Posts tagged ‘Upadesam’

May 1, 2012

காயத்ரீம் சந்தஸாம் மாதா

காயத்ரீ என்றால், “எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது”என்பது அர்த்தம்.

காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே !

கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை;பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது,

காயத்ரீம் சந்தஸாம் மாதா

என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு ‘த்ரிபதா’ காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது. இந்த ஒவ்வொரு பாதமும் ஒவ்வொரு வேதத்தின் ஸாரம். அதாவது, ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம். அதர்வத்துக்குத் தனி காயத்ரீ இருக்கிறது. இரண்டாவது உபநயனம் செய்து கொண்டே அதை உபதேசம் பெற வேண்டும்.

த்ரிபம் ஏவது வேதேப்ய:பாதம் பாதமதூதுஹம்

(மநுஸ்மிருதி)

காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?

சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்.

Tags:
December 13, 2011

ஞானம் to ஆனந்தம்

நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒருநாள் நாம் ஆசைப்படும் வஸ்துகள் நம்மைவிட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை  ராஜிநாமா செய்துவிட்டால், அத்ததனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனையாலும் நம்மைக் கட்டிப்போட்டுக் கொண்டு துக்கப்படுகிறோம். ஆசைகளைக் குறைக்கக் குறைக்கத் துக்க ஹேதுவும் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்த்தைப் படவேண்டாம். அப்படியே பரமாத்மாவில் கரைந்த ஆனந்தமாகிவிடலாம்.

மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமை அடைகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்துவிடுகிறான்? நாயும், நரியும், கரப்பான் பூச்சியும் கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாகின்றன. பொதுவாக மனிதனும் இதற்கு மேல் ஏதும் செய்வதாகத் தெரியவில்லை. அப்பொழுது அவனுடைய விசேஷ ஞானத்தில் பெருமைப் பட என்ன இருக்கிறது. எல்லாவற்றிலும் பெரிய ஞானம் நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். மனிதன் இப்படிப் பட்ட நிலைத்த ஞானத்தைப் பெறுகின்றானா? யோசித்துப் பார்த்தால், பரம தாத்பரியமாகத் தெரிவது, இந்த ‘ஞானம்’,

’ஆனந்தம்’.  ‘நாம்’. என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞானமயமான ஆனந்தம் என்று கண்டுகொள்வோம்.

வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கின்றது. நமது உண்மை சொரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கூட ‘நம்முடையது’ என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும் போதுதான், அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்த சம்பந்தம் போய்விட்டால், ஆனந்தம் போய்விடுகிறது.

உதாரணம் சொல்கிறேன்’

ஒருவருக்குகச்சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் முதலில், வருஷத்துக்கு வருஷம் விளைச்சல் அதிகமாவதாக வைத்துக்கொள்ளுங்கள். ‘இந்த வயல் என்னுடையது’ என்பதால் விளைச்சல் அதிகமாகும் போதெல்லாம் அவருக்கு மனம் குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை வேறு ஒருவருக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார்.  மறுபடி அடுத்த வருஷம், அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும் போது இவர் மனம் குளிரவா செய்கிறது? “அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரி பொட்டலாக இருந்தது. இப்போது எவனோ ஒருத்தனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதே!” என்று வயிற்றெரிச்சல் தான் உண்டாகிறது. ‘எனது’ என்ற சம்பந்தம் இருந்தமட்டும்தான் அதிக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.

என்னிடம் பல பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து, ”அவர்களுக்குச் சித்த பிரமை இருக்கிறது. அது நிவிருத்தியாகவேண்டும்” என்று கேட்டுக் கொள்வார்கள். இதற்கு நேர் மாறாக ஒரு தகப்பனார் நடந்து கொண்டார். அவர் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டவர். இளையாளுக்கு, மூத்தாள் பிள்ளையோடு ஒத்து வரவில்லை. ஏகச்சண்டை போட்டுக் குடும்பம் பிரிந்தது. இவர் இளையாள் தரப்பிலேயே இருந்தார். பிள்ளையைக் கைவிட்டுவிட்டார். அவர் ஒரு நாள் என்னிடம் வந்து, ’மூத்தாள் பிள்ளை இளையாளுக்கு பில்லி சூனியம் வைத்தான். நல்ல வேளையாக அது அவனையே திருப்பி அடித்துவிட்டது.’ என்றார். எல்லாத் தகப்பனார்களும் பிள்ளைக்குச் சித்தப் பிரமை ஏற்படும் போது கவலைப் படுகின்றார்கள் என்றால், இவரோ அதிலேயே சந்தோஷப்படுகிறார். ஏன்? இவருக்கு அவனிடம் ‘நம்முடையவன்’ என்ற சம்பந்தம் போய்விட்டது. இளையாளிடம் மட்டும் ‘நம்முடையவள்’ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் தான் அவளுக்கு ஹானி யில்லை யென்றால் இவர் ஆனந்தப்படுகிறார்.

மாயைக்கு ஆளான ‘நான்’ என்பதன் சம்பந்தத்துக்கே இத்தனை ஆனந்தம் இருக்கின்றதென்றால், எதிலும் சம்பந்தப் படாமல் பூரண ஞானமாக இருக்கின்ற அந்த வெறும் ‘நான்’ எத்தனை ஆனந்தமயமாயிருக்கும்!

வெல்லம் போட்டால் பாகற்காய்க் கறியிலும் சிறிது தித்திப்பு இருப்பதை உணர்கிறோம். வெல்லத்தின் சம்பந்தத்துக்கே தித்திப்பு இருப்பதால் அசல் வெல்லம் தித்திப்பு மட்டுமே என்பதில் சந்தேகம் என்ன! கசப்பான துக்க உலகத்தின் ‘நான்’ என்பதில் மாயக் கிரணங்கள் சம்பந்தப்படுகிற போதே அதில் தித்திப்பு ஆனந்தத்தைப் பெறுகிறோம் என்றால், அந்த நான் மட்டுமே ஸ்வச்சமாஅக நிற்கிறபோது, எத்தனை தித்திப்பாக ஆனந்தமயமாக இருக்கவேண்டும்?

சிறிய ஓட்டைகள் கொண்ட சட்டியால் ஒரு தீபத்தை மூடிவைத்தால், துவாரங்கள் வழியாக மெல்லிய ஒளிக் கிரணங்கள் வெளிவரும். மாயையால் மூடப்பட்ட ஆத்ம தீபத்திலும் இந்திரிய துவாரங்கள் வழியாகக் கொஞ்சம் கொஞ்சம் ஆனந்த ஒளியைப்பார்க்கிறோம். மாயச் சட்டியை உடைத்துவிட்டால் ஆனந்த ஜோதிர்மயமாகவே ஆகிவிடலாம். துவாரங்களின் அளவைப் பொருத்துப் பலவேறு அளவுகளில், ஒளி வெளி வந்தாலும் உள்ளேயிருப்பது ஏக ஜோதிதான். நாம் மாயச் சட்டியை உடைத்துவிட்டால், உலகத்தில் பார்க்கும் வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து எலாம் ஒன்றான ஆனந்த ரூபமாகவே தெரியும்.

மாயையை எப்படி உடைப்பது என்றால் ஆசசைகளை அடக்குவதுதன். வழி. மனம் இருக்கும் வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கிவிட வேண்டும்.மனம் அடங்கி விட்டால் ‘மரண நிலைமையில் இருப்பது போல் ஒரு சக்தியுமின்றி ஜடம் மாதிரி ஆவோம்’ என்று எண்ணக் கூடாது. மாறாக, இதுதான் சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை. சாதாரணமாக ஏதாவது ஒரு அங்கத்தில் ஊனம் உளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீக்ஷண்யம் இருக்கும்.. பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவது போல், ஒரு அங்கத்தில் இருப்பதே இன்னொன்றில் தீக்ஷண்யத்தைத் தருகிறது . ஆத்ம சக்தியைப் பலவாறாகச் சிதறச் செய்யும் எல்லா இந்திரியங்களையும் அடைத்துக் கொண்டுவிட்டால், அப்போது சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக, ஆனந்தமாகக் கூடி நிற்கும். மிகுந்த சக்தியுடன் உலகுக்கு நல்லது செய்யலாம்.

ஆத்ம ஞானம் பெற்ற ரிஷிகளின் சக்தியே இதற்கு திருஷ்டாந்தம். சகல லோகங்களுக்கும், சகல காலங்களுக்கும் சென்று அவர்கள் விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். நம் காதுக்குக் கேட்காத சப்தங்களை ஆகாயத்தில் கேட்டு, வேத மந்திரங்களைக் கொடுத்தார்கள். “எப்படி ஆசையை அடக்குவது? எப்படி மனத்தை நிறுத்துவது? எப்படி ஆனந்தத்தை அடைவது ” என்று” கேட்கிறவர்கள்,அந்த வேதங்கள் சொன்னபடி நடந்தாலே போதும்; முடிவில் பேரானந்தம் அடையலாம். இதற்குப் பரமேசுவரன் அநுக்கிரஹம் செய்வாராக. 

Tags:
December 4, 2011

Cycle Pedal by Periyava – MUST READ

Thanks to Professor Sridhar for sending me this….

This article was written in 1947 that reflects the trend in which how vedic traditions were being forgotten in those days itself. If Periyava were to comment on today’s condition, not sure how He would…

I am too young to comment this  in this forum as there are several senior devotees – yet, let me say this hoping that this will be taken in the right sense….As devotees of Paramacharya, it is not only sufficient to read and mesmerized by His thapas and anugrahas and all miracles etc, we should attempt to follow His advises in whatever way possible. We dont have to target being a gnani etc…..Simplest thing to follow is doing our nithyakarmas (sandhyavandhanam). All our Periyavas have talked so many hours highlighting the importance and power of doing this.

Tags:
October 5, 2011

Advice to jyothishtas

ஜோஸ்யர் ஒருத்தர் பெரியவாளை தரிசிக்க வந்தார். “பெரியகுடும்பம்…….வருமானம் போறலை,
ஜோஸ்யம் சொல்லறதிலே வரும்படிொம்பகொறைச்சல்..ரொம்ப கஷ்டம்..” என்று முறையிட்டார்.
“நீ………. ஒங்கஅப்பா இருந்த பூர்விக கிருஹத்லதானே இருக்கே?”"இல்லே….அதுல அண்ணா இருக்கான். அதுக்கு மேற்கு பக்கம் ஒரு ஆத்துல இருக்கேன்”"நீஅங்க இருக்க வேணாம். பூர்விக க்ருஹத்துலேயே கிழக்கு பக்கத்துல பழையமாட்டுகொட்டாய் இருக்கோன்னோ? அந்த எடத்ல ஒரு குடிசை போட்டுண்டு இரு.பரம்பரையா அம்பாளை பூஜை பண்ணின குடும்பம். மாட்டுக் கொட்டகைல
இருங்கோ”"..அதோட, இன்னொண்ணும் கேளு. எல்லா க்ரஹங்களையும் நன்னா. திட்டறயோன்னோ ! ….உங்க ஜாதகத்ல குரு நீசன்,சனி பாபி,புதன் வக்கிரம்!…இப்பிடியெல்லாம் வாயால சொல்லக் கூடாது.
குரு…ங்கறதுபெரிய கிரகம். தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம்….அவரைப் போய்நீசன், பாபி,வக்கிரம்..ன்னெல்லாம் திட்டக் கூடாது. சனி, சூர்யனோட புத்திரன். ஈஸ்வரபட்டம் வாங்கிண்டவர். அவரைப் போய் பாபிங்கறே!கிரகங்கள் சரியானஎடத்ல இல்லை…..கால பலன் சரியில்லைன்னு சொன்னா போறுமே!…….பொண்பிள்ளை ஜாதக பொருத்தம் பாக்க வரவா கிட்டே “பொருத்தமில்லை” ன்னு நிர்தாட்சண்யமா சொல்ல வேணாமே! பொண்ணுக்கு விவாக காலம் வர நாளாகும்,பையனுக்கு புத்திர பாக்கியம் கேள்விக் குறிங்கற மாதிரி சொல்லலாம்.முப்பது வயசாகியும் நெறைய பொண்கள் கல்யாணம் ஆகாம இருக்கா.அப்பிடிப்பட்டவாளுக்கு வரன், ஜாதகபொருத்தம் பாக்க வந்தா, முடிஞ்சவரைநிராகரிக்காம பதில் சொல்லணும்.கல்யாண விஷயத்ல, பொண்,பையன் ஜாதகப் பொருத்தத்துக்கு ஜாஸ்தி importance குடுக்காம,குலம்,கோத்ரம், மனப் பொருத்தம் இருந்தா போறும். பழங்காலத்ல ஜாதகப்பொருத்தம் அவ்வளவு முக்யமா இருந்ததில்லை”.ஜோஸ்யர் திருப்தியோடு “இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்” என்று சொல்லிபிரசாதம் வாங்கிக் கொண்டு போனார்.

Tags:
May 20, 2011

எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு

நம்மிடம் ஆயிரம் ரூபாய் சில்லரையாக இருக்கிறது. அது சுமப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மலையைக் கடந்து பக்கத்து நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது அந்தப்பணம், ரூபாய் நோட்டாக இருந்தால் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்குமே என எண்ணுகிறோம். ஆனால், அந்த நோட்டு, மலைக்கு அடுத்துள்ள நாட்டில் செல்லுபடியாவதாக இருக்க வேண்டும். நாமும் எங்கு போனாலும் செல்லுபடியாகும் நோட்டாக இருக்க வேண்டும். அதாவது, தனக்கும் பிறருக்கும் உபயோகப்படக் கூடிய செயல்களையே செய்ய வேண்டும்.
நமது ஊரில் செல்லுபடியாகும் பணம் ரஷ்யாவில் செல்லாது. அனைத்து ஊருக்கும் ஒரே ராஜா இருந்தால் அவனுடைய முத்திரையுள்ள பணம் எங்கும் செல்லுபடியாகும். இந்தப் பதினான்கு உலகங்களுக்கும் ஒரு ராஜா இருக்கிறான். அவன் தான் பரமேஸ்வரன். அவனுடைய சகல ராஜ்யங்களிலும் செல்லும் நோட்டாக சூதர்மம்’ இருக்கிறது. ஆகவே, தர்மம் செய்யுங்கள்.

அடுப்பில் தீ மூட்டியிருக்கிறோம். அப்போது மழை பொழிகிறது. நெருப்பு அணைந்துவிடும் போலிருக்கிறது. அந்த சூழலில் எதுவும் செய்யாமல் இருந்துவிட மாட்டோம். இருக்கிற தீப்பொறிகளை விசிறி, சிரமப்பட்டு, மறுபடியும் நெருப்பு பற்றிவிட முயற்சிப்போம். அதேபோல, நம் முன்னோர்களிடம் இருக்கும் ஆசாரத்தையும், தர்மத்தையும் எந்த சூழ்நிலையிலும் அணைந்துவிடாமல் பாதுகாத்து, எல்லாரிடத்திலும் பரவும்படி செய்ய வேண்டும்.

Tags:
March 1, 2011

Periyava on the principles of Sacrifice

Tags:
February 20, 2011

Amazing Mantra Upadesam by Periyava

I will translate this to English in the next day or two… I am into lot of things right now….

ஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்!

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.
ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே  தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளார்.
ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து. இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம்: மாலை ஐந்து மணி. முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலிருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.
அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர். தரிசனத்தின்போது  ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவு  பெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது! பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.  அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள். இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’:மந்திரோபதேசம் பெற்றோம்.  ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள்.  மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள்.  ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது!‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம்.  நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்றுபெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!
எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன்! சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.
நன்றி – கல்கி

Thanks:: http://visrug.blogspot.com/2011/02/blog-post_16.html

Tags:
February 17, 2011

எரிச்சுக்கட்டி ஸ்வாமி

“ஸந்த்யா வந்தனத்தின் மஹிமையைப் பற்றி ஒருகதை இருக்கிறது. இக்கதை சுமார் 500, 600வருஷங்களுக்கு முன் நடந்ததாக 

ஊகிக்க முடிகிறது.சென்னை கவர்மெண்டைச் சேர்ந்த ஆர்க்கியலாஜிகல்டிபார்ட்மெண்டார் பிரசுரித்திருக்கும் ரிகார்டில் இந்தக்

கதைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில் ஒருவர்,எள்ளினால் ஒரு காலபுருஷன் உருவத்தைச் செய்து,அதனுள் ஏராளமான

ஐவர்யத்தை வைத்து, தானம்செய்யப் போவதாக விளம்பரம் செய்தார். அந்தஉருவத்திற்குள் இருக்கும் பொருளைக் கருதி, அநேகம்

பேர் தானம் வாங்குவதற்காக வந்தார்கள். அந்தகாலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளுக்குத் தக்கபதில் சொல்ல முடியாமல்,

தானம் வாங்கவந்தவர்களெல்லாம் மரணமுற்றார்கள். கன்னடியர்என்ற ஒரு பிராம்மணர் இருந்தார். ஸந்த்யா வந்தனகர்மாவில்

வெகு ச்ரத்தை உள்ளவர். சாஸ்திரங்கள்முதலானவற்றில் அவருக்கு அப்யாஸம் கிடையாது.அந்தத் தானத்தை வாங்க அவர் வந்தார்.

அப்போது அந்த காலபுருஷனின் உருவம் மூன்றுவிரல்களைக் காட்டியது. முடியாது என்றார். பிறகுஇரண்டு விரல்களைக் காட்டியது.

அதற்கும் முடியாதுஎன்றார். கடைசியாக ஒரு விரலைக் காட்டியது, சரிஎன்றார். தான் ஒன்றும் செய்ய முடியாததைக் கண்டு,கால

புருஷன் அந்த உருவத்தினின்றும் மறைந்தான். அந்தத் தானத்தில் அடங்கிய சகல ஐசுவர்யங்களையும்அந்தப் பிராமணர் வாங்கிக்

கொண்டார். மூன்றுவிரல்கள், மூன்று வேளைகளில் செய்யப்படும்ஸந்த்யா வந்தனத்தின் பலன். இரண்டு விரல்கள்,காலை மாலை

இருவேளைகளின் ஸந்த்யாவந்தனபலன். ஒருவிரல், ஒருவேளை, அதாவதுமாத்யாந்நிகத்தின் பலன் என்பது காலபுருஷன்

உருவம்கேட்ட கேள்விகளின் அர்த்தம்.

ஸந்த்யா வந்தனத்தின் ஒருவேளையின் பலனைக்கொடுத்ததன் மூலமும், ஐசுவர்யத்தைத் தானம்வாங்கியதன் மூலமும்

பிராம்மணருக்குப் பாபம்சம்பவித்துவிட்டது. அந்தப் பாபத்தைப்போக்கிக்கொள்ள வேண்டிய வழியைத்தெரிந்துகொள்ள அகத்திய

முனிவர் தவம்செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படும்மலைச்சாரலுக்குச் சென்றார். போகும் முன்,தம்மிடமிருந்த தனத்தைப்

பாது காக்கும்படி, கோவில்பூஜை செய்து வந்த ஒரு குருக்களிடம் ஒப்படைத்தார்.எங்கே சென்றாலும் அகத்திய முனிவர்

காணப்படவில்லை. முனிவரைக் காணாமையால்,அவர் ஏக்கமுற்றிருக்கும் சமயத்தில், அகத்தியமுனிவர் ஓர் கிழ வடிவத்துடன்

பிராம்மணர் முன்தோன்றினார். அவரிடத்தில், பிராமணர் இக்கதையைச்சொன்னார். அந்தக் கிழவர், நீ போகின்ற வழியில் ஒரு

பசுமாடு உமக்குத் தென்படும். அந்த இடத்திலிருந்து நீஒரு கால்வாய் வெட்ட ஆரம்பிக்க வேண்டும். பசுமாடுஎவ்வளவு தூரம் சென்று

நிற்கின்றதோ அவ்வளவுதூரத்திற்குக் கால்வாய் வெட்ட வேண்டும்.

நடுவில் பசுமாடு எந்த இடங்களில் சாணி போட்டுமூத்திரம் பெய்கிறதோ அந்த அந்த இடங்களில்,சாணிபோட்ட இடத்தில் மடை

அமைக்கவும், மூத்திரம்பெய்யும் இடத்தில் வாய்க்கால் வெட்ட வேண்டும்.இவ்விதம் செய்தால் உமக்கு ஏற்பட்டிருக்கும் பாபம்

போய்விடும் என்று கிழவர் சொன்னார். கன்னடியர்அவ்விதமே செய்யத் தீர்மானித்துக் கொண்டு,திரவியத்தைத் திரும்ப வாங்குவதற்காக

குருக்களிடம்சென்றார்.

குருக்களுக்குப் பிராமணர் கொடுத்த தனத்தின்மீதுமோகம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் காலத்து பவுன் இளம்துவரம் பருப்பை

ஒத்திருக்குமாதலால், குருக்கள்பிராமணரிடம் துவரம் பருப்புகளைக் கொடுத்து, “நீர்கொடுத்த திரவியம் இதுதான், எடுத்துக்

கொள்ளும்”என்றார். குருக்களின் வஞ்சகச் செயலைஅறிந்துகொண்ட பிராமணர், “நான் கொடுத்ததுஇதுவல்ல, நான்

கொடுத்ததைக் கொடுங்கள்” என்றுமிகவும் பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார். எந்தப்பயனும் ஏற்படவில்லை. ஆகவே,

ராஜாவிடம் சென்றுமுறையிட்டுக்கொண்டார். குருக்களும்தருவிக்கப்பட்டார். ஆனால் குருக்கள் குற்றத்தைஒப்புக்கொள்ளவில்லை.

ஆகவே குருக்கள் பூஜைசெய்யும் லிங்கத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம்செய்தால் நான் ஒப்புக்கொள்கிறேன் என்று பிராமணர்

கூறினார். அவ்விதம் செய்வதாகக் குருக்களும்சம்மதித்துவிட்டார்.

குருக்கள் ஆபிசாரப் பிரயோகத்தில் தேர்ந்தவரானதால்,லிங்கத்திலுள்ள ஸ்வாமியைப் பக்கத்திலுள்ள ஒருமரத்தில் ஆகர்ஷனம்

செய்துவிட்டார். இதை ஸ்வாமி,பிராமணரின் சொப்பனத்தில் தோன்றி, நடந்ததைச்சொல்லிவிட்டார். பிராமணர் மறுபடியும் ராஜாவிடம்

சென்று “குருக்கள் மரத்தைக் கட்டிக்கொண்டுபிராமணர் செய்யும்படிச் செய்ய வேணுமாகக்கேட்டுக்கொண்டார்”. குருக்கள் மறுப்பளித்தார்.

ராஜாவிடவில்லை. மரத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம்செய்யுமாறு ஆணையிட்டார் ராஜா. குருக்கள் மரத்தைக்கட்டிக்கொண்டு

பிரமாணம் செய்தார். உடல்எரிந்துபோய்விட்டது.

‘எரிச்சுக்கட்டி ஸ்வாமி’ என்பது அந்த ஆலயமூர்த்தியின்பெயர். திருநெல்வேலி ஜில்லாவில் அந்த ஆலயம்இருக்கிறது.

பிறகு, பிராமணர் தம் தனத்தைஎடுத்துக்கொண்டு கிழவர் சொல்லியபடி பசுமாட்டைக்கண்டு கால்வாய் வெட்டினார்.

‘கன்னடியன் கால்வாய்’ என்பது அதன் பெயர்.திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கின்றது. அந்தக்கால்வாயின் பிரதேசங்கள்

இன்றைக்கும்செழித்திருக்கின்றன. இந்தக் கதையினால் ஸந்த்யாவந்தனத்தின் பெருமை நன்கு விளங்குகிறது.

எனவே ஸந்த்யா வந்தனம் ஒரு கடமை. அதுசெய்வதால் உலக க்ஷேமம் ஏற்படுகின்றது.ச்ரத்தையுடன் செய்தால்

மோக்ஷம் லபிக்கின்றதுஎன்பதைத் தெரிந்துகொண்டு, நமது கடமைகளில்ஒன்றாகச் செய்து வரவேண்டும் என்று உங்கள்எல்லோரிடமும் தெரிவிக்கின்றேன்” என்று ஸ்ரீபெரியவாள் கூறினார்கள்

Tags:
October 22, 2010

Guruprasadam and Sahasra Gayathri

 

மகா பெரியவாளுடன் பல இடங்களுக்கும் போய் வந்திருக்கிறார் பட்டாபி சார். பெரியவருக்கு ஆசை ஆசையாகப் பணிவிடைகள் செய்திருக்கிறார். அது காஞ்சி மடத்திலாக இருக்கும்; அல்லது, யாத்திரை போன இடத்திலாக இருக்கும்.

”பெரியவாளோட குரு மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை ஷஹாபாத் நகரில், நதிக்கரையில் நடந்தது. அந்த ஆராதனையை குரு ஆராதனைன்னு சொல்லுவா. அந்த நதியிலே தான் அப்பெல்லாம் ரெண்டு வேளையும் ஸ்நானம் பண்ணுவா பெரியவா.

மேட்டூர் கெமிக்கல் ரமணின்னு ஒருத்தர். இன்ஜினீயர் வைத்திய நாதய்யர் பேரன். அவரோடு நிறைய பம்பாய்க்காராளும் அப்போ அங்கே வருவா; வேஷ்டி, துண்டு, பழங்கள் எல்லாம் வாங்கிண்டு வருவா.

பெரியவா எங்கே இருந்தாலும், அங்கே இந்த குரு ஆராதனை கோலாகலமாக நடக்கும். அப்படி நடக்கிறதுக்குக் காரணம், அதுக்கெல்லாம் இன்சார்ஜ் மாதிரி இருந்த மேட்டூர் ராஜகோபால்தான். ஒரு குறையும் இல்லாமல், ஆராதனை சம்பிரதாயப்படி நடக்க சகல ஏற்பாடுகளையும் அவர் செய்து கொடுத்துடுவார். அவர் இப்போ கோவிந்தபுரத்துல, மகா பெரியவாகிட்டே சந்நியாசம் வாங்கிண்டு, அங்கேயே இருந்துண்டிருக்கார்.

குரு ஆராதனைன்னா நிறைய வேலைகள் இருக்குமில்லியா? தட்சணை, வேஷ்டி எல்லாம் எடுத்துக் கொடுக்க, ராஜகோபாலுக்கு நான் ஒத்தாசை பண்ணுவேன்.

ஆராதனை முடிஞ்சப்புறம், சாயங்காலம் அனுஷ்டானம் பண்ணுவா பெரியவா. அது ஆனவுடனே, ராஜகோபாலைக் கூப்பிட்டா. ”ஒரு ஜோடி வேஷ்டியும், 101 பணமும் எடுத்துண்டு வா’ன்னார் அவர்கிட்டே.

அவர் எடுத்துண்டு வந்ததும், அதை வாங்கி, ”இது குருவோட பிரசாதம். நீ என்னிக்கும் க்ஷேமமா இருப்பே!” என்று எனக்கு ஆசீர்வாதம் பண்ணிக் கொடுத்தார்.

சந்தோஷத்துல எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலே! குருவோட பிரசாதம்கிறது எத்தனைப் பாக்கியம்! அதைப் பெரியவா, தாமாகவே என்னைக் கூப்பிட்டுக் கௌரவிக்கிற மாதிரி அல்லவா கொடுத்திருக்கார்!

வஸ்திரத்துக்கு மட்டுமில்லே, எதுக்குமே நான் இன்னியவரைக்கும் கஷ்டப்பட்டது இல்லே. பெரியவா அருளால எனக்கு வேண்டியது எல்லாமே கிடைச்சிண்டிருக்கு!

‘அடியார்க்கும் அடியார்க்கும் அடியவன் நான்’னு என்னைச் சொல்லிப்பேன். அப்படித்தான் பெரியவாகிட்டே மடத்துலே இருக்கிற போதும் சரி, வெளியிலே யாத்திரை போறபோதும் சரி… நான் நடந்துண்டிருக்கேன்.

‘தடுத்தாட்கொள்வது’ன்னு ஒரு வார்த்தைப் பிரயோகம் இருக்கு. பகவான், பக்தனைத் தடுத்தாட்கொள்வார்; குரு, சிஷ்யனைத் தடுத்தாட் கொள்வார். அது மாதிரி பிரபுவான பெரியவா, என்னைத் தடுத்தாட் கொண்டார்; என்கிட்டே விளையாடினார்; லீலை பண்ணினார்னுதான் சொல்லுவேன். இப்போகூட, பெரியவா என் தலையை அவரோட தண்டத்தால தொட்டு, ஆசீர்வாதம் பண்ற மாதிரி தோண்றது.

ரிஷிகேசத்துல, கங்கையிலே ஸ்நானம் பண்ணிட்டு, தினமும் சஹஸ்ர (ஆயிரம்) காயத்ரி பண்ணுவேன். ஆனா, மனசை ஒருநிலைப்படுத்த முடியாது. ஏன்னா, கங்கைக்குன்னு ஒரு வீர்யம் இருக்கு. அது மனசைத் தன்னோட வசத்துல இழுக்கும்.

”நீ செத்துப்போற வரைக்கும் காயத்ரியையும், கங்கா சஹஸ்ர காயத்ரியையும் விடாதே!”ன்னு என்கிட்டே ஒருமுறை சொன்னா பெரியவா. அதை இன்னிய வரைக்கும் விடாம காப்பாத்திண்டு வரேன். அதுக்கும் ஒரு சக்தி இருக்கில்லையா? அது என்னைக் காப்பாத்திண்டு வரது.”

September 20, 2010

உபதேசத்தால் ஜனங்களை மாற்ற முடியுமா ! !

உபந்நியாசம் பண்ணுகிறோம். இன்னும் பல தினுசுகளில் தத்துவங்களை, தர்மங்களைப் பிரசாரம் பண்ணுகிறோம். ஆனால் இவற்றாலேல்லாம் தற்காலிகமான ஓர் உற்சாகம் தான் ஏற்படுமே ஒழிய, ஸ்திரமான மாறுபாடு நடக்காது என்பதுதான் என் அபிப்பிராயம். உபந்நியாசத்தினாலே ஏதோ கொஞ்சம் மாறுதல் சில ஜனங்களின் மனசில் ஏற்பட்டிருந்தால், அதுகூடப் போகப் போகத் தேய்ந்துதான் போகலாமேயொழிய வளருவதற்கில்லை.

வெறும் உபந்நியாசம் என்று வைத்து கொண்டால், உபந்நியாசம் முடிந்தவுடன், சாஸ்திர வழியில் அது உண்டாக்கின ஊக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக முடிந்துவிடும். ஆகையினாலே, உபந்நியாசம் பண்ணி உலகத்தை மாற்றி விடலாம் என்று நான் எதிர்பார்த்திருந்தால் அது தப்பு. இதுவரைக்கும் இந்த உபந்யாசங்களால் எதாவது துளி உங்களுக்கு என்னாலானது கூட, போகப் போகப் பிசுபிசுவென்று போய் விடுமோ என்கிற ஸ்திதி.

நல்லதற்கு இல்லாமல் இப்போது லோகத்தில் பல பழக்கங்கள் வந்துவிட்டன. தர்மத்துக்கு மாறுதலாக கெடுதலாக, அநேக சமாச்சாரங்கள் நமது தேசத்து ஜனங்களிடம் வந்து சேர்ந்து விட்டன. இந்த பழக்கங்களை மாற்றினால்தான் அவர்களுக்கே நல்லது. இதெல்லாம் வாஸ்தவம். ஆனால் எப்படி மாற்றுவது ? இந்த காரியம் ஒருநாளும் உபந்நியாசத்தினால் ஆகாது. பின், எதனால் ஆகும் ? ஆத்மா சக்தியினால்தான் ஆகும்.

சரி, அது என்ன சக்தி ? அது எப்படி வேலை செய்யும் ? ஏதாவது மந்திரம் போட்டு மனசை மாற்றுகிற காரியமா ? வசியம் பண்ணுவதா ? இதெல்லாமில்லை. வேறு என்ன என்றால், இதுவரையில் லோகத்தில் வந்த பெரியவர்களைப் பார்க்கலாம் – மத ஸ்தாபகர்களைத்தான் சொல்லுகிறேன் – உலகத்தில் ஒரு பகுதியில் அநேக மநுஷ்யர்களின் வாழ்க்கை முறையையே மாற்றி வேறு தினுசாகக் கொண்டு வந்த அந்தப் பெரியவர்கள் இதை எப்படிச் செய்தார்கள் ?

தங்களுடைய பழக்கங்களெல்லாம் நல்லபடி ஆக வேண்டும். அவர்கள் எல்லாம் நல்ல க்ஷேமத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குச் சதா இருந்தது. பூரணமாக இருந்தது. அந்த எண்ணத்துக்கே சக்தி உண்டுதான். ஆனாலும் அது போதாது. அவர்கள் எந்த நல்ல பழக்கங்கள் ஜனங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அந்த பழக்கங்களைத் தாங்களே முழுக்க அனுஷ்டித்துக் காட்டினார்கள். இந்த அனுஷ்டான சக்தி – சொன்னதைத் தானே செய்கிற சக்திதான் ஜனங்களை மாற்றியதே தவிர, வெறும் வார்த்தையைச் சொல்லி உபந்நியாசம் பண்ணுவது அல்ல.

உபந்நியாசம் பண்ண வேண்டாம் ! தான் பெரிசாக நினைக்கிற தர்மங்களை ஒருத்தன் தானே காரியத்தில் பண்ணிக் காட்டி கொண்டு, ஒரு தர்மோபதேசமும் பண்ணாவிட்டால் கூடப் போதும். அவன் வாழ்ந்து காட்டுகிற அனுஷ்டான சக்தி, அதுவாகவே கொஞ்சம் பேரையாவது அந்த வழிக்கு மாற்றிக் கொண்டு வந்துவிடும். எங்கேயோ ஒரு காட்டில் ஒரு மகான் உட்கார்ந்திருந்தால் கூட, அவருக்கு ஓர் தத்துவத்தில் ஸ்வயமாக அநுபவம் வந்துவிட்டிருந்தால், அது தானாக வெளி உலகத்திலும் வேலை செய்து பல பேரை அந்தக் கொள்கையில், அநுபவத்தில் கொண்டு வந்து சேர்த்து விடும்.

இப்போது சமீப காலத்திலேயே ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இருந்தார். நம் நாளிலேயே ரமணர் இருந்தார், அரவிந்தகோஷ் இருந்தார். இவர்கள் எல்லாம் என் மாதிரி ஊர் ஊராக யாத்திரை பண்ணி உபந்நியாசம் செய்யவில்லை. அவர்கள் ஒரே இடத்தில இருந்தார்கள். ஆனாலும், அவர்கள் இருந்த இடத்தில ஜனங்கள் தாமாகப் போய்ச் சேர்ந்தார்கள். அவர்களால் நிறைய மனமாற்றமும் நடப்பதை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம்.

Tags:
October 19, 2009

Snanams

காஞ்சி மகாபெரியவர்

சாஸ்திரத்தில் 5 வகை ஸ்நானங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது… இது, ‘வாருணம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தலே! இதுவே முக்கிய ஸ்நானம். மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக் கொள்வது போன்றவை, இரண்டாம்பட்சம்தான். இதற்கு அப்பறம் வருவதுதான், ‘கௌண’மாக கழுத்து வரை குளிப்பது, இடுப்பு வரை குளிப்பது போன்றவையெல்லாம்! ஆனால் இந்த கௌண ஸ்நானங்கள் எல்லாம், ஜலத்தால்/நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான்.

இல்லங்களில் சளி/ஜுரத்தில் இருக்கும்போது விபூதி ஸ்நானம் செய்வார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை. இதற்கு ஆக்நேயம் என்று பெயர். அக்னி ஸம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை/சாம்பலை ஜலம் விட்டுக் குழைக் காமல் வாரிப் பூசிக் கொள்வதை பஸ்மோத்தூளனம் என்கிறோம்.

பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது எழும் குளம்படி மண் புனிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு கோ தூளி என்று பெயர். ஸ்ரீகிருஷ்ணனே இந்தப் பசுக்களின் குளம்படித் தூள், சந்தனப் பொடி தூவினதுபோல தனது உடம்பில் படிந்தபடி ‘கோதூளீ தூஸரிதனாக’ இருந்தானாம். இவ்வாறான ‘கோதூளி’ நம்மீது படும்படியாக நின்று அந்த மண்துகள்கள் நம் உடலில் ஏற்பது மூன்றாம் வகையான ஸ்நானம். இதன் பெயர் ‘வாயவ்யம்’. இது வாயுவுடன் சம்பந்தமுடையதாக இருப்பதால், அதாவது காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால் இதன் பெயர் வாயவ்யம்.

அபூர்வமாக சில தருணங்களில் வெய்யில் அடிக்கும்போதே மழையும் பொழிகிறதல்லவா..? இவ்வாறான மழைஜலம் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்தத்துக்கு சமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது ‘திவ்யஸ்நானம்’. இதுவே நான்காம் வகை ஸ்நானம்.

புண்யாக வாசனம், உதகசாந்தி போன்றவை செய்தபின் மந்திர ஜலத்தை புரோகிதர் நம் மீது தெளிப்பார். சந்தியாவந்தனத்தில் ‘ஆபோஹிஷ்டா’ சொல்லி நீரைத் தெளித்துக் கொள்கிறோம். இவ்வாறு அபிமந்திரித்து தெளித்துக் கொள்ளுவது ஐந்தாம் முறை. இதன் பெயர் ‘ப்ராஹ்மம்’. ‘ப்ரம்மம்’ என்றால் வேதம், வேத மந்திரம் என்று ஒரு அர்த்தம். ஆகவே வேத மந்திரத்தால் புனிதப்படுத்தப்பட்ட தீர்த்தப் புரோக்ஷணத்துக்கு, ‘ப்ராஹ்ம ஸ்நானம்’ என்று பெயர்.

பார்க்கப் போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம்தான். எந்தக் காரியமானாலும் அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல், அதோடு மந்திரத்தையும் சேர்த்து ஈச்வர ஸ்மரணையுடன், ஈஸ்வரார்ப்பண மாகப் பண்ணுவதாகவே அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

Tags:
April 20, 2009

Paramarcharya comments on fake gurus

“Once Sri Chandrasekhara Saraswati Swami of Kanchi Mutt (Sri Periyava) had camped in North India. The then Prime Minister, Smt. Indira Gandhi, came to have His darshan.

The Prime Minister of India placed a similar question in front of Sri Periyava, “If you would pinpoint the persons who, in the name of spirituality, lead the people in a wrong way I will take action against them.” Sri Periyava laughed and said, “No! It should not be handled in this manner. Those who approach such fake swamis will themselves, after a time, understand their standard of maturity.”

Sri Periyava knew that this reply did not satisfy Smt. Indira Gandhi. Someone had offered a basket full of mangoes to Periyava. It contained many unripe and a few ripe fruits. Many devotees waited outside for Sri Periyava’s darshan. Sri Periyava instructed the attendants to bring a child from amongst these devotees. A child of about 5 years was brought to Him. Pointing to the basket Periyava smilingly said to the child, “Take whatever you want.” After a search the child picked up a ripe fruit.

Sri Periyava pointed out to Smt.Indira Gandhi who was watching this, “Just as the way a child knows what is ripe and what is unripe, so too would those who go out in search of Truth recognize a true Mahan at some point of their life.”

April 17, 2009

Ten Commandments of Paramacharya

  1. One of our duties as human beings is to avail ourselves of every opportunity to do good to others. The poor can serve others by their loyal work to the country and the rich by their wealth to help the poor. Those who are influential can use their influence to better the condition of the lowly. That way we can keep alive in our hearts a sense of social service. 
  2. Man by himself cannot create even a blade of grass. We will be guilty of gross ingratitude if we do not offer first to God what we eat or wear – only the best and choicest should be offered to Him. 
  3. Life without love is a waste. Everyone should cultivate “Prema” or love towards all human beings, bird and beast. 
  4. Wealth amassed by a person whose heart is closed to charity, is generally dissipated by the inheritors: but the family of philanthropists will always be blessed with happiness. 
  5. A person who has done a meritorious deed will lose the resulting merit if he listens to the praise of others or himself boasts of his deeds. 
  6. It will do no good to grieve over what has happened. If we learn to discriminate between good and evil, that will guard us from falling into the evil again. 
  7. We should utilize to good purpose, the days of our life-time. We should engage ourselves in acts, which will contribute to the welfare of others rather than to our selfish desires. 
  8. We should perform duties that have been prescribed for our daily life and also be filled with devotion to God. 
  9. One attains one’s goal by performance of one’s duties. 
  10. Jnana is the only solvent of our troubles and sufferings. 
Tags:
April 10, 2009

Thirumayam

தினம் தினம் திருநாளே!

ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மடத்துக்கு வந்து சேர்ந்த புதிது.

ஒரு முறை, காஞ்சி பரமாச் சார்ய ஸ்வாமிகளும், ஜயேந்திரரும் புதுக்கோட்டையை அடுத்துள்ள இளையாற்றங்குடி எனும் கிராமத்தில் தங்கியிருந்தனர்.

பரமாச்சார்யாளின் பூஜைக்குத் தேவையான அனைத்து கைங்கர்யங்களையும் ஜயேந்திரரே செய்வது வழக்கம். ஜயேந்திரருக்கு நியாய சாஸ்திரம் விஷயமாகச் சொல்வதற்கு ஆந்திராவில் இருந்து மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி என்ற பண்டிதர் ஒருவர் வரவழைக்கப்பட்டார்.

மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி, வித்வான் மட்டுமல்ல; பரம்பரை தனவந்தரும்கூட. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து ரயில் ஏறினார். அவர், திருமயம் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து இளையாற்றங்குடிக்குச் செல்ல வேண்டும்.

ஆனால், வேங்கடேச சாஸ்திரிக்குத் தமிழ் தெரியாது. சாஸ்திரிகள் பயணித்த அதே பெட்டியில் வைதீக ஆசாரத்துடன் கூடிய வேறு ஒருவரும் பயணித்தார். அவரைக் கண்டதும், ‘இவரும் இளையாற்றங்குடி மடத்துக் குத்தான் செல்கிறார் போலும்!’ என்று எண்ணிய வேங்கடேச சாஸ்திரி மெள்ள அவரை அணுகி, வட மொழி யில் பேச ஆரம்பித்தார்.

இளையாற்றங்குடியில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் தங்கியிருப் பது பற்றியும் பெரியவாளின் அழைப்பின் பேரில், தான் அங்கு செல்வதையும் விவரித்தார்.அத்துடன், ”தமிழ் மொழியோ… தமிழகத்தில் உள்ள ஊர்களைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. தாங்கள் உதவ வேண்டும்!” என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால், அந்த வைதீக- ஆசார ஆசாமி, தனக்கு எதுவும் தெரியாது என்று அலட்சியமாகக் கூறியது டன், வேறு ஓர் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார். இதைக் கண்டு, மேலும் பேச்சை வளர்க்கவோ, தனக்கு உதவவோ அந்த ஆசாமிக்கு விருப்பம் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டார் வேங்கடேச சாஸ்திரி.

இதையடுத்து, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பெயர்ப் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்டிருப் பதைப் படித்து, அந்தந்த ஊர்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டார் வேங்கடேச சாஸ்திரி. திருமயம் ரயில் நிலையம் வந்ததும் அங்கு இறங்கிக் கொண்டவர், ஒருவழியாக இளையாற்றங்குடிக்கு வந்து சேர்ந்தார்.

ஸ்ரீமடத்துக்கு வந்த வேங்கடேச சாஸ்திரிக்கு அதிர்ச்சி! ரயிலில் பயணித்த அதே வைதீக- ஆசார ஆசாமியும் அங்கு இருந்தார். மடத்தில் இருந்தவர்களிடம் அந்த ஆசாமியைச் சுட்டிக்காட்டி வேங்கடேச சாஸ்திரி விசாரித்தபோது, ”இவர் ஸ்ரீமடத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார்” என்று தெரிவித்தனர்.

இதைக் கேட்டதும் வேங்கடேச சாஸ்திரி மிகவும் வேதனை அடைந் தார். ‘இவரிடம் பொன்- பொருளா கேட்டோம். வாய் மொழியாக ஒரு உதவிதானே கேட்டோம். மடத்தில் பெரிய பொறுப்பில் உள்ளவர், இப்படி இருக்கிறாரே!’ என்று வருந்தினார் வேங்கடேச சாஸ்திரி.

அவரின் முக வாட்டத்தைக் கண்டவர்கள், அதற்கான காரணத்தைக் கேட்டனர். சாஸ்திரியும் தனக்கு நேர்ந்த அனுபவத்தை மன வருத்தத்தோடு விவரித்தார். உடனே அங்கிருந்த ஒருவர், வேங்கடேச சாஸ்திரியை அழைத்துக் கொண்டு, நேரே மகா பெரியவாளிடம் சென்றார்.

அப்போது, மகா பெரியவாள் அங்குள்ள குளத்தில் இறங்கி நீராட தயாராகிக் கொண் டிருந்தார். அவருடன் மடத்து ஆட்களும் பக்தர்கள் பலரும் இருந்தனர். இவர் களைக் கண்டதும் ‘என்ன விஷயம்?’ என்பது போல் பார்த்தார் மகா பெரியவாள்.

‘இத்தனை பேர் இருக்கும்போது எப்படிச் சொல்வது’ என்று இரு வரும் தயங்கி நின்றனர். ஆனால் பெரியவா விடவில்லை. வந்த விஷயத்தைச் சொல்லும்படி வலியுறுத்தினார். வேறு வழி யின்றி, அனைத்தையும் விவரித் தார், சாஸ்திரியைக் கூட்டி வந்தவர்.

இதைக் கேட்டதும் மகா பெரியவாளின் முகம் மலர்ந்தது. ”புகார் புரிகிறது. நமது மடத்துக்கு நம் அழைப்பின் பேரில் பாடம் சொல்ல வந்திருப்பவர் இவர். இவருக்கு, நமது மடத்தில் முக்கிய பதவியில் உள்ள ஒருவரே உதவ மறுத்துட்டார் என்பதுதானே வருத்தம்? இந்தச் சிறு உதவியைக்கூட செய்ய மனசில்லாமல், இவ்வளவு மோசமானவராக இருக்கிறாரே என்றுதானே நினைக்கிறாய்? ஆனால், எனக்கு என்னவோ… அவரைப் போல நல்லவரே இல்லை என்றுதான் தோன்றுகிறது” என்று சொல்லி நிறுத்தினார் மகா பெரியவாள்.

இதைக் கேட்டதும் வேங்கடேச சாஸ்திரி, புகார் தெரிவித்த ஆசாமி உள்ளிட்ட அனைவரும் எதுவும் புரியாமல் மகா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவரோ புன்னகைத்தபடி, ”வேறொண்ணுமில்லே… நம்ம பண்டிதரை (வேங்கடேச சாஸ்திரி) வேறு ஒரு ரயில் நிலையத்தில், ‘இதுதான் திருமயம்’ என்று இறக்கி விடாமல், ‘எனக்குத் தெரியாது’ என்று ஒதுங்கிக் கொண்டாரே… அதுவே பெரிய உதவி இல்லையா?” என்றார் மகா பெரியவாள்.

இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் கண்களில் நீர் மல்க, மகா பெரியவாளை நமஸ்கரித்தனர். ‘இது போல் உலகத்தைப் பார்க் கிற பக்குவத்தை எங்களுக்கும் அருளுங்கள்’ என்று வேண்டினர்.

இதுபோல நாமும், எல்லோரையும்- எல்லாவற்றையும்… நல்லவர்களாக- நல்லவை யாகவே பார்க்கக் கற்றுக் கொண்டால், தினம் தினம் திருநாள்தான் இல்லையா?

Tags:
April 1, 2009

Feeding the poor

trichy1
trichy2
trichy3

Tags:
April 1, 2009

Prasadam or feast

nanganallur1
nanganallur2
nanganallur3

Tags:
March 31, 2009

Pallakadu Mani Iyer

mani_iyer1
mani_iyer2

Tags:
March 30, 2009

Birla

image00121

Tags:
March 30, 2009

Vilvam

image00113
image00311

Tags:
March 30, 2009

Sathas