Archive for ‘Upanyasam’

May 24, 2012

யார் துறவி? எது துறவு?

‘யார் துறவி? எது துறவு?’ என்கிற கேள்விக்கு இலக்கணமாக, பெரியவர் திகழ்ந்த ஒரு அரிய சம்பவம் …

பெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள்.

ஆந்திர மாநிலம், விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்க தீர்மானித்திருந்தனர்.

இதுபற்றிய தகவல் பெரியவரை அணுகவுமே, அதற்கான வசூலை தடுத்துவிட்டார் பெரியவர். அவ்வேளையில் அவர் சொன்னதுதான் “யார் துறவி – எது துறவு” என்பதற்கு இலக்கணம்!

ஸ்தாபன பலம் என்று ஒன்று மிதமிஞ்சி ஏற்பட்டுவிட்டாலே, அதன் அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லை என்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. சன்னியாசி என்பவனை, ஒரு உடைமையுமில்லாத ஏகாங்கியாக, அவன் தன் ஊர் என்று சொல்லிக்கொள்வதற்குக்கூட, ஒரு இடம் இருக்க வேண்டாமென்று, சதா ஊர்ஊராக சஞ்சாரம் பண்ணும்படிதான் சாஸ்திரம் கூறியுள்ளது.

இருந்தும், சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்பட்டு அதுதான் மடம் என்றானது. இதை ஒரு தவிர்க்க முடியாத தீமை (Necessary evil) என்றுதான் கூற வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தத் தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின் கடமை. இந்தக் கடமையின் போது, அவனது ஆன்ம தபோ பலத்தைவிட, பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக் கொள்ள வேண்டும்.காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம் நீங்கியது. இந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவே கருதினேன். உத்தமமா பார்த்துக்கொள்வது அவன்தான்; பணமல்ல.எனவே, எப்போதும் Nil Balanceலேயே மடம் இருக்கும்படி ஜாக்ரதையாக நிர்வகித்து வருகிறேன். இன்று இரண்டு லட்சம் என்று சர்ப்ளஸ்ஸில் போகப் பார்த்தது. இதற்கு ‘ப்ளஸ்’ கூடாது என்று கருதுகிறேன். ஸ்வாமிவாரு தடுத்து விட்டாரே என வருத்தப்படவேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு, நான் பண்ணுவது ஆசீர்வாதமாக இருக்காது. அதற்காக பணமே வேண்டாம் என்று கூறவில்லை. நெருக்கடி ஏற்படும்போது, உங்களிடம்தான் பிட்சை கேட்டு நிற்பேன். தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட ஆத்மபலம்தான் பெரும் பணம்…!’

….. இந்திரா-செளந்தர்ராஜன்

நன்றி: “தீபம்” (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

Thanks Shri Harekrishna

May 13, 2012

Mathru Panchagam

I am never a fan of these commercially created father’s day/mother’s day. That doesn’t mean I don’t respect moms/dads. 20 years back, we never had these days, we had much better respect for elders than we have in today’s world. To me, our culture doesn’t expect Archies, JC Pennies, Walmarts to remind us the importance of matha, pitha etc…..I know, I am getting into a debatable topic – but this is my view. I can defend this.

I was attending Adi Shankara Jayanthi celebration yesterday and our gurukkal, who is my veda teacher as well, called me, made me sit by him and suddenly explained the amazing 5 slokas composed by Adi Shankara called “Mathru Panchagam”. The time, place and the situation when He composed this is so unique and He is revealing the Parameswaran within Him through this slokas….. I have given the link to an English Translation also, but not sure about the accuracy. For instance, yesterday, he explained to me the meaning of “dhurvara soola vyatha…”, which is little different in this translation….anyways, the underlying meaning is the same.

 

மாத்ருகா பஞ்சகம்

1.ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல், ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே! அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று செல்ல? அந்த தாய்க்கு நமஸ்காரம்!

2.குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

ஹே தாயே! c ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே! உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்!

3.ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

தாயே! c மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. c மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது. தாயே! உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை. காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!

4.முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

என் முத்தல்லவா c ! என் கண் அல்லவா c ! c என் ராஜா, என் குழந்தை c சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே! அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !

5.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே -
த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II

அன்று ப்ரஸவ காலத்தில் ‘அம்மா’ அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே! இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.

மாத்ருகா பஞ்சகம் முற்றிற்று.

 

Mathru Panchakam

Translated into verse

By

P.R.Ramachander

INTRODUCTION

 

Adhi Sankara Bhagawat Pada was born at Kalady in Kerala in a Namboodiri family. His mother was Aryamba and his father died very early..When he wanted to take up sanyasa very much against the will of her mother, she finally agreed with a condition, that He should be present near her death bed and also he should perform the obsequies. Sankara agreed for this and took up Sanyasa.When he was art Sringeri,  he realized that his mother was nearing death and by the power given to him by God reached there immediately. He was near his mother at the time of her death and also performed the funeral ceremonies .It was at this time he wrote this five slokas which came out deep from his mind. This was possibly the only poem he wrote, which is not extolling any God and also not explaining his philosophy.

Mother has been extolled as a god form in several places in the puranaas and also God has been approached as a son approaches his mother by many great savants. She is Dhatree(One who bears the child), Janani(one who gives birth to the child), Ambaa(One who nourishes the limbs of the child) and Veerasu(One who makes him a hero), Shusroo(One who takes care of him) .But Sankara in these poems is not dealing either of God in the form of mother nor mother in the form of God.He laments to the lady who was his mother and points out how his conscience is pricking him for being not able to do the duty of a son.

Aasthaam tavaddeyam prasoothi samaye durvara soola vyadha,

Nairuchyam thanu soshanam malamayee sayya cha samvatsaree,

Ekasyapi na garbha bara bharana klesasya yasya kshmo dhathum,

Nishkruthi munnathopi thanaya tasya janyai nama.

 

(Oh mother mine, With clenched teeth bore thou the excruciating pain, When I was born to you,

Shared thou the bed made dirty by me for an year, And thine body became thin and painfull,

During those nine months that you bore me, For all these in return, Oh mother dearest,

I can never compensate, Even by my becoming great.)

 

Gurukulamupasruthya swapnakaale thu drushtwa,

Yathi samuchitha vesham praarudho maam twamuchai

Gurukulamadha sarva prarudathe samaksham

Sapadhi charanayosthe mathurasthu pranaama.

 

(Clad in a dress of a sanyasin, You saw me in my teacher’s school, In your dream and wept,

And rushed thither, Smothered , embraced and fondled me , Oh mother mine,

And all the teachers and students wept with you dear, What could I do ,

Except falling at your feet, And offering my salutations.)

 

Ambethi Thathethi Shivethi tasmin,

Prasoothikale yadavocha uchai,

Krishnethi Govinda hare Mukunde tyaho,

Janye rachito ayamanjali.

 

(Oh mother mine, Crying thou shouted in pain, During thine hard labour, “Oh mother, Oh father,

Oh God Shiva, Oh Lord Krishna, Oh Lord of all Govinda, Oh Hari and Oh God Mukunda,”

But in return, Oh my mother dearest. I can give you but humble prostrations.)

 

Na dattam mathasthe marana samaye thoyamapi vaa,

Swadhaa vaa no dheyaa maranadivase sraadha vidhina

Na japtho mathasthe marana samaye tharaka manu,

Akale samprapthe mayi kuru dhayaam matharathulaam.

 

(Neither did I give you water at thine time of death, Neither did I offer oblations to thee to help thine journey of death, And neither did I chant the name of Rama in thine ear, Oh Mother supreme, pardon me for these lapses with compassion, For I have arrived here late to attend to those.)

Mukthaa Manisthvam, Nayanam mamethi,

Rajethi jeevethi chiram sthutha thwam,

Ithyuktha vathya vaachi mathaa,

Dadamyaham thandulamesh shulkam.

 

(Long live, Oh, pearl mine, Oh jewel mine, Oh my dearest eyes, Oh mine prince dearest, And oh my soul of soul, Sang thou to me, But in return of that all, Oh my mother dearest. I give you but dry rice in your mouth.)

 

May 7, 2012

Duty of Brahmins – பிராம்மணர் கடமை

 

 

இவ்வளவு தூரம் கேட்டதற்குப் பிரயோஜனமாக பிராம்மணர்கள் எல்லாரும் ஏதாவது ஒரு காரியம் வேதத்தை ரக்ஷிப்பதற்காகப் பண்ணவேண்டும். நித்தியம் பிரம்ம யக்ஞம் பண்ண வேண்டும். பஞ்ச மஹா யக்ஞங்களில் அது ஒன்று. இங்கே ‘பிரம்ம’ என்றால் வேதம் என்று அர்த்தம். அகண்ட தீபம் போல் மந்திர சக்தியானது நம்மிடம் அணையாதிருப்பதற்காக நாம் அதைச் செய்ய வேண்டும். நாம் அத்தியயனம் பண்ணவேண்டிய சாகையின் மஹரிஷி எவரோ அவருக்குத் தர்ப்பணம் பண்ணவேண்டும். பண்ணி விட்டு இரண்டு அக்ஷரமாவது வேத அத்யயனம் பண்ண வேணடும். அதுவும் முடியாவிட்டால், காயத்ரீ ஜபத்தையாவது விடாமல் செய்ய வேண்டும். காயத்ரீ வேதத்தின் ஸாரமானது. காயத்ரீயை உபதேசம் பண்ணிக் கொண்ட பின்பு தான், வேதாக்ஷர உச்சாரணம் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய காயத்ரீயை ஸஹஸ்ராவிருத்தி (ஆயிரம் முறை ஜபிப்பது) தினந்தோறும் செய்யவேண்டும். கடைசி பக்ஷம் பத்தாவது பிரதி வேளையும் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரீ மந்திரம் சித்த சாந்திக்குக் காரணம். அதனுடைய தேவதை சூரியன். சூரியனுக்கு உரிய நாளாகிய ஞாயிற்றுக்கிழமை, இந்த காலத்தில் ¢எல்லோருக்கும் லீவு நாளாக இருக்கிறது. ஆகையால் அன்று மட்டுமாவது விடியற்காலம் 4-மணிக்கு எழுந்து எல்லாரும் ஸஹஸ்ராவிருத்தி காயத்ரி ஜபம் பண்ணவேண்டும். செய்தால் க்ஷேமம் உண்டாகும்.

புருஷஸ¨க்தம், ஸ்ரீ ஸ¨க்தம், ருத்ரம் முதலான வேத ஸ¨க்தங்களையாவது எல்லா பிராம்மணர்களும் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதெல்லாம் தற்போது உத்தியோகங்களில் இருக்கிற பிராம்மணர்களுக்குச் சொன்னது. இனிமேல் இவர்கள் பூராவாக அத்யயனம் பண்ணுவது கஷ்டமாதலால் அதமபக்ஷம் வேத சம்பந்தமாக இவ்வளவாவது செய்தாக வேண்டும் என்றேன். ஆனால், கஷ்டத்திலும் ஒன்றை எடுத்துக் கொண்டு முடித்தால்தான் பெருமை ஜாஸ்தி. அந்த விதத்தில் இவர்கள் என்ன கஷ்டமானாலும் பெரிதில்லை என்று, எத்தனையோ ஆயிரம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்திருக்கிற வேத வித்யையை ஸ்வீகாரம் பண்ணியே தீருவது என்ற பக்தியும் சிரத்தையும் வைத்து விட்டால், இப்போதிருந்தாவது அத்யயனத்தை ஆரம்பித்துச் சில வருஷங்களில் பூர்த்தி செய்துவிடலாம். மேலே மேலே ஆராய்ச்சி பண்ணி, ஐம்பது வயசு, அறுபது வயசு அப்புறங்கூடப் பல வருடங்கள் படித்து, உழைத்து பி.ஹெச். டி பட்டம் முதலானதுகளைப் பல யூனிவர்ஸிட்டிகளில் வாங்குகிறார்கள் இல்லையா?மனஸ் இருந்தால் எதுவும் செய்யலாம். வேதம் என்றால் என்னவென்றே தெரியாமலிருந்துவிட்டு, அப்புறம் ஒரு ஆவேசம் வந்து நாற்பது வயசுக்குமேல் அத்யயனம் பண்ணினவர்கள் இருக்கிறார்கள். நம் வேத ரக்ஷணத் திட்டங்களின் பொறுப்புள்ள office-bearer -களிலேயே இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனபடியால் சிரத்தையும் சங்கல்பமுந்தான் முக்கியம்.

வயதாகி உத்யோகத்துக்கு வந்துவிட்ட பிராம்மணர்களின் சொந்த விஷயம் எப்படிப் போனாலும், இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கெல்லாம் தப்பாமல் வேத அறிவைத் தர ஏற்பாடு செய்ய வேண்டும். அத்யயனம் பண்ணுவதற்கு விட முடியாவிட்டாலும் (இப்படி நானே விட்டுக் கொடுத்துச் சொல்வது தப்புத்தான். நான் கொஞ்சம் இளக்கிக் கொடுத்து விட்டால் பாக்கியும் பிசுபிசுவென்று போய்விடும். ஆனாலும், நான் பிடிவாதமாக ஒரு ஆக்ஞை போடுவதால் ஒன்றுமே நடக்காமல் போய்விடுமோ என்பதால், இப்படி விட்டுக் கொடுத்துச் சொல்ல வேண்டியதாகிறது) , தங்கள் பிள்ளைகளுக்கு எட்டாம் வயசில் உபநயனத்தைப் பண்ணி, அப்புறம் ஏழெட்டு வருஷமாவது ஸாயங்காலங்களில் ஒரு மணி நேரம் முக்யமான வேத பாகங்களைக் கற்றுக் கொடுக்க ட்யூஷன் வைக்க வேண்டும். ஒரிடத்தில் பல பிள்ளைகளைச் சேர்த்துக் கூட்டுறவு அடிப்படையில் (co-operative basis ) இதைச் செய்தால் செலவு குறையும். அதோடு ஏழைப் பசங்களும் கற்றுக்கொள்ள முடியும்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைக்கும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடக்கும் வேத பாடசாலைகள் மூடிப் போகாதபடியும், இவற்றில் மேலும் வித்யார்த்திகள் சேருமாறு பண்ணவேண்டும். வித்யார்த்திகளுக்கும் அத்யக்ஷகர் (வாத்தியார்) களுக்கும் கணிசமான திரவிய சகாயம் பண்ணினால்தான் இந்தக் காரியம் நடக்கும். முன்னமே சொன்னமாதிரி, பிராம்மணனுக்கு ரொம்பவும் ஜாஸ்தியாக லௌகிக சௌகரியங்களையும், தன வஸதியையும் தரக்கூடாதுதான் என்றாலும், நல்ல ஸம்பாத்தியம் தரக்கூடிய பல தொழில்கள் அவர்களை வசீகரிக்கிற தற்காலத்தில், சிலராவது இப்படிப் பூர்ணமாக வேதத்தைக் கற்றுக்கொண்டு பிற்பாடு சொல்லிக் கொடுப்பது என்ற பிராம்மண ஸ்வதரமத்தையே செய்ய வேண்டுமானால், அப்படிப்பட்டவர்கள் “இல்லை”என்று அழாத அளவுக்கு அவர்களுக்கு வஸதி பண்ணித் தரத்தான் வேண்டும். ஆதியில் இல்லாத அநேக புதுப்புது சௌகரியங்களும், சுக சாதனங்களும் வந்துவிட்ட இந்த நாளில், சிலரை மட்டும் பரம வைராகிகளாக இருந்து கொண்டு ஸ்வதர்மத்தைப் பண்ணுங்கள் என்று சொன்னால், வேதரக்ஷணம் என்பது நின்றே போய்விட வேண்டியதுதான். அதனால் வேதத்துக்கே தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் படியாகச் சிலரைப் பண்ணும்போது, அவர்களுக்கு நாம் நன்றாக சன்மானம் செய்து, திரவிய சகாயம் நிறையக் கொடுக்கத்தான் வேண்டும். அவர்களுக்கு ‘லக்ஷரி’கூடாதாயினும்,மற்றத் தொழில்கள் அவர்களை இழுத்துக் கொள்ளாத அளவுக்கு ஸெளகர்யம் பண்ணித் தரத்தான் வேண்டும். இப்படியெல்லாம் செய்யத்தான் அநேக திட்டங்கள் நடத்தி வருகிறோம்

May 5, 2012

நம: பார்வதீ பதயே என்பது என்ன?


சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல, ஹரஹர மகாதேவா என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன?

பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். பார்வதீபதி என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு மகாதேவன் என்றும் பெயர். பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை ஹர ஹர என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது.

அந்தக் குழந்தைக்கு ஞானசம்பந்தர் என்று பெயர். இந்தக் குழந்தை ஊர் ஊராக ஹர ஹர நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து, எல்லா ஜனங்களும் அரோஹரா என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷம் கேட்டதும், உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாகக் காணாமல் ஓடிப்போய் விட்டது. வையத்தில் அதாவது உலகத்தில் கஷ்டமே இல்லாமல் போனது.

என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும். அதனால், உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும், என்று சம்பந்தக் குழந்தை தேவாரம் பாடிற்று. அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே அரன் என்றால் ஹரன். ஹரன் என்றால் சிவன். இப்போது நான் (பெரியவர்) நம: பார்வதீபதயே! என்று சொல்வேன். உடனே நீங்கள் அம்மையான அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு அந்தக் குழந்தை சொன்ன மாதிரியே பக்தியோடுஹர ஹர மகாதேவா என்று சொல்ல வேண்டும்.

நம: பார்வதீ பதயே! ஹர ஹர மகாதேவா!!

May 1, 2012

காயத்ரீம் சந்தஸாம் மாதா

காயத்ரீ என்றால், “எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது”என்பது அர்த்தம்.

காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே !

கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை;பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது,

காயத்ரீம் சந்தஸாம் மாதா

என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு ‘த்ரிபதா’ காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது. இந்த ஒவ்வொரு பாதமும் ஒவ்வொரு வேதத்தின் ஸாரம். அதாவது, ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம். அதர்வத்துக்குத் தனி காயத்ரீ இருக்கிறது. இரண்டாவது உபநயனம் செய்து கொண்டே அதை உபதேசம் பெற வேண்டும்.

த்ரிபம் ஏவது வேதேப்ய:பாதம் பாதமதூதுஹம்

(மநுஸ்மிருதி)

காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?

சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்.

Tags:
April 13, 2012

Periyava clarifying upanayana for girls

Periyava details this topic (from Deivathin Kural)::

I said that the twice-born must perform sandhyavandana with the well-being of women and other jatis in mind. I also explained why all samskaras are not prescribed for the fourth varna. Now we must consider the question of women, why they do not have such rituals and samskaras.

Even though we perform the punyaha-vacana and namakarana of newborn girls and celebrate their first birthday, we do not conduct their caula and upanayana nor the other samskaras or vows laid down for brahmacarins. Of course, they have the marriage samskara. But in other rites like sacrifices the main part is that of the husband, though she (the wife) has to be by his side. In aupasana alone does a woman have a part in making oblations in the sacred fire…..more

Thanks Hari for this post!

Tags:
March 22, 2012

Fantastic discourse by Jagadguru Sringeri Sri Bharati Tirtha Mahaswamiji on dharma, karma etc

One of the finest speeches in the recent times. Very powerful message yet a simple delivery….he brings out simple examples to underline the importance of Nithya karma, pujas, anushtanas etc….every Brahmin must watch this…..I enjoyed every word of this….interestingly, I did not know that acharya can speak such a pure/great Tamil – it is probably my ignorance…..

Don’t miss this….

Thanks Hari for sharing this….

Jaya jaya shankara hara hara shankara…

Tags:
February 29, 2012

அன்னை பார்வதியின் அவதாரமே அண்ணல் ராமன்!

 

“”ராமாயணம் நம் எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்த தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். வால்மீகி, கம்பர், துளசிதாசர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர் வாச ராமாயணம் என்றெல்லாம் பல ராமாய ணங்கள் இருக்கின்றன. அதில் ஏதோ ஒன்றில் இந்த வித்தியாசமான விஷயம் இருக்கிறது.

அம்பாள்தான் ஸ்ரீராமனாக அவதரித்தாள் என்பது கதை. ஈஸ்வரனே சீதையாக உடன் வந்தார். ஸ்ரீராமன் நல்ல பச்சை நிறம்! “மரகத மணி வர்ணன்’ என்பார்கள். அம்பிகையை “மாதா மரகத சியாமா’ என்கிறார் காளிதாசர். முத்து சுவாமி தீட்சிதரும் “மரகத் சாயே’ என்று மீனாட்சியைப் பாடுகிறார். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரத்தைத் தாண்டி மூலகாரணமாக இருக் கிறபோது பராசக்தி செக்கச் செவேல் என்று இருந்த போதிலும், மும்மூர்த்திகளில் ஒருவருக்குப் பத்தினியாக பார்வதியாகி இருக்கிறபோது பச்சை நிறமாகத்தான் இருக்கிறாள். இவள்தான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வந்தாள்.

ஸ்ரீராமன் சீதையை விட்டு காட்டுக்குப் போவது என்று தீர்மானம் பண்ணி விடுகிறார். அப்போது தேவிக்கு உணர்ச்சி பீறிட்டுக் கொண்டு வந்துவிடுகிறது! “காட்டிலே துஷ்டர் பயம், மிருக பயம் இருக்கிறது என்பதற்காக மனைவியை அழைத்துப் போக மறுக்கிறாரே… இவரும் ஓர் ஆண் பிள்ளையா’ என்று அவளுக்கு மகா கோபம் வர, அந்த வேகத்தில் ஓர் உண்மையைச் சொல்லி விடுகிறாள். “உம்மை மாப்பிள்ளையாக வரித்த என் பிதா ஜனகர், நீர் ஆண் வேடத்தில் வந்திருக்கிற ஒரு பெண் (ஸ்திரியம் புருஷ விக்ரஹம்) என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனாரே’ என்று ராமரைப் பார்த்துச் சண்டை போடுகிறாள் சீதாதேவி. இது சாக்ஷாத் வால்மீகி ராமாயண வசனம்.

ஸ்ரீராமனுக்கு அவர் அம்பாள்தான் என்பதை இப்படி சூட்சுமமாக ஞாபகப்படுத்தி விட்டாள் சீதை. உடனே அவருக்கு அவதாரக் காரியம் நினைவுக்கு வந்தது. அதற்கு அனுகூலமாகவே விளையாட்டு நடப்பதற்காக சீதையை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போனார்.

ராமரால் சம்ஹரிக்கப்பட வேண்டிய இராவணனோ பெரிய சிவ பக்தன். ஆதியில் அவனுக்கு சிவனையே கைலாசத்திலிருந்து இலங்கைக்குக் கொண்டு வந்து அசோகவனத் தில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்காகத்தான் கைலாசத்தைப் பெயர்த் துப் பார்த்தான். அப்போது அம்பிகை பயந்து ஈசுவரனைக் கட்டிக்கொள்ள, அவர் விரல் நுனியால் மலையை அழுத்தி விட்டார். தப்பினோம் பிழைத்தோம் என்று இராவணன் இலங்கைக்கு ஓடி வந்துவிட்டான். மகா சிவபக்தனாகையால் அவனுக்குத் தன்னுடைய ஈசுவரன்தான் சீதையாக வந்திருக்கிறார் என்று தெரிந்து விட்டதாம். முன்பு அம்பாளால்தான் தன் காரியம் கெட்டுப் போச்சு என்கிற கோபத் தினால், இப்போது அவள் தலையீடு இருக்கக் கூடாது என்றே ராமரை அப்புறப்படுத்திவிட்டு, சீதையைத் தூக்கி வந்து அசோகவனத்தில் வைத்தானாம். ஆனாலும் ராட்சச அறிவானதாலும் அம்மையப்பனான ஜோடியில், ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டதாலும் இராவணனுடைய அன்பு விகாரப் பட்டுக் காமமாயிற்று. இருந்தாலும் சிவபக்தியினால் இவனுக்கு அவதார ரகசியம் அவ்வப்போது கொஞ்சம் தெரிந்தது.

ஆஞ்சனேயரைப் பார்த்தவுடனே இராவ ணன், “இவர் யார்? நந்தியெம் பெருமானா?’ என்று நினைக்கிறான். “கிமேஷ பகவான் நந்தி’ என்பது வால்மீகி ராமாயண வசனம். சீதாராமர் களின் பரமதாசனாக இருக்கப்பட்ட அனுமா ரைப் பார்த்ததும், கைலாயத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் தாசனாக இருக்கிற நந்திதான் அவர் என்பது புரிந்ததுபோல இராவணன் பேசுகிறான்.

அம்பாளே நாராயணன் என்பதற்காக இந்தக் கதை எல்லாம் சொல்கிறேன். இரண்டும் ஒன்றாக இருக்கட்டும். ஆனால் நாராயணன் என்கிற புருஷ ரூபம், அம்பாளின் ஸ்திரி ரூபம் இரண்டும் நன்றாக இருக்கின்றனவே… இரண் டையும் வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது. அப்போது அவர்களைச் சகோதரர்களாக வைத்துக் கொள்ளலாம். அம்பாளை நாராயணணின் சகோதரி என்று சொல்வதற்கும் புராணக் கதைகள் எல்லாம் பக்கபலமாக இருக்கின்றன.”

February 13, 2012

Hinduism – a kitchen religion – a must-read

It seems that Nehru once joked that Hinduism is a kitchen religion. Although he is an idiot, who said this without any meaning, our Periyava explains how our whole philosophy starts from the kitchen. .. This is from “Deivathin Kural” – I guess Vol 1.

In today’s world, we’ve completely forgotten the foundation – temptations, our lifestyle etc has pushed us to eating outside a mandatory thing….By reading this, one can realize why “aathu saapadu” is critically important for spiritual progress.

 

ராஜா ஒர்த்தன் இருந்தான். அவனுக்கு ஒரு குரு. அவர் பெரிய மஹான். அடிக்கடி அரண்மனைக்குப் போயி அவனுக்கு நல்ல உபதேசங்களைப் பண்ணிட்டு வருவார். அந்தமாதிரி ஒருநாள், காலம்பற போனவர், ரொம்ப நேரமா அநேக விஷயங்களைப் பேசிண்டே இருந்தாரா!…….மத்யான்னம் வந்துடுத்து. ராஜா சொன்னான் ” இங்கியே பிக்ஷை பண்ணிட்டு போகணும். ஆசார நியமத்தோட, ஒங்களுக்குன்னு தனியா சமைச்சுப் போட ஏற்பாடு பண்றேன்..”ன்னு ரொம்ப கெஞ்சினான். மறுக்க முடியாம ஒத்துண்டார். நன்னா ஸம்ருத்தியா போஜனம் ஆச்சு! பஞ்சபக்ஷ்ய போஜனம் பண்ணினதால அரண்மணைலேயே கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிண்டார். எங்க? ராஜாவோட ‘ரூம்’ லேயே படுத்துண்டார். படுத்துண்டு இருக்கறச்சே, அங்க ஒரு சுவர்ல தொங்கிண்டு இருந்த ஒரு முத்து ஹாரம் அவர் கண்ணுல பட்டுது. அது ரொம்ப ஒஸ்தியான முத்து! சாக்ஷாத் ராஜாவோடது!

நல்ல வைராகியான குருவுக்கு அன்னிக்கு என்னவோ அந்த முக்தாஹாரத்தை பாத்ததும், அதை எடுத்துக்கணும்…ன்னு ஒரு எண்ணம் ரொம்ப ‘ஸ்ட்ராங்’ ஆ உண்டாச்சு! பக்கத்ல யாருமே இல்லாததால, சட்னு அதை எடுத்து வஸ்த்ரத்துக்குள்ள ஒளிச்சு வெச்சுண்டுட்டார். சாதாரண மனுஷா பண்ணினாலே, திருட்டு..ங்கறது மஹாபாவம், தப்பு! இவரோ, பெரிய மஹானா, ராஜகுருவா இருக்கப்பட்டவர், கொஞ்சங்கூட மனஸை உறுத்தாம, இப்பிடி பண்ணிப்டு, தாம்பாட்டுக்கு ஆஸ்ரமத்துக்கு போய்ட்டார்! சித்தே நாழி ஆனப்புறம், ஹாரம் திருட்டுப் போன சமாச்சாரம் அரண்மனைல தெரிஞ்சுது. ஒர்த்தரையும் விடலை. எல்லாரையும் ‘செக்’ பண்ணியாச்சு. ஆனா, வாஸ்த்தவத்ல அதுக்கு காரணமான குருவை மட்டும் யாருமே கொஞ்சங்கூட சந்தேஹப்படலை. ஏன்னா………..அவர் அன்னிவரைக்கும் அவ்வளவு ஸுத்தரா இருந்தவர்!

“பழி ஓரிடம், பண்டம் ஓரிடம்”…ன்னு யார் யாரையோ பிடிச்சு, மரியாதைப்பட்டவாளை வாயால கேட்டு, ஆள் படைகளை அடிச்சு, ஒதைச்சு “enquiry “, “investigation ” அது இதுன்னு நடத்தினா! தடயம் ஒண்ணும் கெடைக்கலை. இப்டியே ஒரு நாள் முழுக்கப் போச்சு! அன்னிக்கு ராத்ரி, “குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததால” இல்லே; மத்யான்னம் பண்ணினது போறாதுன்னு, ராத்ரியும் ஏதோ கன்னா பின்னா…ன்னு எண்ணம்! அது வேணும் இது வேணும்…ங்கற ஆசைனால தூக்கமே வரலை அந்த குருவுக்கு. ஸம்ருத்தியா சாப்டுட்டு ராப்பூரா தூங்காததால, ஒரே அஜீர்ணம்! மறுநாள், முழிச்சுக்கறச்சேயே வயத்ல ‘கடமுடா’ பண்ண ஆரம்பிச்சுது. பேதி பிடிச்சுண்டது.

அஞ்சாறு தடவை போய் போய் ரொம்ப பலஹீனமா ஆய்ட்டார்! ஒடம்பு இப்பிடி ஆயாஸப்பட்டாக்கூட பேதியானதுலேர்ந்து அவர் மனஸ்ல ஒரு தெளிர்ச்சி உண்டாச்சு. இதுக்கு மேல ‘போறதுக்கு’ ஒண்ணும் இல்லேங்கற மாதிரி ஒடம்பு கிழிஞ்ச நாரா ஓஞ்சு போன ஸ்திதில………..அவரோட வழக்கமான ஒசந்த மனஸ் அவருக்கு வந்துடுத்து! அந்த பட்டபடைக்கற வெய்யில்ல, ஒடம்பு அசதியக்கூட பாக்காம, ஓடினார் முத்து மாலையைத் தூக்கிண்டு ராஜாகிட்ட! அவன்கிட்ட சொன்னார்……

“என்ன காரணமோ தெரியலை…….நேத்தி மத்யானத்துலேர்ந்து என் புத்தி கெட்டுப் போயி, அந்த கெட்ட ஆவேசத்ல, நான்தான் அந்த மஹா பாபத்தை பண்ணிட்டேன்! நிர்தோஷமான மிச்ச எல்லாரையும் சிக்ஷை பண்ணின பாபத்துக்கு நான் காரணமாயிட்டேன். எல்லாத்தையும் சேத்து வெச்சு, நேக்கு தண்டனை குடு!” ன்னு ரொம்ப பொலம்பினார். ராஜாவோ நம்ப மாட்டேங்கறான்! “நீங்க சொன்னது ஒரு நாளும் நடந்திருக்காது. நெஜத்திருடன் பயந்து போய் காப்பாத்தச் சொல்லி ஒங்க கால்ல விழுந்திருப்பான்…..ஒங்களோட பரம தயாள குணத்தால, நீங்களே குத்தத்தைப் பண்ணின மாதிரி சொல்றேள்…”ன்னு சொல்லிட்டான். ஆனா, குரு ரொம்ப கெஞ்சி கெஞ்சி தன்னை நம்பும்படி சொன்னார். அவனோ பாதி மனசோட, “நீங்க சொல்றது நெஜந்தான்…ன்னு ஒத்துண்டாலும், நிச்சயமா இதுக்கு ஏதோ அடிப்படைல காரணம் இருக்கணும். “circumstance ,motive பாத்துதானே sentence பண்ணனும்னு law வே இருக்கோல்லியோ?” ன்னு விஜாரிச்சான்.

கடைசில குரு சொன்னார்… “வழக்கத்துக்கு மாறா நேத்திக்கு நான் அரண்மனைல சாப்டதால, அன்ன தோஷம் உண்டாகி, அது த்வாரா……….குண தோஷம் உண்டாகியிருக்கு. ராத்ரிகூட மனஸ் கெட்டே இருந்தது. வயறு கெட்டு “அதிஸாரம்” உண்டானதால, புத்தில தெளிவு உண்டாச்சு………அதுனால, நேத்து பக்வம் பண்ணின அன்னம் எங்கேர்ந்து வந்துதுன்னு விஜாரி” ன்னு ராஜாகிட்ட சொன்னார்.

அன்னத்துல கார்போஹைட்ரேட், வைட்டமின் மட்டும் இல்லே! அதை சமைச்சவர், காய்கறிகளை தானமாவோ, வெலைக்கோ குடுத்தவர், அதை பயிர் பண்ணினவர்…ன்னு ஒரு மொழநீள லிஸ்ட்டுக்கு, சம்பந்தபட்டவா எல்லாரோட குணதோஷங்களும் அந்த அன்னத்ல ‘டெபாசிட்’ ஆகி சாப்டறவா உள்ளே போறது.

ராஜா ஒடனே உக்ராண மணியக்காரன்கிட்ட முந்தின நாள் குருவுக்கு சமைச்ச அன்னம் எங்கேர்ந்து வந்துது?ன்னு விஜாரிச்சான். அவனும் விசாரணை பண்ணிட்டு சொன்னான்…….”கொஞ்சநாளைக்கு முன்னால, கடைத்தெருவுல இருக்கற மளிகைக் கடைல ரொம்ப ஒசந்ததான ஸன்ன சம்பா அரிசி மூட்டைகளை ஒரு திருடன் திருடி முதுகுல தூக்கிண்டு போறச்சே, ராஜசேவகாள்கிட்ட பிடிபட்டான். அவங்கிட்ட இருந்த மூட்டையை அரண்மனைல வெச்சிருந்தா. மளிகைக் கடைக்காரா யாருமே அரிசி மூட்டையை ‘டிமாண்ட்’ பண்ணிண்டு வராததால, அது அரசாங்கத்துக்கு சொந்தம். நேத்திக்குத்தான் குருவுக்காக, அந்த ஒசந்த அரிசியை சமைச்சோம்”. குருவுக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு.

“பாத்தியா? அதுனாலதான் ராஜாவோட அன்னம் கூடாது…ன்னு சாஸ்திரம் சொல்றது. கொஞ்சநேரம் திருடனோட முதுகுல ஒக்காந்திருந்த அரிசி மூட்டை எனக்குள்ள போய் என்னை திருட வெச்சுடுத்தே! எப்படி ஒர்த்தன் ஒடம்புல இருக்கற வ்யாதி அணுக்கள் இன்னோர்த்தன் ஒடம்புக்குள் தொத்திகறதோ……..அதே மாதிரி, கெட்ட எண்ணங்களோட பண்ற கார்யங்கள்ள, அதை பண்ணினவனோட மானஸீக அணுக்கள் ஒட்டிண்டு இருக்கும். அந்த திருடனோட திருட்டு குண பரமாணுக்கள் எனக்குள்ள போனதோட ‘ரிசல்ட்’டை பாத்தியா?” ன்னு கேட்டார்.

அதுனாலதான் கண்ட எடத்ல கண்டவா கையால சமைச்சு சாப்டரதால நம்ம மனஸ் கெட்டுப் போக ரொம்ப ஹேதுவாயிருக்கு. ஆத்துலேயே சமைச்சாலும், அன்னதோஷம் போறதுக்குத்தான், என்ன சமைக்கறோமோ அதை பகவானுக்கு நைவேத்யம் பண்ணிட்டா, அதுல இருக்கற கொஞ்சநஞ்ச தோஷமும் போய்டும். மனஸும் கெடாது. சரீரமும் கெடாது”.

 

 

January 11, 2012

Aasai

I’ve read this many times and am sure that you also have read it – doesnt matter how many times I read, I am simply moved by this. Thought of re-sharing this…..

அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்குச் செல்வது காஞ் சிமகானின் தினசரி வழக்கம்.பிட்சையில் கிடைக்கும் உணவையே அவர் உண்பார்.

ஒருசமயம், வழக்கம்போல் பூஜைகளை முடித்த பின்னர், பிட்சைக்குச் செல்லாமல் மடத்திலேயே இருந்துவிட்டார் மகான். பிட்சைக்குச் செல்லாததால், அவர் உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. பலரும் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட் டார். இது மறுநாளும் தொடர்ந்தது. அன்றும் மகான் உணவருந்தவில்லை.

மூன்றாம் நாளும் மகாசுவாமிகள் பிட்சைக்குச் செல்லவில்லை.எனவே, மடத்தில் உள்ளோருக்கு பயம் தொற்றிக் கொண்டது. மடத்தில் உள்ளோர் ஏதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை தண்டிப்பதற்கு பதில் மகான், தம்மையே இப்படி வருத்திக்கொள்வது வழக்கம் என்பதால் அவர்களின் அச்சம் அதிகரித்தது.

அதனால், எல்லோரும் சேர்ந்து சுவாமிகள் முன் சென்று நின்றார்கள். ‘‘ எங்களில் யார் என்ன பிழை செய்திருந்தாலும் தயவு செய்து மன்னித்து, உணவு ஏற்கவேண்டும்..!’’ எனப் பணிந்து வேண்டினர்.

மகா பெரியவர் சிரித்துக் கொண்டே, ‘‘நீங்கள் யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை. உங்கள் மேல் எனக்குக் கோபமும் இல்லை. என்னைத் திருத்திக் கொள்ளவே நான் இப்படி உண்ணாவிரதம் இருந்தேன். கொஞ்ச நாட்களுக்கு முன் பிட்சையில் கிடைத்த உணவில் வெகு சுவையாக கீரை சமைத்து இட்டிருந்தார்கள். மிகவும் ருசியாக இருந்ததால், அதனை மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது.
பூஜைகளை முடித்ததுமே,‘ இன்றைய பிட்சையில் கீரை இருக்குமா?’ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. மூன்று நாட்களாக அந்த எண்ணம் மனதில் நின்றதால்தான், வயிறைப் பட்டினி போட்டு அந்த ஆசையை விரட் டினேன்.

ஒரு சந்நியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரக்கூடாது’’ என்றார்.
ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்ததால்தான் மகாபெரியவரின் பெ ருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.

 

January 11, 2012

What is Mounam?

Can’t find any better simpler explanation than this. Thanks Smt Lakshmi for sharing this.

மனஸை அடக்கினவன்தான் முனி.முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம் என்பதே அந்த வார்த்தைக்கு அர்த்தம். முனிவனின் குணத்தில் பேசாமலிருப்பதுதான் தலை சிறந்தது என்று பொதுக் கருத்து இருந்திருப்பதால்தான் மௌனம் என்றால்பேசாமலிருக்கிறது என்று ஆகிவிட்டிருக்கிறது. மனஸை அடக்கினவனின் தன்மை என்றாலும், அதுவே நம் மாதிரி மனஸ் அடங்காதவர்கள் அந்த நிலையை அடைவதற்கு உதவுவதாகவுமிருக்கிறது.
பிரம்மஞானியான முனிவன் மௌனம், மௌனமாயில்லா மலிருப்பது என்ற இரண்டையும் விட்டு விடுகிறான் என்று உப நிஷத் சொல்கிறது. முதலில் படித்துப் பண்டிதனாகி, ரொம்பவும் வாதங்கள் சர்ச்சைகள் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்கிறான். அப்புறம் பாண்டித்யம், பேச்சு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரே நிஷ்டையில் போய் விடுகிறான். அப்புறம் பிரம்ம ஞானியாகிறபோது மௌனத்தையும் விட்டு விடுகிறான், மௌனமில்லா மையையும் விட்டுவிடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. இப்படிச் சொன்னால் அது எப்படி ஸாத்யம்? ஒன்று பேச்சை விட்டு மௌனமாக வேண்டும்; அல்லது மௌனத்தை விட்டுப் பேச வேண்டும். இரண்டையுமே விடுவது என்றால் எப்படி முடி யும்? அந்த ஞானியின் நிலைக்குப் போனால்தான் இது புரியும்.
அவனுக்குப் பேச வேண்டும் என்றோ, பேச வேண்டாமென்றோ எந்த சொந்த அபிப்ராயமும் ஆசையும் இருக்காது. லோகாநுக்ரஹத்துக்காக அவன் மூலம் உபதேசமாகப் பேச்சு வந்தாலும் அவன் தான் பேசுவதாக நினைக்க மாட்டான். அதைவிடப் பெரிய மௌன உபதேசத்தில் தக்ஷிணாமூர்த்தி மாதிரி அவனைப் பராசக்தி உட்கார்த்தி வைத்திருந்தாலும் நாம் மௌன விரதம் என்று ஒன்று அனுஷ்டிக்கிறோம் என்று அவன் நினைக்க மாட்டான். இதைத்தான் மௌனம், அமௌனம் இரண்டையும் விட்ட நிலை என்பது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

December 31, 2011

லோக க்ஷேமம்/New Year Message from Mahaperiyava

Dear Readers,

Wish you all and your family a very happy and prosperous new year….. I am glad to be connected with you all through this blog. Thanks for the immense support you all have been providing me throughout this year.

I carefully chose this article as a New Year message from Periyava. If one reads through this fully, one would understand the seriousness of the message and our responsibility for the year and beyond. I hope my choice is right.

In 2009, we conducted Maharudram in Chicago and it was a grand event. During that event, we collected money from several folks across US. After the event was over, we had some surplus money left. We all decided to spend that money to 7 veda pata salas, that are facing acute problems due to lack of funds. We have been successfully supporting them for the past 3 years now through a trusted source, who have helped us in this process.

When I started this blog, I categorically rejected any idea of attaching commercial activity tied to this blog. Now, based on Periyava’s message and everlasting wish of reviving vedic culture, I am wondering if we all could collectively do something towards this……I know that no single person can do it alone. However we all can collectively could make some difference…..There are few options – (1) you can donate whatever you want to any veda pada sala of your choice directly (2) donate via Kanchi Mutt (3) we all can pool some money and identify the ones that really need our support – particularly the ones in rural places…. As mentioned above, we do have some trusted people who has been doing this for a while – someone similar to Shri Shivaraman…..

I am sure every year, we all plan for some $$$ towards charity etc.  All I request is to keep this cause in mind and support this… If you think, that this idea is wise, please let me know. Based on the response I get, we can take a call. This is just a thought – none is obligated…

Let us pray Sri Mahaperiyava & Kanchi Acharyas to bless us with more devotion to Tripurasundari sametha Lord Chandramouleeswarar.

Wish you all a very happy and prosperous New Year…

Regards

Mahesh Krishnamoorthy

Jaya Jaya Shankara Hara Hara Shankara

 

 

 

‘ லோக க்ஷேமம்’ என்று சொன்னது வேத சப்தத்தாலும், யக்ஞாதி கர்மாக்களாலும் சுஷ்மமாக ஏற்படுகிற நன்மையை மட்டுமல்ல.

வேதாந்தத்தை பார்த்தால் தான் சகல தேசத்தில் உள்ளவர்களுக்குமே பொதுப்படையான மகோன்னத தத்துவங்கள் கிடைக்கின்றன.இந்தத் தத்துவங்களால் எல்லா தேசத்தாரும் ஆத்மவ்ருத்தி அடைகிறார்கள்.  வேதாந்தத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி இவர்களுக்கு வந்தது?

அவர்கள் இங்கே வந்த போது வேதரட்ஷணமே   ஜீவியப்பணி என்று ஒரு கூட்டம் இருந்ததால் தான் ‘இதென்ன இப்படி ஆயுள் முழுவதையும் அற்பணிக்கும் படியான புஸ்தகம்’ என்று அவர்களுக்கு ஒரு ஆர்வம் பிறந்து அதை ஆராய்ச்சி செய்தார்கள். பல விஷயங்களை தெரிந்து கொண்டார்கள்.

குறிப்பாக, உலகம் முழுவதிலும் உள்ள பண்பாடுகளில் (cultures) இருக்கிற ஒற்றுமைகளை இந்த ஆராய்ச்சியால் தெரிந்து கொண்டார்கள்.லோகத்துக்கு எல்லாம் உபயோகம் என்பது மட்டுமில்லாமல், லோகம் முழுக்கவே வேத culture தான் ஆதியில் இருந்தது என்பதே ஏன் அபிப்ராயம்.

நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மற்றவர்களுக்கும் இந்த அபிப்ராயம் வரலாம். எல்லோருக்கும் பொதுவாக ஒன்று இருப்பதாக அறிவதிலேயே சர்வதேச சௌஜன்யம் சர்வமத சமரச பாவனை எல்லாம் வந்து விடுகிறது. அது தவிர, தன தத்துவங்களால் எந்த மதங்களும் தங்களை உயர்த்தி கொள்ளவும் முடிகிறது.

வேதத்துக்காக என்றே சகலத்தையும் தியாகம் செய்யும் ஒரு கூட்டம்நம் தேசத்தில் இல்லாவிட்டால், மற்றவர்களுக்கு அதில் எப்படி பிடிப்பு ஏற்படும்?

உதவாத விஷயம் என்று நாமே ஒன்றை விட்டு விட்டால், மற்றவர்களுக்கு அதன் தாத்பர்யங்களை அறிவதில் எப்படி ஈடுபாடு உண்டாகும்?

ஜாதி அழிவதை பற்றி எனக்கு கவலை இல்லை. லோகக்ஷேமம் போகிறதே என்று தான் கவலைபடுகிறேன்.   வேதரட்ஷணம் விட்டு போனால் இந்த பரம்பரையை மறுபடி உண்டு பண்ண முடியாதே என்றுதான் கவலை படுகிறேன்.

நம் தேசத்தில், சகல ஜாதியாரை உத்தேசித்து மட்டுமின்றி, எல்லா தேச மக்களையும் உத்தேசித்து வேத பரம்பரையை தொடர்ந்து இருக்கப் பண்ணவேண்டியது இப்போதைய தலைமுறையின் பெரிய பொறுப்பு.

லோகம் முழுவதும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்பதே நமது வேதத்தின் சாரம்.

December 28, 2011

அனுஷ்டானங்கள், பூஜா….வெறும் சடங்கு அல்ல! – must read….

      This is one of the common questions at are asked by several of our friends…. I see a lot of folks attend several vedantic lectures, follow some swmijis but they have not cared to do any anushtanams…they failed to understand the need to do that..In deivathin kural, Mahaswami clearly explains that missing anushtanams will make the other path harder or almost impossible for common people like us……

நான் சொல்கிற கர்மாநுஷ்டானங்கள், பூஜை முதலியனவெல்லாம் ‘வெறும்’ சடங்குதானே என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆத்மாநுபவம் என்பது உள் விஷயம். சடங்குகளோ வெளிக் காரியங்கள். இவை எப்படி ஆத்மாநுபவத்துக்கு உதவும் என்பது அவர்களுடைய சந்தேகம்.

உண்மையில் ஆத்மாநுபவம் பெற்றுவிட்டால் சடங்கே தேவையில்லைதான். ஆனால், உண்மையான ஆத்மாநுபவம் நமக்கு வந்துவிட்டதா, அதற்கு நாம் பக்குவப்பட்டு விட்டோமா என்று அந்தரங்க சுத்தமாகப் பார்த்துக்கொண்டால், நாம் அதற்கு

எவ்வளவோ தூரத்தில் நிற்கிறோம் என்று தெரியும். எத்தனையோ ஜன்மாக்கள் எடுத்து, எத்தனையோ கர்மாக்களைச் செய்து, அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமான ஆத்மானந்தத்தை மூடிக் கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்தும் ஸத் வாஸனைகளைப் பெருக்கிக் கொண்டும்தான் பழைய துஷ்கர்மங்களையும்

துர்வாஸனைகளையும் போக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கர்மா தானே நின்று போகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் ‘வெறும்’ சடங்கு என்று சொல்கிற கர்மங்கள், பூஜை எல்லாம் நமக்கு ரொம்பவும் அவசியமானவையே.

உண்மையான ஆத்ம தியானத்துக்குச் சடங்கு வேண்டாம் என்பதுபோல், ஈசுவரன் என்ற மூர்த்தியும் வேண்டாம்தான். ஆனால், அது உயர் நிலையில்தான். ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று இருக்க முடியாது. முதலில் ஈசுவரன் மிகவும் தேவை. அதற்கு எத்தனையோ காரணங்கள். குறிப்பாக ஒன்றைச் சொல்கிறேன். நன்மை எல்லாம் நிறைந்த மூர்த்தியாக நமக்கு ஓர் உத்தம உதாரணம் தேவைப்படுகிறது. தொன்றுதொட்டு ஈசுவரனை இப்படிப்பட்ட அனந்த கல்யாண குணமூர்த்தியாகத்தானே பாவித்து வந்திருக்கிறோம்!

‘ஈசுவரன்’ என்றவுடன் அவரிடம் கெட்ட குணம் ஏதுமே இருக்காது என்றுதானே நமக்கு நிச்சயமாகத் தோன்றுகிறது? அழகு, கருணை, சக்தி, ஞானம் எல்லாவற்றிலும் பூரணமாக ஒன்று உண்டு என்றால் அது ஈசுவரன் என்ற கருத்துத்தான். மனோதத்துவப்படி நாம் எதை நினைத்துக் கொண்டேயிருக்கிறோமோ, அதுவே ஆகிறோம்.

எனவே சடங்கு, பூஜை இவற்றால் உண்டாகிற மற்ற பலன்களோடு, அவை நம்மை நல்லவர்களாக்க மிகுந்த உதவி புரிகின்றன; காரியமற்ற தியான யோகத்தில், ஞான விசாரத்தில் நம்மைச் சேர்க்க நிரம்ப உபகாரம் செய்கின்றன.

December 27, 2011

கார்த்திகைப் பெண்களின் பிள்ளை – முருகன் பற்றி பெரியவர்

பரமசிவனின் நேத்ராக்னியில் இருந்து வந்தவரே குமாரசுவாமி. அவர் ஞானாக்னியானாலும் இதயத்தில் குளிர்ந்தவர். ஏனென்றால் ரொம்ப ஜலசம்பந்தம் உள்ளவர். சரவணம் என்ற பொய்கையில் தான், சிவதேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது. அம்பாளே சரவணப் பொய்கை. அப்பா நெருப்பாக இருக்க, அம்மா நீராக இருந்தாள். ஜலரூபமான கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா. அதனால் முருகனை “காங்கேயன்’ என்று அழைத்து வழிபடுகிறோம்.
எல்லாப் பெண்களும் அவருக்கு மாதா. சஷ்டிப் பெண்களுக்கு அவர் பாலன் ஆனார். கார்த்திகைப் பெண்டிருக்குப் பிள்ளையாகக் கார்த்திகேயர் ஆனார். நட்சத்திரத்தில் ஆறாக இருப்பது கார்த்திகை. திதியில் ஆறாவது சஷ்டி. இவருக்கு ஆறுமுகம். ஆறு அட்சரம் கொண்ட சடாக்ஷரி (சரவணபவ) இவருடைய மந்திரம். மனிதர்களிடமுள்ள காமம் (பெண்ணாசை), குரோதம் (கோபம்), லோபம் ( பற்று), மோகம் (பிற ஆசை), மதம் (ஆணவம்), மாச்சர்யம் (வெறுப்பு) என்ற ஆறு பகைவர்களைக் கொன்று ஞானம் அருளும் ஆறுபடை வீரர் அவரே.
ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை “சக்தி சக்தி’ என்றே சொல்லுகிறோம். வேதமே முக்கியமாக அக்கினி வழிபாட்டு மதம் தான். அக்கினி என்ற வார்த்தையோடு தான் வேதம் ஆரம்பமாகிறது. உபா சனையில் (இறைவனை வழிபடும் முறை) ஒளபாசனம் என்னும் அக்கினி முறையே முக்கியமானது. இதற்கு சுப்பிரமணியரே அதிதேவதையாக இருக்கிறார்.

December 13, 2011

ஞானம் to ஆனந்தம்

நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒருநாள் நாம் ஆசைப்படும் வஸ்துகள் நம்மைவிட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை  ராஜிநாமா செய்துவிட்டால், அத்ததனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனையாலும் நம்மைக் கட்டிப்போட்டுக் கொண்டு துக்கப்படுகிறோம். ஆசைகளைக் குறைக்கக் குறைக்கத் துக்க ஹேதுவும் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்த்தைப் படவேண்டாம். அப்படியே பரமாத்மாவில் கரைந்த ஆனந்தமாகிவிடலாம்.

மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமை அடைகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்துவிடுகிறான்? நாயும், நரியும், கரப்பான் பூச்சியும் கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாகின்றன. பொதுவாக மனிதனும் இதற்கு மேல் ஏதும் செய்வதாகத் தெரியவில்லை. அப்பொழுது அவனுடைய விசேஷ ஞானத்தில் பெருமைப் பட என்ன இருக்கிறது. எல்லாவற்றிலும் பெரிய ஞானம் நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். மனிதன் இப்படிப் பட்ட நிலைத்த ஞானத்தைப் பெறுகின்றானா? யோசித்துப் பார்த்தால், பரம தாத்பரியமாகத் தெரிவது, இந்த ‘ஞானம்’,

’ஆனந்தம்’.  ‘நாம்’. என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞானமயமான ஆனந்தம் என்று கண்டுகொள்வோம்.

வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கின்றது. நமது உண்மை சொரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கூட ‘நம்முடையது’ என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும் போதுதான், அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்த சம்பந்தம் போய்விட்டால், ஆனந்தம் போய்விடுகிறது.

உதாரணம் சொல்கிறேன்’

ஒருவருக்குகச்சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் முதலில், வருஷத்துக்கு வருஷம் விளைச்சல் அதிகமாவதாக வைத்துக்கொள்ளுங்கள். ‘இந்த வயல் என்னுடையது’ என்பதால் விளைச்சல் அதிகமாகும் போதெல்லாம் அவருக்கு மனம் குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை வேறு ஒருவருக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார்.  மறுபடி அடுத்த வருஷம், அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும் போது இவர் மனம் குளிரவா செய்கிறது? “அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரி பொட்டலாக இருந்தது. இப்போது எவனோ ஒருத்தனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதே!” என்று வயிற்றெரிச்சல் தான் உண்டாகிறது. ‘எனது’ என்ற சம்பந்தம் இருந்தமட்டும்தான் அதிக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.

என்னிடம் பல பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து, ”அவர்களுக்குச் சித்த பிரமை இருக்கிறது. அது நிவிருத்தியாகவேண்டும்” என்று கேட்டுக் கொள்வார்கள். இதற்கு நேர் மாறாக ஒரு தகப்பனார் நடந்து கொண்டார். அவர் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டவர். இளையாளுக்கு, மூத்தாள் பிள்ளையோடு ஒத்து வரவில்லை. ஏகச்சண்டை போட்டுக் குடும்பம் பிரிந்தது. இவர் இளையாள் தரப்பிலேயே இருந்தார். பிள்ளையைக் கைவிட்டுவிட்டார். அவர் ஒரு நாள் என்னிடம் வந்து, ’மூத்தாள் பிள்ளை இளையாளுக்கு பில்லி சூனியம் வைத்தான். நல்ல வேளையாக அது அவனையே திருப்பி அடித்துவிட்டது.’ என்றார். எல்லாத் தகப்பனார்களும் பிள்ளைக்குச் சித்தப் பிரமை ஏற்படும் போது கவலைப் படுகின்றார்கள் என்றால், இவரோ அதிலேயே சந்தோஷப்படுகிறார். ஏன்? இவருக்கு அவனிடம் ‘நம்முடையவன்’ என்ற சம்பந்தம் போய்விட்டது. இளையாளிடம் மட்டும் ‘நம்முடையவள்’ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் தான் அவளுக்கு ஹானி யில்லை யென்றால் இவர் ஆனந்தப்படுகிறார்.

மாயைக்கு ஆளான ‘நான்’ என்பதன் சம்பந்தத்துக்கே இத்தனை ஆனந்தம் இருக்கின்றதென்றால், எதிலும் சம்பந்தப் படாமல் பூரண ஞானமாக இருக்கின்ற அந்த வெறும் ‘நான்’ எத்தனை ஆனந்தமயமாயிருக்கும்!

வெல்லம் போட்டால் பாகற்காய்க் கறியிலும் சிறிது தித்திப்பு இருப்பதை உணர்கிறோம். வெல்லத்தின் சம்பந்தத்துக்கே தித்திப்பு இருப்பதால் அசல் வெல்லம் தித்திப்பு மட்டுமே என்பதில் சந்தேகம் என்ன! கசப்பான துக்க உலகத்தின் ‘நான்’ என்பதில் மாயக் கிரணங்கள் சம்பந்தப்படுகிற போதே அதில் தித்திப்பு ஆனந்தத்தைப் பெறுகிறோம் என்றால், அந்த நான் மட்டுமே ஸ்வச்சமாஅக நிற்கிறபோது, எத்தனை தித்திப்பாக ஆனந்தமயமாக இருக்கவேண்டும்?

சிறிய ஓட்டைகள் கொண்ட சட்டியால் ஒரு தீபத்தை மூடிவைத்தால், துவாரங்கள் வழியாக மெல்லிய ஒளிக் கிரணங்கள் வெளிவரும். மாயையால் மூடப்பட்ட ஆத்ம தீபத்திலும் இந்திரிய துவாரங்கள் வழியாகக் கொஞ்சம் கொஞ்சம் ஆனந்த ஒளியைப்பார்க்கிறோம். மாயச் சட்டியை உடைத்துவிட்டால் ஆனந்த ஜோதிர்மயமாகவே ஆகிவிடலாம். துவாரங்களின் அளவைப் பொருத்துப் பலவேறு அளவுகளில், ஒளி வெளி வந்தாலும் உள்ளேயிருப்பது ஏக ஜோதிதான். நாம் மாயச் சட்டியை உடைத்துவிட்டால், உலகத்தில் பார்க்கும் வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து எலாம் ஒன்றான ஆனந்த ரூபமாகவே தெரியும்.

மாயையை எப்படி உடைப்பது என்றால் ஆசசைகளை அடக்குவதுதன். வழி. மனம் இருக்கும் வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கிவிட வேண்டும்.மனம் அடங்கி விட்டால் ‘மரண நிலைமையில் இருப்பது போல் ஒரு சக்தியுமின்றி ஜடம் மாதிரி ஆவோம்’ என்று எண்ணக் கூடாது. மாறாக, இதுதான் சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை. சாதாரணமாக ஏதாவது ஒரு அங்கத்தில் ஊனம் உளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீக்ஷண்யம் இருக்கும்.. பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவது போல், ஒரு அங்கத்தில் இருப்பதே இன்னொன்றில் தீக்ஷண்யத்தைத் தருகிறது . ஆத்ம சக்தியைப் பலவாறாகச் சிதறச் செய்யும் எல்லா இந்திரியங்களையும் அடைத்துக் கொண்டுவிட்டால், அப்போது சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக, ஆனந்தமாகக் கூடி நிற்கும். மிகுந்த சக்தியுடன் உலகுக்கு நல்லது செய்யலாம்.

ஆத்ம ஞானம் பெற்ற ரிஷிகளின் சக்தியே இதற்கு திருஷ்டாந்தம். சகல லோகங்களுக்கும், சகல காலங்களுக்கும் சென்று அவர்கள் விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். நம் காதுக்குக் கேட்காத சப்தங்களை ஆகாயத்தில் கேட்டு, வேத மந்திரங்களைக் கொடுத்தார்கள். “எப்படி ஆசையை அடக்குவது? எப்படி மனத்தை நிறுத்துவது? எப்படி ஆனந்தத்தை அடைவது ” என்று” கேட்கிறவர்கள்,அந்த வேதங்கள் சொன்னபடி நடந்தாலே போதும்; முடிவில் பேரானந்தம் அடையலாம். இதற்குப் பரமேசுவரன் அநுக்கிரஹம் செய்வாராக. 

Tags:
December 6, 2011

Sri Sugi Sivam answers on women and vedic chanting…

பெண்கள் வேதமந்திரங்களைச் சொல்லக்கூடாது என்று சிலர் தடுக்கிறார்களே…? பெண்களை அவமானப்படுத்தும் முயற்சி இல்லையா இது…?

பதில் சொல்கிறார் சுகி.சிவம்.

சம்ஸ்கிருதமோ,இந்து மதமோ பெண்களை விலக்கி வைக்கவில்லை. வேத காலத்திலேயே பெண் ரிஷிகள் இருந்திருக்கிறார்கள்.

பெண்கள் வேதம் ஓதுவதை சமூகம் ஏற்கவில்லை.காரணம்,வேதம் ஓதும்போது நாபியில் இருந்து ஒலி எழவேண்டும். நன்கு வாய் பிளந்து ஒலி-உச்சரிப்பு-தொனி குறையாது சொல்ல வேண்டும்.இப்படிச் செய்தால் குரல் மிக மிகக்
கனத்துவிடும். சிறந்த வேத விற்பன்னர்கள் பலர் அடித்தொண்டையில் இருந்து கனத்த குரலில் பேசுவதைக் கேட்டிருக்கலாம்.பெண்கள் குரல் அப்படிக் கனத்துப்
போனால், கேட்கச் சகிக்காது. அம்பிகை ம்ருது பாஷிணி என்கிறது லலிதா ஸகஸ்ரநாமம்.வேத அத்யயனம் செய்தால் பெண்களின் குரல் அழகு போய்விடும்.

நாபியில் இருந்து காற்றை எழுப்பி உச்சரிப்பதால் வயிறு பருத்துக்கொண்டே வரும்.கொடியிடை என்கிற பெருமை போய்விடும்.பூசணி வயிறு வாய்த்துவிடும். பெண்மையை, அழகை,மென்மையைக் காப்பது அவமானப்படுத்தும் முயற்சியா..?

December 4, 2011

Cycle Pedal by Periyava – MUST READ

Thanks to Professor Sridhar for sending me this….

This article was written in 1947 that reflects the trend in which how vedic traditions were being forgotten in those days itself. If Periyava were to comment on today’s condition, not sure how He would…

I am too young to comment this  in this forum as there are several senior devotees – yet, let me say this hoping that this will be taken in the right sense….As devotees of Paramacharya, it is not only sufficient to read and mesmerized by His thapas and anugrahas and all miracles etc, we should attempt to follow His advises in whatever way possible. We dont have to target being a gnani etc…..Simplest thing to follow is doing our nithyakarmas (sandhyavandhanam). All our Periyavas have talked so many hours highlighting the importance and power of doing this.

Tags:
December 3, 2011

Importance of Sumangali Puja

கலியுகத்திற்கு உகந்த பூஜை சுமங்கலி பூஜை. இப்பூஜையினால் கொடிய பாவங்களும் தோஷங்களும் விலகும். இப்பூஜையை பலரும் கூடி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறிய அளவிலாவது செய்ய வேண்டும் என்பது காஞ்சிப்பெரியவரின் விருப்பம்.

ஒரு சந்தர்ப்பத்தில் வயதான தம்பதியர், தட்டில் பழம், பூ, அம்பாளுக்கு பட்டுப் புடவை, ரவிக்கையோடு பெரியவரைக் காண காஞ்சிபுரம் வந்திருந்தார்கள். மாயவரத்தில் இருந்து வந்த அவர்களிடம், “”காவிரிக்கரையில் இருந்து வரும் நீங்கள் துலா ஸ்நானம் (ஐப்பசி மாதம் காவிரியில் நடக்கும் தீர்த்த நீராடல்)செய்து விட்டீர்களா?” என்று கேட்டார்.

தம்பதிகள் இருவரும்,””ஆமாம்! சுவாமி! துலாஸ்நானம் ஆயிடுச்சு!” என்றனர்.

பெரியவர் அடுத்த கேள்வியாக,””மாயவரம் ஆற்றங்கரைக்கு துலாஸ்நானம் செய்ய ஏகபட்ட சுமங்கலிகள் வருவாளே!” என்றார்.

“”வருவா” என்றனர் அவர்கள்.

“”அது சரி! உங்க அகத்திலே சுமங்கலிப் பிரார்த்தனைஎல்லாம் ஒழுங்கா நடக்கிறதா?” என்று பெரியவர் கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் தம்பதியர் முகம் வாடினர்.

“”முன்பெல்லாம் ஒழுங்காக நடந்தது. இப்போ சுமங்கலி பிரார்த்தனை நடந்து பல வருஷமாச்சு!” என்று சொல்லி அந்த அம்மையார் கண்ணீர் விட்டு அழுதார். அந்த அம்மாளின் கணவர் மனைவியை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்தினார். பெரியவரிடம்,””சுவாமி! என்னோட கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண். ஒரே ஒரு பெண். அவளும் மூன்று வருஷத்திற்கு முன் இறந்துவிட்டாள். அதற்கு முன்பே சுமங்கலி பிரார்த்தனையை நடத்தாமல் விட்டுவிட்டோம். இப்போ எங்கள் குடும்பத்தில் வசதிக்கு எந்தக் குறைச்சலும் இல்லை. ஆனா, குடும்பத்தில் யாருக்கும் சுகமோ, மனநிம்மதியோ இல்லை. என் ஐந்து வயது பேரனுக்கு பேச்சு வரவில்லை. என் மூத்த நாட்டுப்பொண்ணுக்கோ (மருமகள்) ரத்தப் புற்றுநோய். மனநிம்மதி வேண்டியே உங்களைத் தரிசிக்க வந்தோம்,”என்று சொல்லி முடித்தார்.

சற்றுநேரம் மவுனம் காத்த பெரியவர், “”இப்போ என் முன் வைத்திருக்கும் பழம், பூ தான் உங்களுக்கு கொடுக்கும் பிரசாதம். கொண்டு வந்த பட்டுப்புடவையை மூத்த நாட்டுப் பொண்ணுக்கு கொடுத்து கட்டிக்கச் சொல்லுங்க! இனிமேல் பட்டுப்புடவையே வேண்டாம். அது நல்லதல்ல. அது ஒண்ணும் உசத்தியானது
கிடையாது. ஆடம்பரம் நமக்கு எதுக்கு? குலதெய்வத்திற்கு கொண்டு வந்த பூவைப் போடுங்கோ. அதோடு முக்கியமான ஒரு காரியமும் செய்ய வேணும்,”என்று சொல்லி பெரியவர் பேச்சை நிறுத்தினார்.
கேட்டுக் கொண்டிருந்த தம்பதியர் வணங்கி, “”பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் அதை அப்படியே செய்றோம்” என்று கண் கலங்கினர்.

“”உன் சகோதரியின் நினைவுநாளில் 108 சுமங்கலிகளுக்கு சாதாரண நூல் புடவை, ரவிக்கை, மங்கல திரவியங்கள் கொடுப்பதோடு, முடிஞ்சா அன்னதானமும் செய்யவேண்டும். அதன்பிறகு எல்லாம் நன்மையாகவே முடியும்!” என்று சொல்லி அனுப்பி வைத்தார். தம்பதிகள் பெரியவரின் உத்தரவுபடியே சுமங்கலி பூஜையைச் செய்தனர். மூன்று ஆண்டுகளில் பேரனும் பேசத்தொடங்கி விட்டான். மூத்த மருமகளும் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணம் பெற்றார். பெரியவரின் வழிகாட்டுதலால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.

December 3, 2011

Palghat Mani Iyer

December 3, 2011

Dhandam