First 15 mts of the video is completely new – never seen before footage….The last 15 mts is the video on Thotakashtakam.
ஜகத்குரு
உங்களை ஜகத்குரு என்கிறார்களே, நீங்கள் என்ன அகில ஜகத்துக்கும் குருவா என்றூ காசியில் பண்டிட்கள் பரமாச்சாரியார் காசிக்கு விஜயம் செய்தபோது கெள்விகணை விடுத்தார்கள்.அவர்களுக்கு பணிவாக பதில் சொன்னார் ஜகத்குரு - ”உலகில் உள்ள எல்லாரையும் எல்லாப்பொருளையும் குருவாக கருதுகிறேன் அவ்வளவுதான்”.
அந்த நிதர்ஸனம் நமக்கு புரிவதற்கு பல ஆண்டுகள் ஆகியது.மேற்கொண்டு படியுங்கள் நீங்களும் உடன்படுவீர்கள் அவர் மட்டும்தான் ஜகத்குரு என்று.
காஞ்சி மகா பெரியவா ஓரிடத்தில் தங்கியிருந்தார்.அன்று ‘ஏகாதசி’.தண்ணீர் கூட சாப்பிடமாட்டார்.அங்கே ஒருவர் மின்சாரம் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். மணி ஆகிக் கொண்டே இருந்தது. அதைப் பார்த்த பெரியவா,”இந்த ஆள் சாப்பிடவே போகாமல் வெலை செய்துகொண்டிருக்கிறார்! சாப்பிட்டு விட்டு வரச்சொல்லுங்கள்.”என்கிறார். அதைக் கேட்டுவிட்டு அவர் “, இன்று ஏகாதசி, நான் சாப்பிட மாட்டேன்.” என்றார்.
அவர் மராட்டிக்காரர்.மராட்டியர் ஏகாதசி உபவாசங்களில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.ஆச்சர்யப்பட்ட பெரியவா, “சரி,சாப்பிட வேண்டாம்.டீ யாவது குடித்துவிட்டு வரச்சொல்லுங்கள்.” என்றார். அவரோ, “நான் தண்ணி கூடக் குடிக்க மாட்டேன்.நீங்ககவலைப்பட வேண்டாம்.”என்றார். அதைக் கேட்டதும் அன்று முதல் ஏகாதசியில் குடித்த வந்த பாலையும் பெரியவா விட்டுவிட்டார். அந்த பழுது பார்க்க வந்தவரிடமிருந்து ஓர் உபதேசம் பெற்றதாக நினைத்தாரோ இந்த ஜகத்குரு!
இப்படி ஏகாதசி தண்ணீர்கூட இல்லாமல் கழிந்தது. மறுநாள் ‘துவாதசி’. ஏகாதசியில் பட்டினி கிடக்காவிட்டால்கூட நாமெல்லாம் துவாதசியில், ‘பாரணை’ என்று சொல்லிக்கொண்டு சீக்கிரமாகச் சாப்பிட உட்கார்ந்துவிடுவோம்.
சாஸ்திரப்படி, துவாதசி ஸ்ரவண நட்சத்திரத்தில் வந்துவிட்டால் ஏகாதசிக்கு பட்டினி கிடக்காவிட்டாலும் துவாதசியில் தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது என்பர். அப்படிப்பட்ட துவாதசியாக அமைந்துவிட்டதால் பெரியவாளுக்கு அன்றும் உபவாசம். அடுத்த நாள் ‘பிரதோஷம்’. அதில் பகலெல்லாம் விரதமிருந்து இரவு ‘சிவபூஜை’ பண்ணி, சிவ தரிசனமான பின்தான் உண்பது வழக்கம். அதிலும் ஞாயிற்றுக்கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால் சூரியாஸ்தமனம் ஆன பிறகு சாப்பிடக் கூடாது. நாலாம் நாள் ‘மகாசிவராத்திரி’. அன்றும் உபவாசம். தீர்த்தமாட மட்டும்தான் சுவாமிகள் தண்ணீரைப் பார்த்தார்.
அவ்வளவு கடுமையாக உபவாசங்களைத் தொடர்ந்து அனுஷ்டித்தவர் அவர், ‘வேளாவேளைக்குப் பசியெடுக்காத நிலை எனக்கு இன்னும் வரவில்லை’ என்கிறார்.
Speaking Without Speaking: Yogi Ramsuratkumar & Mahaperiyava
Not sure if I posted this incident already – yet, an amazing incident….Read on….
This slideshow requires JavaScript.
Once, during the mid-eighties, Kanchipuram Mahaswamiji Sri Chandrasekarendra Saraswati Swamiji (Maha Periyava) desired to see Bhagavan Yogiramsuratkumar and invited him through a personal attendant. He asked the personal attendant to bring Yogiji.
Yogiji, accepting the invitation of Kanchi Maha Periyava, went to Kanchipuram. Maha Periyava sat down and so did Yogi. Maha Periyava and Yogi looked at each other. They did not speak a word to each other verbally. After looking at each other for sometime, Kanchi Periyava, laughing lightly, said to his personal attendant who had brought Yogi to Kanchi, “The matter for which he came is over. You may take him back to Tiruvannamalai.”
Did they meet just to see each other or did they exchange some news? Nothing could be comprehended. Yogi went back to Tiruvannamalai.
Later, when Yogiji was asked what really happened, as there was no conversation and yet Maha Periyava remarked that the work was over, Yogi Ramsuratkumar explained thus:
“We both spoke to each other – through the mind.
Kanchi Periyava said, ‘Bodendra chanted Rama Nama throughout his life. He was a ‘Peettadipathi’ of the Kanchi Kamakoti Peetam. Later, installing his successor for the Peetam he went around giving ‘upadesa’ of Rama Nama for all, irrespective of caste and creed; he offered the ‘upadesa’ that the Name of the Lord was the only ‘gati’ (succour) for all in this Kali Yuga. Living in this manner his body was transformed into a ’siddha sarira’. He attained ‘jiva samadhi’ in Govindapuram on the banks of the Cauvery. Living in ‘jiva samadhi’ for the past 300 years, to date, he is incessantly chanting Rama Nama. You may go and remain in that Govindapuram where Bodendra is.’
This beggar replied, ‘No! No! For this beggar Tiruvannamalai is enough.’
Acharya also said, ‘OK’.
This is what we spoke!”
Hinduism – a kitchen religion – a must-read
It seems that Nehru once joked that Hinduism is a kitchen religion. Although he is an idiot, who said this without any meaning, our Periyava explains how our whole philosophy starts from the kitchen. .. This is from “Deivathin Kural” – I guess Vol 1.
In today’s world, we’ve completely forgotten the foundation – temptations, our lifestyle etc has pushed us to eating outside a mandatory thing….By reading this, one can realize why “aathu saapadu” is critically important for spiritual progress.

ராஜா ஒர்த்தன் இருந்தான். அவனுக்கு ஒரு குரு. அவர் பெரிய மஹான். அடிக்கடி அரண்மனைக்குப் போயி அவனுக்கு நல்ல உபதேசங்களைப் பண்ணிட்டு வருவார். அந்தமாதிரி ஒருநாள், காலம்பற போனவர், ரொம்ப நேரமா அநேக விஷயங்களைப் பேசிண்டே இருந்தாரா!…….மத்யான்னம் வந்துடுத்து. ராஜா சொன்னான் ” இங்கியே பிக்ஷை பண்ணிட்டு போகணும். ஆசார நியமத்தோட, ஒங்களுக்குன்னு தனியா சமைச்சுப் போட ஏற்பாடு பண்றேன்..”ன்னு ரொம்ப கெஞ்சினான். மறுக்க முடியாம ஒத்துண்டார். நன்னா ஸம்ருத்தியா போஜனம் ஆச்சு! பஞ்சபக்ஷ்ய போஜனம் பண்ணினதால அரண்மணைலேயே கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிண்டார். எங்க? ராஜாவோட ‘ரூம்’ லேயே படுத்துண்டார். படுத்துண்டு இருக்கறச்சே, அங்க ஒரு சுவர்ல தொங்கிண்டு இருந்த ஒரு முத்து ஹாரம் அவர் கண்ணுல பட்டுது. அது ரொம்ப ஒஸ்தியான முத்து! சாக்ஷாத் ராஜாவோடது!
நல்ல வைராகியான குருவுக்கு அன்னிக்கு என்னவோ அந்த முக்தாஹாரத்தை பாத்ததும், அதை எடுத்துக்கணும்…ன்னு ஒரு எண்ணம் ரொம்ப ‘ஸ்ட்ராங்’ ஆ உண்டாச்சு! பக்கத்ல யாருமே இல்லாததால, சட்னு அதை எடுத்து வஸ்த்ரத்துக்குள்ள ஒளிச்சு வெச்சுண்டுட்டார். சாதாரண மனுஷா பண்ணினாலே, திருட்டு..ங்கறது மஹாபாவம், தப்பு! இவரோ, பெரிய மஹானா, ராஜகுருவா இருக்கப்பட்டவர், கொஞ்சங்கூட மனஸை உறுத்தாம, இப்பிடி பண்ணிப்டு, தாம்பாட்டுக்கு ஆஸ்ரமத்துக்கு போய்ட்டார்! சித்தே நாழி ஆனப்புறம், ஹாரம் திருட்டுப் போன சமாச்சாரம் அரண்மனைல தெரிஞ்சுது. ஒர்த்தரையும் விடலை. எல்லாரையும் ‘செக்’ பண்ணியாச்சு. ஆனா, வாஸ்த்தவத்ல அதுக்கு காரணமான குருவை மட்டும் யாருமே கொஞ்சங்கூட சந்தேஹப்படலை. ஏன்னா………..அவர் அன்னிவரைக்கும் அவ்வளவு ஸுத்தரா இருந்தவர்!
“பழி ஓரிடம், பண்டம் ஓரிடம்”…ன்னு யார் யாரையோ பிடிச்சு, மரியாதைப்பட்டவாளை வாயால கேட்டு, ஆள் படைகளை அடிச்சு, ஒதைச்சு “enquiry “, “investigation ” அது இதுன்னு நடத்தினா! தடயம் ஒண்ணும் கெடைக்கலை. இப்டியே ஒரு நாள் முழுக்கப் போச்சு! அன்னிக்கு ராத்ரி, “குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததால” இல்லே; மத்யான்னம் பண்ணினது போறாதுன்னு, ராத்ரியும் ஏதோ கன்னா பின்னா…ன்னு எண்ணம்! அது வேணும் இது வேணும்…ங்கற ஆசைனால தூக்கமே வரலை அந்த குருவுக்கு. ஸம்ருத்தியா சாப்டுட்டு ராப்பூரா தூங்காததால, ஒரே அஜீர்ணம்! மறுநாள், முழிச்சுக்கறச்சேயே வயத்ல ‘கடமுடா’ பண்ண ஆரம்பிச்சுது. பேதி பிடிச்சுண்டது.
அஞ்சாறு தடவை போய் போய் ரொம்ப பலஹீனமா ஆய்ட்டார்! ஒடம்பு இப்பிடி ஆயாஸப்பட்டாக்கூட பேதியானதுலேர்ந்து அவர் மனஸ்ல ஒரு தெளிர்ச்சி உண்டாச்சு. இதுக்கு மேல ‘போறதுக்கு’ ஒண்ணும் இல்லேங்கற மாதிரி ஒடம்பு கிழிஞ்ச நாரா ஓஞ்சு போன ஸ்திதில………..அவரோட வழக்கமான ஒசந்த மனஸ் அவருக்கு வந்துடுத்து! அந்த பட்டபடைக்கற வெய்யில்ல, ஒடம்பு அசதியக்கூட பாக்காம, ஓடினார் முத்து மாலையைத் தூக்கிண்டு ராஜாகிட்ட! அவன்கிட்ட சொன்னார்……
“என்ன காரணமோ தெரியலை…….நேத்தி மத்யானத்துலேர்ந்து என் புத்தி கெட்டுப் போயி, அந்த கெட்ட ஆவேசத்ல, நான்தான் அந்த மஹா பாபத்தை பண்ணிட்டேன்! நிர்தோஷமான மிச்ச எல்லாரையும் சிக்ஷை பண்ணின பாபத்துக்கு நான் காரணமாயிட்டேன். எல்லாத்தையும் சேத்து வெச்சு, நேக்கு தண்டனை குடு!” ன்னு ரொம்ப பொலம்பினார். ராஜாவோ நம்ப மாட்டேங்கறான்! “நீங்க சொன்னது ஒரு நாளும் நடந்திருக்காது. நெஜத்திருடன் பயந்து போய் காப்பாத்தச் சொல்லி ஒங்க கால்ல விழுந்திருப்பான்…..ஒங்களோட பரம தயாள குணத்தால, நீங்களே குத்தத்தைப் பண்ணின மாதிரி சொல்றேள்…”ன்னு சொல்லிட்டான். ஆனா, குரு ரொம்ப கெஞ்சி கெஞ்சி தன்னை நம்பும்படி சொன்னார். அவனோ பாதி மனசோட, “நீங்க சொல்றது நெஜந்தான்…ன்னு ஒத்துண்டாலும், நிச்சயமா இதுக்கு ஏதோ அடிப்படைல காரணம் இருக்கணும். “circumstance ,motive பாத்துதானே sentence பண்ணனும்னு law வே இருக்கோல்லியோ?” ன்னு விஜாரிச்சான்.
கடைசில குரு சொன்னார்… “வழக்கத்துக்கு மாறா நேத்திக்கு நான் அரண்மனைல சாப்டதால, அன்ன தோஷம் உண்டாகி, அது த்வாரா……….குண தோஷம் உண்டாகியிருக்கு. ராத்ரிகூட மனஸ் கெட்டே இருந்தது. வயறு கெட்டு “அதிஸாரம்” உண்டானதால, புத்தில தெளிவு உண்டாச்சு………அதுனால, நேத்து பக்வம் பண்ணின அன்னம் எங்கேர்ந்து வந்துதுன்னு விஜாரி” ன்னு ராஜாகிட்ட சொன்னார்.
அன்னத்துல கார்போஹைட்ரேட், வைட்டமின் மட்டும் இல்லே! அதை சமைச்சவர், காய்கறிகளை தானமாவோ, வெலைக்கோ குடுத்தவர், அதை பயிர் பண்ணினவர்…ன்னு ஒரு மொழநீள லிஸ்ட்டுக்கு, சம்பந்தபட்டவா எல்லாரோட குணதோஷங்களும் அந்த அன்னத்ல ‘டெபாசிட்’ ஆகி சாப்டறவா உள்ளே போறது.
ராஜா ஒடனே உக்ராண மணியக்காரன்கிட்ட முந்தின நாள் குருவுக்கு சமைச்ச அன்னம் எங்கேர்ந்து வந்துது?ன்னு விஜாரிச்சான். அவனும் விசாரணை பண்ணிட்டு சொன்னான்…….”கொஞ்சநாளைக்கு முன்னால, கடைத்தெருவுல இருக்கற மளிகைக் கடைல ரொம்ப ஒசந்ததான ஸன்ன சம்பா அரிசி மூட்டைகளை ஒரு திருடன் திருடி முதுகுல தூக்கிண்டு போறச்சே, ராஜசேவகாள்கிட்ட பிடிபட்டான். அவங்கிட்ட இருந்த மூட்டையை அரண்மனைல வெச்சிருந்தா. மளிகைக் கடைக்காரா யாருமே அரிசி மூட்டையை ‘டிமாண்ட்’ பண்ணிண்டு வராததால, அது அரசாங்கத்துக்கு சொந்தம். நேத்திக்குத்தான் குருவுக்காக, அந்த ஒசந்த அரிசியை சமைச்சோம்”. குருவுக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு.
“பாத்தியா? அதுனாலதான் ராஜாவோட அன்னம் கூடாது…ன்னு சாஸ்திரம் சொல்றது. கொஞ்சநேரம் திருடனோட முதுகுல ஒக்காந்திருந்த அரிசி மூட்டை எனக்குள்ள போய் என்னை திருட வெச்சுடுத்தே! எப்படி ஒர்த்தன் ஒடம்புல இருக்கற வ்யாதி அணுக்கள் இன்னோர்த்தன் ஒடம்புக்குள் தொத்திகறதோ……..அதே மாதிரி, கெட்ட எண்ணங்களோட பண்ற கார்யங்கள்ள, அதை பண்ணினவனோட மானஸீக அணுக்கள் ஒட்டிண்டு இருக்கும். அந்த திருடனோட திருட்டு குண பரமாணுக்கள் எனக்குள்ள போனதோட ‘ரிசல்ட்’டை பாத்தியா?” ன்னு கேட்டார்.
அதுனாலதான் கண்ட எடத்ல கண்டவா கையால சமைச்சு சாப்டரதால நம்ம மனஸ் கெட்டுப் போக ரொம்ப ஹேதுவாயிருக்கு. ஆத்துலேயே சமைச்சாலும், அன்னதோஷம் போறதுக்குத்தான், என்ன சமைக்கறோமோ அதை பகவானுக்கு நைவேத்யம் பண்ணிட்டா, அதுல இருக்கற கொஞ்சநஞ்ச தோஷமும் போய்டும். மனஸும் கெடாது. சரீரமும் கெடாது”.
What is Mounam?
Can’t find any better simpler explanation than this. Thanks Smt Lakshmi for sharing this.

மனஸை அடக்கினவன்தான் முனி. ‘முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்’ என்பதே அந்த வார்த்தைக்கு அர்த்தம். முனிவனின் குணத்தில் பேசாமலிருப்பதுதான் தலை சிறந்தது என்று பொதுக் கருத்து இருந்திருப்பதால்தான் ‘மௌனம்’ என்றால் ‘பேசாமலிருக்கிறது’ என்று ஆகிவிட்டிருக்கிறது. மனஸை அடக்கினவனின் தன்மை என்றாலும், அதுவே நம் மாதிரி மனஸ் அடங்காதவர்கள் அந்த நிலையை அடைவதற்கு உதவுவதாகவுமிருக்கிறது.
பிரம்மஞானியான முனிவன் மௌனம், மௌனமாயில்லா மலிருப்பது என்ற இரண்டையும் விட்டு விடுகிறான் என்று உப நிஷத் சொல்கிறது. முதலில் படித்துப் பண்டிதனாகி, ரொம்பவும் வாதங்கள் சர்ச்சைகள் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்கிறான். அப்புறம் பாண்டித்யம், பேச்சு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரே நிஷ்டையில் போய் விடுகிறான். அப்புறம் பிரம்ம ஞானியாகிறபோது மௌனத்தையும் விட்டு விடுகிறான், மௌனமில்லா மையையும் விட்டுவிடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. இப்படிச் சொன்னால் அது எப்படி ஸாத்யம்? ஒன்று பேச்சை விட்டு மௌனமாக வேண்டும்; அல்லது மௌனத்தை விட்டுப் பேச வேண்டும். இரண்டையுமே விடுவது என்றால் எப்படி முடி யும்? அந்த ஞானியின் நிலைக்குப் போனால்தான் இது புரியும்.
அவனுக்குப் பேச வேண்டும் என்றோ, பேச வேண்டாமென்றோ எந்த சொந்த அபிப்ராயமும் ஆசையும் இருக்காது. லோகாநுக்ரஹத்துக்காக அவன் மூலம் உபதேசமாகப் பேச்சு வந்தாலும் அவன் தான் பேசுவதாக நினைக்க மாட்டான். அதைவிடப் பெரிய மௌன உபதேசத்தில் தக்ஷிணாமூர்த்தி மாதிரி அவனைப் பராசக்தி உட்கார்த்தி வைத்திருந்தாலும் ‘நாம் மௌன விரதம் என்று ஒன்று அனுஷ்டிக்கிறோம்’ என்று அவன் நினைக்க மாட்டான். இதைத்தான் மௌனம், அமௌனம் இரண்டையும் விட்ட நிலை என்பது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.
அனுஷ்டானங்கள், பூஜா….வெறும் சடங்கு அல்ல! – must read….
- This is one of the common questions at are asked by several of our friends…. I see a lot of folks attend several vedantic lectures, follow some swmijis but they have not cared to do any anushtanams…they failed to understand the need to do that..In deivathin kural, Mahaswami clearly explains that missing anushtanams will make the other path harder or almost impossible for common people like us……
நான் சொல்கிற கர்மாநுஷ்டானங்கள், பூஜை முதலியனவெல்லாம் ‘வெறும்’ சடங்குதானே என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆத்மாநுபவம் என்பது உள் விஷயம். சடங்குகளோ வெளிக் காரியங்கள். இவை எப்படி ஆத்மாநுபவத்துக்கு உதவும் என்பது அவர்களுடைய சந்தேகம்.
உண்மையில் ஆத்மாநுபவம் பெற்றுவிட்டால் சடங்கே தேவையில்லைதான். ஆனால், உண்மையான ஆத்மாநுபவம் நமக்கு வந்துவிட்டதா, அதற்கு நாம் பக்குவப்பட்டு விட்டோமா என்று அந்தரங்க சுத்தமாகப் பார்த்துக்கொண்டால், நாம் அதற்கு
எவ்வளவோ தூரத்தில் நிற்கிறோம் என்று தெரியும். எத்தனையோ ஜன்மாக்கள் எடுத்து, எத்தனையோ கர்மாக்களைச் செய்து, அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமான ஆத்மானந்தத்தை மூடிக் கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்தும் ஸத் வாஸனைகளைப் பெருக்கிக் கொண்டும்தான் பழைய துஷ்கர்மங்களையும்
துர்வாஸனைகளையும் போக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கர்மா தானே நின்று போகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் ‘வெறும்’ சடங்கு என்று சொல்கிற கர்மங்கள், பூஜை எல்லாம் நமக்கு ரொம்பவும் அவசியமானவையே.
உண்மையான ஆத்ம தியானத்துக்குச் சடங்கு வேண்டாம் என்பதுபோல், ஈசுவரன் என்ற மூர்த்தியும் வேண்டாம்தான். ஆனால், அது உயர் நிலையில்தான். ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று இருக்க முடியாது. முதலில் ஈசுவரன் மிகவும் தேவை. அதற்கு எத்தனையோ காரணங்கள். குறிப்பாக ஒன்றைச் சொல்கிறேன். நன்மை எல்லாம் நிறைந்த மூர்த்தியாக நமக்கு ஓர் உத்தம உதாரணம் தேவைப்படுகிறது. தொன்றுதொட்டு ஈசுவரனை இப்படிப்பட்ட அனந்த கல்யாண குணமூர்த்தியாகத்தானே பாவித்து வந்திருக்கிறோம்!
‘ஈசுவரன்’ என்றவுடன் அவரிடம் கெட்ட குணம் ஏதுமே இருக்காது என்றுதானே நமக்கு நிச்சயமாகத் தோன்றுகிறது? அழகு, கருணை, சக்தி, ஞானம் எல்லாவற்றிலும் பூரணமாக ஒன்று உண்டு என்றால் அது ஈசுவரன் என்ற கருத்துத்தான். மனோதத்துவப்படி நாம் எதை நினைத்துக் கொண்டேயிருக்கிறோமோ, அதுவே ஆகிறோம்.
எனவே சடங்கு, பூஜை இவற்றால் உண்டாகிற மற்ற பலன்களோடு, அவை நம்மை நல்லவர்களாக்க மிகுந்த உதவி புரிகின்றன; காரியமற்ற தியான யோகத்தில், ஞான விசாரத்தில் நம்மைச் சேர்க்க நிரம்ப உபகாரம் செய்கின்றன.
Unseen footages of Mahaperiyava on His Aradhana day
Thanks to P.K.Hari and Suresh P for sharing aptly on His Aradhana day
Jaya Jaya Shankara Hara Hara Shankara
ஞானம் to ஆனந்தம்
நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒருநாள் நாம் ஆசைப்படும் வஸ்துகள் நம்மைவிட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜிநாமா செய்துவிட்டால், அத்ததனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனையாலும் நம்மைக் கட்டிப்போட்டுக் கொண்டு துக்கப்படுகிறோம். ஆசைகளைக் குறைக்கக் குறைக்கத் துக்க ஹேதுவும் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்த்தைப் படவேண்டாம். அப்படியே பரமாத்மாவில் கரைந்த ஆனந்தமாகிவிடலாம்.
மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமை அடைகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்துவிடுகிறான்? நாயும், நரியும், கரப்பான் பூச்சியும் கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாகின்றன. பொதுவாக மனிதனும் இதற்கு மேல் ஏதும் செய்வதாகத் தெரியவில்லை. அப்பொழுது அவனுடைய விசேஷ ஞானத்தில் பெருமைப் பட என்ன இருக்கிறது. எல்லாவற்றிலும் பெரிய ஞானம் நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். மனிதன் இப்படிப் பட்ட நிலைத்த ஞானத்தைப் பெறுகின்றானா? யோசித்துப் பார்த்தால், பரம தாத்பரியமாகத் தெரிவது, இந்த ‘ஞானம்’,
’ஆனந்தம்’. ‘நாம்’. என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞானமயமான ஆனந்தம் என்று கண்டுகொள்வோம்.
வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கின்றது. நமது உண்மை சொரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கூட ‘நம்முடையது’ என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும் போதுதான், அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்த சம்பந்தம் போய்விட்டால், ஆனந்தம் போய்விடுகிறது.
உதாரணம் சொல்கிறேன்’
ஒருவருக்குகச்சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் முதலில், வருஷத்துக்கு வருஷம் விளைச்சல் அதிகமாவதாக வைத்துக்கொள்ளுங்கள். ‘இந்த வயல் என்னுடையது’ என்பதால் விளைச்சல் அதிகமாகும் போதெல்லாம் அவருக்கு மனம் குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை வேறு ஒருவருக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார். மறுபடி அடுத்த வருஷம், அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும் போது இவர் மனம் குளிரவா செய்கிறது? “அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரி பொட்டலாக இருந்தது. இப்போது எவனோ ஒருத்தனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதே!” என்று வயிற்றெரிச்சல் தான் உண்டாகிறது. ‘எனது’ என்ற சம்பந்தம் இருந்தமட்டும்தான் அதிக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.
என்னிடம் பல பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து, ”அவர்களுக்குச் சித்த பிரமை இருக்கிறது. அது நிவிருத்தியாகவேண்டும்” என்று கேட்டுக் கொள்வார்கள். இதற்கு நேர் மாறாக ஒரு தகப்பனார் நடந்து கொண்டார். அவர் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டவர். இளையாளுக்கு, மூத்தாள் பிள்ளையோடு ஒத்து வரவில்லை. ஏகச்சண்டை போட்டுக் குடும்பம் பிரிந்தது. இவர் இளையாள் தரப்பிலேயே இருந்தார். பிள்ளையைக் கைவிட்டுவிட்டார். அவர் ஒரு நாள் என்னிடம் வந்து, ’மூத்தாள் பிள்ளை இளையாளுக்கு பில்லி சூனியம் வைத்தான். நல்ல வேளையாக அது அவனையே திருப்பி அடித்துவிட்டது.’ என்றார். எல்லாத் தகப்பனார்களும் பிள்ளைக்குச் சித்தப் பிரமை ஏற்படும் போது கவலைப் படுகின்றார்கள் என்றால், இவரோ அதிலேயே சந்தோஷப்படுகிறார். ஏன்? இவருக்கு அவனிடம் ‘நம்முடையவன்’ என்ற சம்பந்தம் போய்விட்டது. இளையாளிடம் மட்டும் ‘நம்முடையவள்’ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் தான் அவளுக்கு ஹானி யில்லை யென்றால் இவர் ஆனந்தப்படுகிறார்.
மாயைக்கு ஆளான ‘நான்’ என்பதன் சம்பந்தத்துக்கே இத்தனை ஆனந்தம் இருக்கின்றதென்றால், எதிலும் சம்பந்தப் படாமல் பூரண ஞானமாக இருக்கின்ற அந்த வெறும் ‘நான்’ எத்தனை ஆனந்தமயமாயிருக்கும்!
வெல்லம் போட்டால் பாகற்காய்க் கறியிலும் சிறிது தித்திப்பு இருப்பதை உணர்கிறோம். வெல்லத்தின் சம்பந்தத்துக்கே தித்திப்பு இருப்பதால் அசல் வெல்லம் தித்திப்பு மட்டுமே என்பதில் சந்தேகம் என்ன! கசப்பான துக்க உலகத்தின் ‘நான்’ என்பதில் மாயக் கிரணங்கள் சம்பந்தப்படுகிற போதே அதில் தித்திப்பு ஆனந்தத்தைப் பெறுகிறோம் என்றால், அந்த நான் மட்டுமே ஸ்வச்சமாஅக நிற்கிறபோது, எத்தனை தித்திப்பாக ஆனந்தமயமாக இருக்கவேண்டும்?
சிறிய ஓட்டைகள் கொண்ட சட்டியால் ஒரு தீபத்தை மூடிவைத்தால், துவாரங்கள் வழியாக மெல்லிய ஒளிக் கிரணங்கள் வெளிவரும். மாயையால் மூடப்பட்ட ஆத்ம தீபத்திலும் இந்திரிய துவாரங்கள் வழியாகக் கொஞ்சம் கொஞ்சம் ஆனந்த ஒளியைப்பார்க்கிறோம். மாயச் சட்டியை உடைத்துவிட்டால் ஆனந்த ஜோதிர்மயமாகவே ஆகிவிடலாம். துவாரங்களின் அளவைப் பொருத்துப் பலவேறு அளவுகளில், ஒளி வெளி வந்தாலும் உள்ளேயிருப்பது ஏக ஜோதிதான். நாம் மாயச் சட்டியை உடைத்துவிட்டால், உலகத்தில் பார்க்கும் வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து எலாம் ஒன்றான ஆனந்த ரூபமாகவே தெரியும்.
மாயையை எப்படி உடைப்பது என்றால் ஆசசைகளை அடக்குவதுதன். வழி. மனம் இருக்கும் வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கிவிட வேண்டும்.மனம் அடங்கி விட்டால் ‘மரண நிலைமையில் இருப்பது போல் ஒரு சக்தியுமின்றி ஜடம் மாதிரி ஆவோம்’ என்று எண்ணக் கூடாது. மாறாக, இதுதான் சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை. சாதாரணமாக ஏதாவது ஒரு அங்கத்தில் ஊனம் உளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீக்ஷண்யம் இருக்கும்.. பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவது போல், ஒரு அங்கத்தில் இருப்பதே இன்னொன்றில் தீக்ஷண்யத்தைத் தருகிறது . ஆத்ம சக்தியைப் பலவாறாகச் சிதறச் செய்யும் எல்லா இந்திரியங்களையும் அடைத்துக் கொண்டுவிட்டால், அப்போது சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக, ஆனந்தமாகக் கூடி நிற்கும். மிகுந்த சக்தியுடன் உலகுக்கு நல்லது செய்யலாம்.
ஆத்ம ஞானம் பெற்ற ரிஷிகளின் சக்தியே இதற்கு திருஷ்டாந்தம். சகல லோகங்களுக்கும், சகல காலங்களுக்கும் சென்று அவர்கள் விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். நம் காதுக்குக் கேட்காத சப்தங்களை ஆகாயத்தில் கேட்டு, வேத மந்திரங்களைக் கொடுத்தார்கள். “எப்படி ஆசையை அடக்குவது? எப்படி மனத்தை நிறுத்துவது? எப்படி ஆனந்தத்தை அடைவது ” என்று” கேட்கிறவர்கள்,அந்த வேதங்கள் சொன்னபடி நடந்தாலே போதும்; முடிவில் பேரானந்தம் அடையலாம். இதற்குப் பரமேசுவரன் அநுக்கிரஹம் செய்வாராக.
Om Namashivaya
காஞ்சிப்பெரியவரைச் சந்திக்க ஒரு தனவணிகர் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்திருந்தார். அவரது குடும்பம் நல்ல செல்வச்செழிப்புடன் இருந்தது. வணிகரின் முன்னோர் தானதர்மம் செய்து வாழ்ந்தவர்கள். தங்கள் ஊரில் சிவன்கோயில் ஒன்றைக்கட்டி நித்யபூஜைக்காக நிலபுலன்களை எழுதி வைத்திருந்தனர். ஆனால், வணிகரோ இஷ்டம் போல ஆடம்பரமாய் வாழ்ந்து சொத்துக்களை விற்றுத் தீர்த்துவிட்டார். அவருடைய உடல்நிலையும் பாதிப்புக்குள்ளானது. அவரது மகனுக்கு குழந்தையும் இல்லாமல் போனது. அதை எண்ணி வருந்தியபடியே காஞ்சிப் பெரியவர் முன் வந்து நின்றார். அவர் சுவாமிகள் அவருடைய பேச்சைக் கேட்டபடியே, மற்ற பக்தர்களுக்கு பிரசாதம் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
சிறிதுநேரம் மவுனம் காத்த பெரியவர், “”உங்கள் குடும்பவழியில் ஒரு சிவன் கோயில் இருக்குமே?” என்று சுவாமிகள் கேட்டார். “”ஆமாம்! சுவாமி! சிவன் கோயில் இருந்தது. ஆனால் இப்போது அக்கோயிலை நாங்கள் கவனிப்பதில்லை,” என்று சற்று தயக்கத்துடன் கூறினார். ””அப்படியா! சிவனுக்காக விடப்பட்ட சொத்தை நீ எடுத்துட்டே! அதனால தான் நீ இப்போ வாரிசு கூட இல்லாமல் தத்தளிக்கிறே! இதுக்கு என்னால என்ன செய்ய முடியும்?” என்று அவருடைய தவறைச் சுட்டிக்காட்டினார்.
தனவணிகர் பெரியவரிடம்,””சுவாமி! எங்க குடும்பம் நல்ல பாரம்பரியமான குடும்பந்தான்! சிவனுக்காக எங்கள் முன்னோர் பல சேவைகளை பெரும் செலவில் செஞ்சிருக்காங்க. ஆனால், இப்போ பரம்பரைச் சொத்து ஒன்றும் என்னிடத்தில் இல்லை. எல்லாம் என் கையை விட்டுப் போய் விட்டது. சிவன் கோயிலையும் மறந்துட்டேன்,” என்றார் உருக்கமாக. அவரையும் அறியாமல் அவர் கண்களில் கண்ணீர் பெருகியது.
“”நீ இப்போ சொல்றது பெரிய தப்பு. உங்க வீட்டுப் பெரியவங்க காலையில் குளிச்சா நெற்றியில் திருநீறிட்டு “நமசிவாய’ என்று மந்திரம் சொல்லி சிவவழிபாடு செய்தவர்கள். அந்தச்சொத்து எந்தக் காலத்திலும் உனக்கும் பலன் கொடுக்கும். நீ அந்த மந்திரத்தை விடாமல் ஒருநாளைக்கு ஆயிரம் தரம் ஜபம் செய். எல்லாம் சரியாகிவிடும்,” என்று சொல்லி மனப்பூர்வமாக ஆசிர்வாதம் செய்து பிரசாதம் கொடுத்தார்.
தனவணிகரும் விடாமல் சிவபூஜையில் ஈடுபட்டு வந்தார். மூன்றாண்டுகள் தொடர்ந்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்துவந்தார். அவருடைய நோய் தீர்ந்தது.
மகனுக்கு ஒரு ஆண்பிள்ளையும் பிறந்தது. பிள்ளைக்கு “”நமச்சிவாயம்” என்று பெயரிட்டார் தனவணிகர். பண்புள்ள குழந்தையாக வளர்ந்த நமச்சிவாயம் படித்து டில்லியில் மத்திய அரசுப்பணியில் பணியாற்றி வந்தார்.
நமச்சிவாயமும் தங்கள் குலசொத்தான சிவனுக்கு பூஜை செய்ய மறந்ததில்லை. இப்போது நம்நாட்டின் சார்பாக இங்கிலாந்தில் அவர் பணியாற்றுகிறார். துன்பத்தின் விளிம்பில் இருந்த தனவணிகர் குடும்பம் மீண்டும் தழைக்க காஞ்சிப்பெரியவரின் வழிகாட்டுதலே தக்க துணையாய் அமைந்தது.
Smt Mangaiyarkarasi, a Tamil Professor, was speaking on the glory of Sakti Panchakshari MahaMantram to a big audience somewhere that was telecast last week in Vijay TV.
She was mentioning about Appar (Tirunavukkarasar) Swamigal’s absolute faith in the efficacy of ‘NamaSivaya’ which came to his rescue to float him on the waters. You may recall this happened when the Jain King sought to punish him by tying him on a big stone and throwing him in the deep water to make sure he would drown.
She recalled a comparatively recent event from our Maha Periyava’s life. A few devotees built a temple for Lord Siva somewhere in Andhra. When they tried to carry the sculpted Linga made of stone to the sanctum,they could not move IT even an inch. Anxiety writ large on their faces,they came to report the matter to Maha Periyava. After a few minutes’ pause, Maha Periyava. asked them to bring one Sri Vaidyanatha Sastri from somewhere near Trichy. Maha Periyava whispered something into his ears and advised the Andhra devotees to take him along with them to their town.
On reaching their place, Sri Sastrigal was doing Japa for hours together after his daily anushtanams. The devotees were perplexed as they expected this Sastrigal to advise them something useful to allay their predicament. Nonetheless, they
just kept and did not disturb Sri Sastrigal.
On the 21st day of his stay there, after his Japa, Sri Sastrigal asked them to shift the Lingam. Lo ! They were able to do it in no time!
They told Sri Sastrigal that the Lingam which earlier weighed so much not allowing them to move IT by even an inch was now like a mass of cotton, so light and easy to move.
They requested him to explain the miracle to them. Sri Sastrigal told them he too did not know,except that Maha Periyava asked him to do the Panchakshara Japam for 21days devotedly,sitting in front of that Lingam, -that’s all!
Prof Mangaiyarkarasi said Maha Periyava with His Tapomahima could demonstrate in the 20th Century what Appar Swamigal did centuries ago to prove the efficacy of Siva Panchaksharam!
Apara Karuna Sindhum …..
ஒரு சமயம் திருவாடனை என்ற ஊரிலிருந்து பெரியவர்களின் பக்தர் கூட்டம் அவரை தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்டமௌனம்.பேசமாட்டார்கள். வாரத்தில் ஒருநாள் இது மாதிரி இருப்பார் 30 வருடங்களாக கடைபிடித்துவரும் விரதம். பிரதமராக இந்திராகாந்தி அவரைக் காண வந்தபோதும் இதை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்புதான்.
வந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் தேச விடுதலைக்காக போராடி ஆங்கிலேயரால் தடியடி பட்டு இருகண்களையும் இழந்தவர். மடத்து சிப்பந்தி ஒவ்வொருவரையும் பெரியாவாளுக்கு அறிமுகப் படுத்தினார் அவர்களுக்கு மௌனமாக ஆசி வழங்கினார். சங்கரன் முறை வந்ததும் அவரையும் அறிமுகப் செய்தார்கள்.ஸ்வாமிகளுக்கு சங்கரனை நன்றாகத் தெரியும்.ஸ்வாமிகள் உடனே கம்பீரமான உரத்த குரலில்””என்ன சங்கரா சௌக்கியமா மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமா. இன்னும்விடாமல் தேசத்தொண்டு செய்து கொண்டு இருக்கிறாயா”” என்று கேட்டார். சங்கரனுக்கு மிகவும் சந்தோஷம்.பெரியவா பேசிவிட்டாரே என்று. மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுடைய விரதத்தை சங்கரனுக்குகாக முறித்து விட்டாரே என்று.
அவர்கள் எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு மடத்து சிப்பந்திகள் ஸ்வாமிகளிடம் கேட்டார்கள் எதற்காக மௌனத்திலிருந்து விடுபட்டு பேசவேண்டும். எல்லாரையும் போலவே மௌனமாக அனுக்கிரஹம் செய்து இருக்கலாமே. சங்கரன் என்ன அவ்வளவு பெரியவனா?
ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள். “”எல்லோரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது.அவனுக்கு கண்தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்க வந்திருக்கிறான்.ஆனால் அவனால் என்னைப் பார்க்கமுடியாது . நான் மௌனமாக ஆசீர்வாதம் செய்தால் அவனுக்குப் போய் சேராது. அவனுக்கு வருத்தமாக இருக்கும் நான் அவனைப் பார்த்தேனா ஆசீர்வாதம் செய்தேனா என்று.இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன். அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது. அவனுடைய தியாகத்துக்கு முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல””
.
இதைகேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஸ்வாமிகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்தார்கள்.
Guntakal & Pandaripuram
பெரியவாளின் ஆன்ம பலம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துகிற இரண்டு சம்பவங்களை மெய் சிலிர்க்க விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்:
”பெரியவா யாத்திரை போறப்ப, அங்கங்கே சின்னச் சின்ன ஊர்லகூட தங்கிட்டுப் போறது வழக்கம். அப்படித்தான், குண்டக்கல்லுக்கு முன்னால ‘ஹக்ரி’ங்கற ஊர்ல பெரியவா தங்கினா.
ஊருக்குள்ளே, சுமார் 10 கி.மீ. தூரத்துல சிவன் கோயில் ஒண்ணு இருந்தது. பக்கத்துலயே பெரிய ஆலமரம். அடுத்தாப்ல ஆத்தங்கரை. பாத்ததுமே பெரிய வாளுக்கு அந்த இடம் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அங்கே தங்கறதுன்னு முடிவு பண்ணினா.
சின்ன ஊர்தான்; ஆனா, பொட்டல்காடு. நொப்பும் நுரையுமா காட்டாறு ஒண்ணு ஓடிக்கிட்டே இருந்த காலமும் உண்டாம். ஆனா, நாங்க போன சமயத்துல மழையேதும் இல்லாம ஊரே வறண்டு கிடந்துது.
அந்த ஊர்ல கரும்புதான் பிரதான விவசாயம். சர்க்கரை ஆலையும் இருந்தது. தஞ்சாவூர் ஜில்லாக்காரர் ஒருத்தர்தான் அந்த ஃபேக்டரியோட ‘ஜி.எம்’மா இருந்தார். பெரியவா ஊருக்கு வந்திருக்கிற விவரம் தெரிஞ்சு, ஓடிவந்து நமஸ்காரம் பண்ணார். அவர்கிட்டே, ”நான் இங்கே வியாச பூஜை பண்ணலாம்னு இருக்கேன். உங்க ஊர்ல கொஞ்ச நாள் தங்கிக்கலாமா?”னு கேட்டார் பெரியவா.
ஆடிப்போயிட்டார் அந்த ஜி.எம். ”சுவாமி! அது எங்க பாக்கியம்! பெரியவா இங்கேதான் தங்கணும். என்னென்ன ஏற்பாடு பண்ணணுமோ, உத்தரவிடுங்கோ! அதையெல்லாம் நாங்க பண்ணித் தரோம்”னு பவ்யமா சொன்னார்.
அப்புறம்… நாலு லாரி நிறைய கீத்து, சவுக்குக் கட்டையெல்லாம் வந்து இறங்கித்து. 300 அடிக்குப் பந்தல் போட்டு, பெரியவா தங்கறதுக்கும், தரிசனம் பண்றதுக்கும் ஏற்பாடு பண்ணினார் அந்த அதிகாரி. பெரியவாளைத் தரிசனம் பண்றதுக்கு நிறையப் பேர் வருவாங்கறதால, சுமார் ஆயிரம் பேர் உக்கார்றதுக்கு வசதியா ஏற்பாடெல்லாம் பண்ணி முடிச்சார். எல்லா ஏற்பாடுகளும் பிர மாதமா நடந்து முடிஞ்சாலும், அன்னிக்கி ராத்திரி முழுக்கப் பெரியவா தூங் கவே இல்லை” என்று சஸ்பென்ஸோடு சொல்லி நிறுத்தினார் லக்ஷ்மி நாராயணன்.
பெரியவர் ஏன் தூங்கவில்லை? அந்த ஊரும், சிவாலயமும் பெரியவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அந்த ஆறு பல வருடங்களாக வறண்டே கிடந்தது. பருவமழையும் பொய்த்துப்போனது; ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். இதில் ரொம்பவே கவலைப்பட்டாராம் பெரியவர்.
லக்ஷ்மிநாராயணன் தொடர்ந்தார்… ”பெரியவா யாரோடயும் பேசாம ஆத்துப் பாதையையே வெறிச்சுப் பார்த்துட்டிருந்தார். சாயந்திரம் திடீர்னு எழுந்தவர், ஆத்தங்கரை நோக்கிப் போனார். ஆத்து மணல்ல இறங்கி நின்னார். கொஞ்சம் யோசிச்சவர், அப்படியே நடக்க ஆரம்பிச்சார். கிட் டத்தட்ட ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு அந்த மணல்லயே நடந்துபோயிட்டுத் திரும்பினார். அப்புறம் எங்களைக் கூப்பிட்டு, ‘சந்தியா ஜபம் பண்ணப் போறேன். யாராவது என்னைப் பார்க்க வந்தா, காலைல வரச் சொல்லு’னு சொல்லிட்டு, ஜபத்துல மூழ்கினார் பெரியவா.
நல்லா இருட்டிடுச்சு. அப்பல்லாம் ஹரிக்கேன் விளக்குதான். ஒண்ணோ ரெண்டோ பெட்ரோமாக்ஸ் லைட் இருக்கும். எல்லாத்தையும் ஏத்தி வைச்சோம்.
ஆச்சு… ராத்திரி பத்து மணி இருக்கும். காத்து குளுமையா வீசின மாதிரி இருந்துது. பொட்… பொட்டுனு உடம்புல ரெண்டொரு மழைத்துளி பட்டுது. லேசா தூத்தல் போட்டுது. அப்புறம், நிதானமா பெய்ய ஆரம்பிச்ச மழை, கொஞ்ச நேரத்துலேயே வேகமெடுத்து ஹோன்னு இரைச்சலோட வலுவா பெஞ்சுது. அங்கே இருந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாவுல பெரியவாளை உக்காரச் சொல்லிட்டு, பக்கத்திலேயே நான் ஒரு தாழங்குடையைப் பிடிச் சுண்டு நின்னேன்.
கிட்டத்தட்ட நாலு மணி நேரம்… வெளுத்து வாங்கிச்சு மழை. நடுராத்திரி ஒண்ணரை மணிக்குதான் ஓய்ஞ்சுது. காஞ்சு மணலா கிடந்த ஆத்துல தண்ணி ஓட ஆரம்பிச்சுது.
மறுநாள்… விடிஞ்சும் விடியாததுமா ஊர் ஜனங்க எல்லாம் அதிசயப்பட்டு, ‘பெரியவா மழையை வரவழைச்சுட்டார்’னு சொல்லி, கூட்டமா திரண்டு வந்து, அவரைத் தரிசனம் பண்ணிட்டுப் போனாங்க. பெரியவாளும் மனநிறைவோடு வியாச பூஜையைப் பண்ணி முடிச்சார்.
பெரியவா மகா தபஸ்வி! வியாச பூஜைங் கறது நமக்குச் சொன்ன காரணம். ஆனா, அந்த ஊருக்கு என்ன தேவையோ, அதை நிறைவேத்திக் கொடுத்தாரே, அதை இப்ப நினைச்சாலும் உடம்பே சிலிர்க்கிறது” என்று நெகிழ்கிறார் லக்ஷ்மிநாராயணன்.
”இப்படித்தான், மகாராஷ்டிரால பண்டர் பூர்னு சொல்ற பண்டரிபுரத்துக்குப் பெரியவா போனப்பவும் நடந்துது” என்று அடுத்த ஆச் சரியத்தையும் விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்.
பண்டரிபுரத்தில் ஓடும் நதியின் பெயர் பீமா. அந்த நதியில் பத்து வருடங்களுக்கும் மேலாகத் தண்ணீரே இல்லாமல், சுத்தமாக வறண்டு கிடந்ததாம்!
”ஆத்துல அங்கங்கே கிணறுகள் மாதிரி தோண்டி, சுமார் நூறு மீட்டர் ஆழத்துலேருந்து தண்ணி எடுப்பாங்க ஜனங்க. அதுவும், குடத்துல அவ்ளோ நீளத்துக்குக் கயிறு கட்டிக் கிணத்துக்குள்ளே இறக்கி… அந்தக் குடம் நிரம்பறதுக்கே எப்படியும் 20, 25 நிமிஷமாவது ஆயிடும். அந்த ஆத்துக்கு அக்கரைல ஒரு பாழடைஞ்ச மண்டபம் இருந்துது. அங்கேதான் பெரியவா தங்கி இருந்தா.
சாயந்தரம் 5 மணி இருக்கும்… பெரியவா அங்கேயே உக்காந்து ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டா. சரியா ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்… கனமழை பெய்ய ஆரம்பிச் சுது. ஆத்துல வெள்ளமா ஓடுச்சு தண்ணி. ரொம்ப நேரத்துக்கு மழை விடவே இல்ல. அப்புறம், பரிசல்கார னைக் கூட்டிண்டு வந்து, ராத்திரி 12 மணிக்குதான் இக்கரைக்கு வந்து சேர்ந்தா பெரியவா.
கூட்டம் பெரியவாளைச் சூழ்ந்துண்டு, நமஸ்காரம் பண்ணித்து. ‘ஸ்வாமி! நீங்கதான் மழையைக் கொண்டு வந்தீங்க’ன்னு நெக்குருகிச் சொன்னாங்க ஜனங்க.
‘என் கையில என்ன இருக்கு! உங்க பண்டரிநாதர்தான் மழையைக் கொண்டு வந்தார்’னு சொல்லிட்டுச் சிரிச் சார் பெரியவா.”
லக்ஷ்மிநாராயணன் சிலிர்ப்போடு இந்தச் சம்பவத்தை விவரித்துவிட்டுக் கடைசியாகச் சொன்னார்… ”பெரியவா தன்னடக்கத்தோடு அப்படிச் சொன்னாலும், எனக்கு நன்னாத் தெரியும், அவர் சாட்சாத் ஈஸ்வரனின் அம்சம்!”
Mahaperiyava on Seshadri Swamigal
Last century witnessed the Trinities (brahma,vishnu,siva) Seshadri Swamigal (tiruvananamalai) ,Kanchi Mahaperiyava,Sri Ramana Maharishi (also known as Chinna Seshadri swamigal).Here is the excerpt from Mahaperiyava
on the developments. He said ‘ shall we buy the house, much like Sangeetha mummoorthigals’ houses have been bought in Thiruvaroor?’. We formed a committee, collected money, the house was bought and named as ‘Sri Kamakoti Seshadri Swamigal Nivasam’. Maha Periyava then asked a portrait of Seshadri Swamigal to be kept in the house and Moovalur Gopala Dheekshitar was asked to shift his residence there and do agni hotram and ishti homam. then, under instructions of Maha Periyava, the aradhana of Swamigal was started in Margazhi Navami.
Yet another day when i went to Thenambakkam, Maha Periyava sat like Seshadri Swamigal, with legs folded in the same way and his left hand palm holding the chin and asked ‘ is this not how HE is sitting?’. I could not make out any diff between the two of them and tears welled up in my eyes.One of my favorites….
Periyava’s respect for sampradayams is unparalleled….

வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம் பண்ணி அவர்கள் மரபுப்படி நமஸ்கரித்து விட்டு நின்றாள். அவள் கண்களில் ஏதோ ஏக்கம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை.
மெல்ல பெரியவாளிடம் விண்ணப்பித்தாள் ” குடும்பத்துல பலவித கஷ்டங்கள். வியாதி வெக்கை. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஏழெட்டு வருஷம் ஆகியும், குழந்தை இல்லை. இன்னொரு பொண்ணுக்கு வயசு எகிறிண்டே போறதே ஒழிய வரன் அமைய மாட்டேங்கறது. பையனுக்கோ படிப்பே வரலை. பண கஷ்டம்………கேரளா போய் நம்பூதிரி கிட்டே பிரச்னம் பாத்தோம். பித்ரு தோஷமாம். பித்ரு கர்மாக்களை ஒழுங்கா பண்ணாம விட்டதுக்கு ராமேஸ்வரம் போய் பரிகாரம் பண்ணணும்…ங்கறார். வைஷ்ணவ சம்பிரதாயப்படி, ராமேஸ்வர யாத்ரை, பரிகார சடங்கு எதுவுமே பண்ணக் கூடாது. என்ன பண்ணறதுன்னே தெரியலை. பெரியவாதான் வழி காட்டணும்” என்றாள்.
“நீங்க தென்கலையா?”
“ஆமா”
“உப்புச்சாறு, சாணிச்சாறு, சடைச்சாறு….ங்கற மூணும் தென்கலைக்கு கெடையாது…….”
” ஆமாமா, எங்க அம்மா கூட உப்புச்சார், சாணிசார், சடைசார்…..ன்னு சொல்லுவா”
“அதேதான். ராமேஸ்வர சமுத்ர ஸ்நானம், உப்புச்சாறு. பஞ்சகவ்ய பிராசனம் சாணிச்சாறு. கங்காஸ்நானம் சடைச்சாறு. ஏன்னா, பரமேஸ்வரனோட சடையில் இருந்துதானே கங்கை வரது! அதுனால, சம்பிரதாய விரோதமா போகவேணாம். அதுக்கு பதிலா, நித்யம் சாளக்ராமம் [பெருமாள்] திருவாராதனம் பண்ணி, திருமஞ்சன தீர்த்தம் சாப்பிடணும். அப்புறம், எகாதசியன்னிக்கு உபவாசம் இருங்கோ. பால், பழம், கிழங்கு சாப்பிடலாம். அன்னிக்கு ஓங்காத்துக்காரர் பன்னெண்டு திருமண் இட்டுண்டு திருவாராதனம் பண்ணணும். சரியா? மறுநா, த்வாதசியன்னிக்கி சீக்கிரமாவே திருவாராதனம் பண்ணிட்டு, துளசி தீர்த்தம் சாப்டுட்டு பாரணை பண்ணணும். தெனமும் ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி புல் தரணும். இப்பிடி பண்ணினா, சர்வ பிராயச்சித்தம் பண்ணினாப்ல ஆகும். பண்ணுவியா?”
பெரியவாளோட உபதேசம் ஆக ஆக, அந்த அம்மா அழுகையை அடக்க முடியாமல் மாலை மாலையாக கண்ணீர் விட்டாள்.
“பெருமாளே வந்து சொன்னா மாதிரி இருக்கு பெரியவா. என்னென்னமோ நெனச்சு குழம்பிண்டு இருந்தேன். ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு சொல்லுவேள்னு நெனச்சேன். பெரியவா சுத்த ஸ்படிகம். சம்பிரதாய விரோதமில்லாம வழி காட்டிட்டேள்! “
காமத்தை வென்ற காமேஸ்வரனே நம்மை மாதிரி அல்பங்களுக்காக இறங்கி வந்து நாவினிக்க “நாராயண நாராயண” என்று சொல்லி ஆசிர்வதிக்கும்போது, எல்லா சம்பிரதாயங்களும் அவனுள்ளே அடக்கம்தானே!
Found this article on FB….
Vedam vitta kanneer
I am sure many of you would have read this article before…..Someone forwarded this to me recently – thought I could share this with you…..It is also interesting to note another article related to Swami Gnanandhagiri Swamigal and Mahaperiyava – http://mahaperiyavaa.wordpress.com/2010/09/10/interactio-with-ramana-maharishi/
Respect for Vaideekas – Must Read
I can’t resist crying every time I read this article.
