Archive for November, 2011

November 30, 2011

பிரம்மஞான ஸ்வரூபம்

எல்லா சாஸ்திரங்களும் முடிவில் ஞானம் அடைவதைத்தான் லட்சியமாக சொல்கின்றன. ‘ஞானம்’ என்றால் எதை அறிவது? தன்னையே அறிவதுதான் ஞானம். தன்னை அறிகிறபடி அறிந்து விடுகிறபோது, அந்த தானுக்கு வேறாக எதுவுமே இராது. சகலமும் அதற்குள் அடக்கம். ஆத்மஞானமே எல்லாவற்றையும் அறிகிற ஞானமாகிறது. நம் சரீரம், இந்திரியங்கள், மனசு எல்லாம் போன பிறகும் மாறாமல் நிற்கிற சத்தியமாக இருப்பது இந்த ஆத்மா.

மற்றதெல்லாம் மாறினாலும் இது மாறாமலே உள்ளபடி இருந்து கொண்டிருப்பதால் இதற்கு ‘ஸத் ‘ என்று பெயர். இந்த ’ஸத் ‘ வெறுமே இருந்து பிரயோஜனம் இல்லை. தான் ஸத்தாக இருக்கிறேன் என்கிற அறிவு-ஞானம்-அனுபவம்- அதற்கு இருந்தால்தான் ஆனந்தம் உண்டாகிறது.இப்படி தன்னையே தான் அறிந்து கொள்கிறபோது ‘ஸத்தா’னது ‘சித்’ எனப்படும்.ஸத் என்கிற உண்மையை பிரம்மம் என்றும் பரமேஸ்வரன் என்றும், சித் என்கிற அதன் அறிவை பராசக்தி என்றும் அம்பாள் என்றும் சொல்கிறோம்.

பிரம்ம ஞான ஸ்வரூபமாக இருக்கிற அவனை உபாசித்தாலே, அவளுடைய அனுக்கிரகத்தால்  நாமும் அந்த ஸத்துத்தான் என்கிற ஞானத்தை அடைய முடியும். எப்போது பார்த்தாலும் சலித்துக் கொண்டும், மாறிக்கொண்டும், அழிந்து கொண்டும் இருக்கிற ஏதோ ஒன்றாக நம்மை எண்ணி  வருகிறோமே உண்மையில் அது அல்ல; நாம். எப்போதும் மாறாமல் இருக்கிற சத்தியமே நாம் என்கிற ஞானம் அனுபவபூர்வமாக உண்டாகி, அதில் ஏற்படுகிற ஆனந்தமே மோக்ஷம்.

அவள் அனுக்கிரகத்தால்தான் ஜன்ம விடுதலையாகி மோக்ஷம் அடையலாம். அம்பாளை ஆறாதிப்பதால் ஞானம் ஆவிர்பாகமாகி அக்ஞானம் விலகி , மோக்ஷம் கிடைக்கிறது.

இகலோகத்தில் பல விதமான சௌக்கியங்களை அனுக்கிரகம் செய்கிற அம்பாள், முடிந்த முடிவாக இந்த ஞானத்தை, மோக்ஷத்தை அருளுகிறாள்.

பிரம்மஞானஸ்வரூபமாக இருக்கிற அம்பாளின் அனுக்கிரகத்தால் அனைவர்க்கும் அருள் உண்டாகும்.

November 30, 2011

More photos found!!!

 

November 30, 2011

Mahaperiyava on Seshadri Swamigal

 Last century witnessed the Trinities (brahma,vishnu,siva) Seshadri Swamigal (tiruvananamalai) ,Kanchi  Mahaperiyava,Sri Ramana Maharishi (also known as Chinna Seshadri swamigal).Here is the excerpt from Mahaperiyava

Shri.Bharanidharan : I was writing ‘Arunachala magimai’ at that time. One day, I said to Maha Periyava that I am unable to locate the house where Shri Seshadri Swamigal lived between 1870 to 1889. Maha Periyava said ‘ why don’t you take efforts to find the house?’ and directed me to various people. The search narrowed down to 2 to 3 houses. It was then I met the old man who built the house where Swamigal ived and he said ‘ when the elder(est) son was 19years he became mad and ran away from the house’. So, finally, I located the Shri.Seshadri Swamigal’s house.
Then, when i went to have darshan of Maha Periyava who was at Kollavar Chatram, i briefed HIM on the developments. He said ‘ shall we buy the house, much like Sangeetha mummoorthigals’ houses have been bought in Thiruvaroor?’. We formed a committee, collected money, the house was bought and named as ‘Sri Kamakoti Seshadri Swamigal Nivasam’. Maha Periyava then asked a portrait of Seshadri Swamigal to be kept in the house and Moovalur Gopala Dheekshitar was asked to shift his residence there and do agni hotram and ishti homam. then, under instructions of Maha Periyava, the aradhana of Swamigal was started in Margazhi Navami.
One day, Maha Periyava drew a plan on the sand at Sivasthanam, Thenambakkam, on how to build a mantap at Swamigal’s residence. A trust was formed with Nalli Kuppusamy Chetty, ‘Sangupani’ Sivaraj Mudaliyar, K.R.Visvanathan and i was also a part of it. In 1985 Sehsadri Jayanthi was also started in Thai, Hastham, again under HIS instructions.
On Jan 21st,1987 (Thai Hastham) I went to the mutt to receive Maha Periyava’s blessings for the celebs to go off well and casually mentioned about Unjavrithi that i witnessed at Thiruvaiaru just a couple of days back, during Thiyagaraja aradhana. Maha Periyava said ‘start unjavrithi in Seshadri Swamigal Jayanthi too’. I said ‘okay, will plan for the next year’ ‘why next year? start now’. i said i do not know anything about unjavrithi. Maha Periyava showed an old man standing nearby and said ‘ ivarukku thalaipagai kattu. sombu onnu tholla (shoulder) pottuko, and as you go on the street the ladies will put rice in the sombu, collect it and come back.thats all unjavrithi is all about’. ‘bhajanai?’. ‘no need for professionals, just the two of you would be enough’. ‘what to sing?’. Maha Periyava thought for a moment, started putting thalam and began to sing ‘Jaya Jaya Jaya Jaya Kaamaakshi, Jaya Jaya jaya Jaya kaamakoti, Jaya jaya Jaya jaya Seshadri’.just repeat this. the next year, Papanaasam Sri Kunjumani Bhagavathar joined us.
One day, when we were talking about the registration of Seshadri Swamigal’s house, Maha Periyava asked me ‘ how many Seshadris are involved in this?’. I said ‘four’.Maha Periyava said ‘five’ – first Seshadri Swamigal, then your friend who is with us now, the advocate who verified the documents, the clerk in the register office and, of course, your father!!’.
Yet another day when i went to Thenambakkam, Maha Periyava sat like Seshadri Swamigal, with legs folded in the same way and his left hand palm holding the chin and asked ‘ is this not how HE is sitting?’. I could not make out any diff between the two of them and tears welled up in my eyes.
It was some time later that Maha Periyava spoke those immortal words ‘ will I ever become like Seshadri Swamigal?, will I attain that level?’ If Maha Periyava whom all of us know is saakshath Parameswaran said this of Seshadri Swamigal, at what level HE must have been? Brahamananda nilai !!
November 30, 2011

One of my favorites….

Periyava’s respect for sampradayams is unparalleled….

 

வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம் பண்ணி அவர்கள் மரபுப்படி நமஸ்கரித்து விட்டு நின்றாள். அவள் கண்களில் ஏதோ ஏக்கம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை.

மெல்ல பெரியவாளிடம் விண்ணப்பித்தாள் ” குடும்பத்துல பலவித கஷ்டங்கள். வியாதி வெக்கை. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஏழெட்டு வருஷம் ஆகியும், குழந்தை இல்லை. இன்னொரு பொண்ணுக்கு வயசு எகிறிண்டே போறதே ஒழிய வரன் அமைய மாட்டேங்கறது. பையனுக்கோ படிப்பே வரலை. பண கஷ்டம்………கேரளா போய் நம்பூதிரி கிட்டே பிரச்னம் பாத்தோம். பித்ரு தோஷமாம். பித்ரு கர்மாக்களை ஒழுங்கா பண்ணாம விட்டதுக்கு ராமேஸ்வரம் போய் பரிகாரம் பண்ணணும்…ங்கறார். வைஷ்ணவ சம்பிரதாயப்படி, ராமேஸ்வர யாத்ரை, பரிகார சடங்கு எதுவுமே பண்ணக் கூடாது. என்ன பண்ணறதுன்னே தெரியலை. பெரியவாதான் வழி காட்டணும்” என்றாள்.

“நீங்க தென்கலையா?”

“ஆமா”

“உப்புச்சாறு, சாணிச்சாறு, சடைச்சாறு….ங்கற மூணும் தென்கலைக்கு கெடையாது…….”

” ஆமாமா, எங்க அம்மா கூட உப்புச்சார், சாணிசார், சடைசார்…..ன்னு சொல்லுவா”

“அதேதான். ராமேஸ்வர சமுத்ர ஸ்நானம், உப்புச்சாறு. பஞ்சகவ்ய பிராசனம் சாணிச்சாறு. கங்காஸ்நானம் சடைச்சாறு. ஏன்னா, பரமேஸ்வரனோட சடையில் இருந்துதானே கங்கை வரது! அதுனால, சம்பிரதாய விரோதமா போகவேணாம். அதுக்கு பதிலா, நித்யம் சாளக்ராமம் [பெருமாள்] திருவாராதனம் பண்ணி, திருமஞ்சன தீர்த்தம் சாப்பிடணும். அப்புறம், எகாதசியன்னிக்கு உபவாசம் இருங்கோ. பால், பழம், கிழங்கு சாப்பிடலாம். அன்னிக்கு ஓங்காத்துக்காரர் பன்னெண்டு திருமண் இட்டுண்டு திருவாராதனம் பண்ணணும். சரியா? மறுநா, த்வாதசியன்னிக்கி சீக்கிரமாவே திருவாராதனம் பண்ணிட்டு, துளசி தீர்த்தம் சாப்டுட்டு பாரணை பண்ணணும். தெனமும் ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி புல் தரணும். இப்பிடி பண்ணினா, சர்வ பிராயச்சித்தம் பண்ணினாப்ல ஆகும். பண்ணுவியா?”

பெரியவாளோட உபதேசம் ஆக ஆக, அந்த அம்மா அழுகையை அடக்க முடியாமல் மாலை மாலையாக கண்ணீர் விட்டாள்.

“பெருமாளே வந்து சொன்னா மாதிரி இருக்கு பெரியவா. என்னென்னமோ நெனச்சு குழம்பிண்டு இருந்தேன். ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு சொல்லுவேள்னு நெனச்சேன். பெரியவா சுத்த ஸ்படிகம். சம்பிரதாய விரோதமில்லாம வழி காட்டிட்டேள்! “

காமத்தை வென்ற காமேஸ்வரனே நம்மை மாதிரி அல்பங்களுக்காக இறங்கி வந்து நாவினிக்க “நாராயண நாராயண” என்று சொல்லி ஆசிர்வதிக்கும்போது, எல்லா சம்பிரதாயங்களும் அவனுள்ளே அடக்கம்தானே!

Found this article on FB….

November 30, 2011

பொட்டலத்தில் என்ன இருந்தது?

மகாபெரியவா எப்போது எந்த பக்தனுக்கு எந்த பக்தைக்கு அருள் பாலிப்பார் என்று யாருக்குமே தெரியாது தம் முன் நிற்கும்  பக்தர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாக அறிந்த மகா  பிரபு அவர் .

புதுக்கோட்டை ராதா ராமமூர்த்தி எனும் பக்தையின் அனுபவம் இதற்கு ஒரு சான்று

தொடர்ச்சியாக ஸ்ரீமடத்திற்கு வந்து மகானை தரிசித்து மகிழ்ச்சியில் திளைத்துக்  கொண்டு  இருப்பவர் . மகானை தரிசிக்க செல்லும் போதெல்லாம்  அவருக்கு முன் எதையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று காணிக்கையை எடுத்துப் போவதில் அந்த பக்தைக்கு அதீத மகிழ்ச்சி.

ஒரு முறை தரிசனத்திற்குப் போகும் போது தன் மனதில் தோன்றியபடி, சிறிய அருகம்புல் மாலையைத் தொடுத்து ஓரத்தில் அரளிப் பூவை பார்டர் ஆக  அமைத்து அழகிய மாலையாக தொடுத்தார், மாலையோடு கொஞ்சம் கல்கன்ன்டும் எடுத்துக் கொண்ட அந்த பக்தை, இரண்டையும் தனித்தனி பொட்டலங்களாக கட்டி தரிசனத்திற்கு சென்றபோது மகானின் முன் வைத்து சமர்பித்தார்  எட்ட நின்று தரிசித்தார் .

அதை எப்போது எடுத்துக் கொள்ளப் போகிறாரோ என்று கத்துக் கிடந்த பக்தைக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது, இரண்டு பொட்டலங்களையும்  சற்று தூரம் தள்ளி வைத்து விட்டார் ,  மகான் அதில்  என்ன இருகின்றது என்றும் பார்க்கவில்லை, அது யாருடைய கண்களுக்கும் புலப்படவில்லை.

அதற்குள் இருப்பதை மகான் அறிவார் என்பதை நினைத்துகொண்டு  பக்தை ஓரமாக நின்றுகொண்டிருந்தார், எட்டு மணிக்கு வந்த பக்தை மணி பத்து ஆகியும் அப்படியே  நின்று மகான் அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை அங்கிருந்து நகருவதில்லை என்ற உறுதியோடு இருந்தார் என்றே சொல்லலாம்.

சுமா பத்து மணிக்கு ஒரு பெண் மகானை தரிசிக்க  வந்தார் அந்த பெண்மணி கையில் ஒரு வெள்ளிக் கவசம், பிள்ளையாருக்கு போட்ட வேண்டிய கவசம் மகானின் உத்திரவுப்படி அந்தபெண்ணின் ஊர்கோவிலில் பிள்ளையாருக்கு மிகவும் நேர்த்தியான வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டு இருந்தது , மகா பெரியவர் அனுக்கிரகத்திற்காக அதை கொண்டு வந்து இருந்தார் .

அந்தக் கவசத்தை  தன் கையில் வாங்கிய மகான் தன் மடியில் வைத்துக் கொண்டார் , பிறகு மடத்து சிப்பந்தியை  அழைத்து எட்ட இருந்த இரு பொட்டலங்களைக் காட்டி “அதை எடு ” என்றார் .

ராதா ராமமூர்த்தியை  தவிர அந்த பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது அல்லவா

அதில் ஒரு பொட்டலத்தை பிரிக்கச் சொன்னபோதுதான் வெள்ளிப் பிள்ளையார் கவசத்திற்கே சொல்லி வைத்தாற்போல் ஒரு அருகம்புல் மாலை அதிலிருந்ததை எல்லாரும் கண்டனர்

இதில் அதிசயம் என்னவென்றால்  ”பொட்டலத்தில் என்ன இருக்கிறது?” மகான் கேட்கவும் இல்லை பார்க்கவும் இல்லை ஆனால் அது  பிள்ளையாருக்கு உரிய மாலை என்று எப்படி தீர்மானித்தார்? அதுதான் மகாபெரியவாளின் அருட்பார்வை

மாலையை அந்த வெள்ளிக் கவசத்திற்கு மகான் சாத்தியபோது கச்சிதமாக அந்த பிள்ளையாருக்கே அளவெடுத்து தொடுத்தது போல் அமைந்திருந்தது. மாலையுடன் அந்த வெள்ளிக் கவசத்தை தமது  திரு மார்பில் பொருத்தி வைத்துக் கொண்டு நாலா புறமும் திரும்பி திரும்பி ஸ்ரீபெரியவா தரிசனம் கொடுத்தபோது எல்லா பக்தர்களுக்கும் அது ஆனந்தமாக இருந்தது  ஆனால் ராதா ராமமூர்த்தி
என்ற பக்தைக்கு  அந்த ஆனந்தம் பன்மடங்கு அதிகமாக இருந்தது .

எங்கிருந்தோ வந்த புதுக்கோட்டை ராதா என்னும் பக்தை மனதில் மகானுக்கு அருகம்புல்  மாலையைச் சமர்பிக்க வேண்டும் என்று தோன்ற வேறொரு பக்தை அதேசமயம் வெள்ளிப்  பிள்ளையார் கவசத்தை கொண்டுவந்து மகானின் அனுக்கிரகம் பெற வந்து நிற்க, பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாதவராக இரண்டு மணி நேரம் மகான் நாடகமாட ஆனால் எல்லாம் இதற்குதான் என்று இரு பக்தைகளின் மனபூர்வமான பக்திக்கு அங்கீகாரம் அளித்தது போன்று அமைந்தது இந்த சம்பவம்.

November 29, 2011

Experience of Dr Sitalakshmi with Mahaperiyava

Dr Sitalakshmi is the head of the music department in Chennai and hails from a musical family near Tirunelveli for the past 3 generations….. She and her father has interacted so much with Him and blessed by Him. Interestingly, they have been great devotees of both Kanchi & Sringeri Mutt.

Please note that the camera movement in this episode has gone little chaotic due to multiple people talking at the same time etc. So, ignore that part and focus on the content….it is very rich….

November 29, 2011

Vedam vitta kanneer

I am sure many of you would have read this article before…..Someone forwarded this to me recently – thought I could share this with you…..It is also interesting to note another article related to Swami Gnanandhagiri Swamigal and Mahaperiyava – http://mahaperiyavaa.wordpress.com/2010/09/10/interactio-with-ramana-maharishi/

 

November 28, 2011

Respect for Vaideekas – Must Read

I can’t resist crying every time I read this article.

November 28, 2011

Experience of Echangudi Brahmasri Gowrishankar Sastrigal

Echangudi Brahmasri Gowrishankar Sastrigal is a well-learned vedic pundit and HH Mahaperiyava has interacted a lot with him. He is a great sanskrit scholar and has done Srimad Bagavatha pravachanam all his life. He has been gifted in several ways to have Periyava listening to his pravachanams…..In this video, you can appreciate his devotion to Periyava – particularly to guru anugraha that led him to such a great stage. He authoritatively declares that without that anugraha nothing can be achieved.

Shri Subramaniam, South Africa – Got your email about him yesterday and now you got 1 hour of his video – I guess your wish has been answered by Periyava!

November 26, 2011

Experience of Shri E Balasubramanian Sastrigal

November 25, 2011

Experience of Coimbatore Sri Chandrasekharan with Mahaperiyava

November 25, 2011

Dr Venkataraman’s experience with Mahaswami

November 25, 2011

Dr. Revathi Ananthasubramanian’s Experience with Mahaperiyava

November 24, 2011

Shri Bharani Mani’s experiences with Mahaperiyava

 

 

 

November 23, 2011

Videos of devotees’ experiences

Dear Readers,

I have started to post videos of several devotees’ experience with Periyava. These are amazing incidents from folks who have interacted with Periyava for a long time and absolutely a great treasure…. Please dont miss these videos….

November 23, 2011

Devotees’ Experience with Mahaswami – Video Series – Sri Subramanian

Part 1

November 21, 2011

Devotees’ Experience with Mahaswami – Video Series – Adayapalam Sri Ramakrishna Dikshitar

First video is out today! Hopefully I can quickly release other videos soon with Periyava’s blessings…

November 21, 2011

கார்த்திகை தீப தத்வம்

Ref : Arul Urai – 41, Page no 23, Vikatan Pathippakam:

கார்த்திகை பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகமும் சொல்ல வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் விதித்திருக்கிறது.

கீடாஹா:  பதங்காஹா: மசகாச்ச: வ்ருக்ஷாஹா :

ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவாஹா:!

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா

பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ராஹா:!!

‘புழுக்களோ பக்ஷிகளோ அல்லது ஒரு கொசுவஹத்தான் இருக்கட்டும். அந்தக் கொசுவோ நம் மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும் பூமியிலும் எத்தனை தினுசான ஜீவா ராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மனுஷ்யர்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராமணனோ பஞ்சமனோ எவனானாலும் சரி  எதுவானாலும் சரி இந்த தீபத்தை பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாபங்களும் நிவ்ருதியாகி இன்னொரு ஜன்ம எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்’

என்று இந்த ஸ்லோகத்திற்கு அர்த்தம்

November 20, 2011

ஞானியின் பகல் நமக்கு இரவு

மாயை என்பது ஞானிக்கு பூஜ்யம்தான்.ஆனால், ஞானம் வராத நிலையில் உள்ள ஜீவன் தன்னை ஒரு தனி எண்ணாக வைத்து பக்கத்தில் இந்த பூஜ்யத்தை சேர்த்துக்கொள்கிறான்.

ஞானியே உள்ளது உள்ளபடி பார்க்கிறான். ஒரே சர்க்கரையினால் பல பொம்மை செய்து இருக்கிறது போல் ஒரே பிரம்மம் இத்தனையும் ஆகி இருக்கிறது. சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால் விஷயம் தெரியாத குழந்தை அது கசக்கும் என்று ஓடிப் போகும். கசப்பு வச்துவாகத் தோன்றும். அதுவும் உண்மையில் மதுரமான சர்க்கரைதான்.

உலகம் எல்லாம் ஆனந்தமயமான பிரம்மம் ஒன்றே என்று ஞானி அறிவான்.நமக்கு கசப்பு அவனுக்கு இனிப்பு – நமக்கு கருப்பு அவனுக்கு வெளுப்பு. நமக்கு பகல் அவனுக்கு இருட்டு என்று கிருஷ்ணா பகவான் சொல்கிறார்.

பிரம்மம் என்றே வெளிச்சமே நமக்கு இருட்டாக இருக்கிறது.இருட்டான மாயை தான் நமக்கு வெளிச்சமாக தெரிகிறது.இதெப்படி முடியும் என்று கேட்கலாம்.

மாயையும் பிரம்மத்தை சார்ந்து அதனிடமிருந்து சிறிது பிரதிபலிப்பான ஒளி பெறுகிறது. இந்த குறைந்த ஒளிதான் ணம் குறைந்த அறிவுக்கு எட்டுகிறது.

சுமாரான வெளிச்சத்தில் தான் புஸ்தகத்தின் கருப்பு எழுத்துகள் தெரியும்.ஜொலிக்கிற சூரிய வெளிச்சத்தில் நேரே புத்தகத்தை பிரித்தால் எழுத்தே தெரியாது.

நமக்கு மாயையின் அற்பப்ரகாசத்தில் உலக காரியங்கள் தெரிகின்றன. ஞானியின் ஆத்ம பிரகாசத்தில் அவை மறைந்து போகின்றன.

ஞானியின் பகல் நமக்கு இரவு என்பதின் அர்த்தம் இதுவே.

November 20, 2011

குறைவொன்றுமில்லாத கோவிந்தா

 

சீதாதேவி ஜெயிலில் வாசம் பண்ணியது, ஜனகர் அவளை தன் பெண்ணாகவே சொந்தம் கொண்டாடிக்கொண்டு ராமன்ரை யாசகராக்கி தூது போனது, எல்லாவற்றுக்கும் மேலாக வால்மீகி அவரை இந்திரனுக்கு ஒப்பிட்டது என்பதாக ராமாவதாரத்தில் சுவாமிக்கு ஏற்பட்ட ஐந்து குறைகளை க்ரிஷ்ணவதாரத்தில் அவர் நிவ்ருத்தி பண்ணிக்கொண்டார்.

அதிலே வெளிப்பார்வைக்கு குறையே இல்லாத நிறைவு விஷயங்களாகத் தெரியும்படி இரண்டை அவர் நிவ்ருத்தி பண்ணிக் கொண்ட விசேஷம் ‘கோவிந்தா’னாக அவர் ஆனபோதே நடந்தால்தான் ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா’ என்று ஆண்டாள் பாடினாள்.

மூன்று தரம் ஒன்றை சொன்னால் அது பரமசத்யம்; அனந்தம் தடவை சொல்வதற்கு சமம். இன்றைக்கும் கோர்ட்டில் சத்ய ப்ரமாணம் பண்ணுகிறபோது மூன்று தரம் பண்ணுகிறார்கள்.

அதனால்தான் சுவாமி ஐந்து குறைகளை போக்கிகொண்டார் என்றாலும் மூன்று தரம் கோவிந்தா நாமாவை சொல்லி விட்டால் போதுமானது என்று நினைத்து ஆண்டாள் அடுத்தடுத்து மூன்று பாட்டுக்களில் ‘கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்றும் ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா!’ என்றும் ‘இற்றை பறை கொள்வானன்று காண் கோவிந்தா!’ என்றும் பாடியது.

இதிலே மத்ய மணி ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா!’ என்பது. கோவிந்தனான போதுதான் சுவாமி ரொம்பப் பெரிய குறையைப் போக்கிகொண்டார் என்பதாலும், அப்போதுதான் அவருக்குள்ளே இருந்த குறை தீர்ந்ததோடு வெளியிலேயும் இரண்டு விதத்தில் தமது பெரியவ பிரபாவத்தை காட்டினார் என்பதாலும், மற்ற மூன்று குறைகளை தீர்த்துக்கொண்டதையும் அந்த கோவிந்த நாமாவை போட்டே சொல்லவேண்டும் என்று நினைத்து அப்படிப் பாடினாள். ஆச்சர்யாள் மூன்று தரம் ‘பஜ கோவிந்தம்’ சொன்னர்போலவே மூன்று அடுத்தடுத்த பாட்டுக்களில் அந்த நாமாவை பாடினாள்.

மூன்று பாட்டிலும் குறிப்பாக கோவிந்த நாமவையே சொல்லியிருக்கிறார்கள் என்றால் அதில் ஒரு விசேஷம் இருக்கத்தானே வேண்டும்? அந்த ஒவ்வொரு பாட்டின் அர்த்தத்தோடும் மையக் கருத்தோடும் அந்த நாமாவுக்கு ஏதோ விசேஷ சம்பந்தம் இருக்கத்தானே வேண்டும்?

‘கோவிந்தன்’ என்றால் குறையில்லாத பூரணன், குறை நிறைந்த நம்மையும் பூரணமாக ஆக்குகிற கருணை வள்ளல் கோவிந்தன்.நமக்கு எல்ல நலனும் தருவான், குறைவொன்றுமில்லாத கோவிந்தன்.