessed by Saraswathi May Sanuputhran’s kavithaikal enter each and every one who go through this poems May Maha Periyava bless Sanuputhran

    • Shankara. Sarvam Sri Chandrashekaram. Avyaja Karunaiyinaale avar intha ‘Hruthaya Deepa’ngalai etrukkondu ellorukkum anugraham pannanumnu praarthikkarean. Periyava Charanam

  6. Sri KAMAKSHI KARUNA KADAKSHA SOWMYAM SRI ACHARYA ROOPENA ANUGRAHA PRAVAHAN’Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam.

Leave a Reply to kahanamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading